விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாதவன் தமர்என்று*  வாசலில் வானவர்* 
    போதுமின் எமதுஇடம்*  புகுதுக என்றலும்*
    கீதங்கள் பாடினர்*  கின்னரர் கெருடர்கள்* 
    வேதநல் வாயவர்*  வேள்விஉள் மடுத்தே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானவர் – வருணன் இந்திரன் பிரஜாபதி ஆகிய தேவர்கள்
வாசலில் – தம்தம் ஸ்தானங்களின் வாசல்களிலே வந்து
மாதவன் தமர் என்று – ‘இவர்கள் பரமபாகவதர்கள்‘ என்று சொல்லி ஆதரித்து
போதுமின் – ‘இங்ஙனே எழுந்தருளுங்கள்!
எமது இடம் புகுதுக – எங்களது அதிகார ஸ்தலங்களிலே பிரவேசியுங்கள்

விளக்க உரை

வாசலில் வானவரென்ரது அர்ச்சிராதி மார்க்கத்திலே தலைநின்ற வருண இந்த்ர ப்ரஜாபதிகளை, அவர்கள் மதவன்தமரென்று கொண்டாடினார்களம். இவர்கள் பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயித்த அந்தப்புரபரிகர பூதர்களென்று சொல்லிக் கொண்டாடினார்களாம். போதுமின் எமதிடம் புகுதுக – ‘இங்ஙனே யெழுந்தருளவேணும், எங்களதிகாரங்களைக் கைக்கொள்ளவேணும்‘ என்று பிரார்த்தித்தார்களாம். அப்படி அவர்கள் ப்ரார்த்திக்கிறவளவிலே கின்னரர்களும், கருடர்களும் பாட்டுக்களைப் பாடினார்கள், கின்னர தேசமென்றும் கருடதேசமென்றும் அங்கே சில நாடுகளுண்டு, அந்நாடுகளிலுள்ளார் பாடினார்களென்றபடி. (வேதநல்வாயவர் வேள்வியுள்மடுத்தே) மேலுலகங்களில் வைதிகர்களாய்க்கொண்டு ஸமாராதனம் பண்ணுமவர்கள் தங்கள் ஸமாராதன பலன்களை இவர்களது திருவடிகளிலே ஸமர்ப்பித்தார்கள். முக்திக்குச் சொல்லுகிறவிவர்கள் எதையும் விரும்பாமற் சென்றாலும் தங்கள் தங்களதிகாரங்களைக் கொடுப்பாரும் பாடுவாரும் யாகபலன்களை ஸமர்ப்பிப்பாருமாய் நிற்பது அவரவர்கள் ஸத்தை பெறுவதற்காகவென்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்