திரு மூழிக்களம்

தலபுராணம்: திருமூழிக்களம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரித மகரிசி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வேண்ட, மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியை இறைவன் அம்முனிவர்க்கு வழங்கினான். எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக்களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே காலப்போக்கில் திருமூழிக்களமாயிற்று. இப்பெயரே தொன்னெடுங்காலமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது.[3] இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருமூழிக்களத்தான், அப்பன் ஸ்ரீஸுக்திநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறான். இறைவி: மதுரவேணி நாச்சியார்.தீர்த்தம்: கபில தீர்த்தம்,பூர்ண நதி ஆகியன. விமானம்:சௌந்தர்ய விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் 14 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இராமாயணத்தில் இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். இலட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு.

அமைவிடம்

பெயர்: திருமூழிக்குளம் லட்சுமணப் பெருமாள் கோயில் அமைவிடம் நாடு: இந்தியா மாநிலம்: கேரளா மாவட்டம்: எர்ணாகுளம்,

தாயார் : ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
மூலவர் : திரு மூழிக்களத்தான்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : கேரளம்
கடவுளர்கள்: லக்ஷ்மண ஸ்வாமி ,ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    1553.   
    பனி ஏய் பரங் குன்றின்*  பவளத் திரளே* 
    முனியே*  திருமூழிக்களத்து விளக்கே*
    இனியாய் தொண்டரோம்*  பருகும் இன் அமுது ஆய 
    கனியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*. 

        விளக்கம்  


    • பனி மிகுந்திருந்துள்ள இமயமலையில் திருப்பிரிதியென்னுந் திருப்பதியிலே எல்லார்க்கும் விரும்பவுரியனாய்க் கொண்டு ஸந்நிதிபண்ணி யிருக்குமவனே! என்பது முதலடியின் கருத்து. இப்பெரிய திருமொழியில் இரண்டாந் திருப்பதிகத்தில் மங்களாசாஸநஞ் செய்யப்பெற்ற திருப்பதி இது. முனியே! – மநநம் பண்ணுமவனே! என்கை. இச்சேதநர் அறிந்த போதோடு அறியாதபோதோடு வாசியற எப்போதும் இவர்களுக்கு ஹிதத்தைச் சிந்திக்குமவனே! என்றவாறு. திருமூழிக்களத்து விளக்கே! – திருமூழிக்களத்திலே வந்து உன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களுக்கு நீயேப்ரகாசகனாய்க் கொண்டு நிற்கிறவனே! என்கை திருமூழிக்களம் – மனைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றனுள் ஒன்று; நம்மாழ்வாராலும் போற்றப்பெற்ற தலம். இனியாய்! – ‘இனியான்’ என்பதன் ஈறு திரிந்தவளி. ‘இனியாய தொண்டரோம்’ என்பது வழங்கிவரும் பாடம்; அதுவியாக்கியானத்திற்குச் சேராது.


    2061.   
    பொன்ஆனாய்! பொழில்ஏழும் காவல் பூண்ட-  புகழ்ஆனாய்!*  இகழ்வாய தொண்டனேன் நான்,* 
    என்ஆனாய்? என்ஆனாய்? என்னல் அல்லால்*  என்அறிவன் ஏழையேன்,*  உலகம் ஏத்தும்- 
     
    தென்ஆனாய் வடஆனாய் குடபால் ஆனாய்*  குணபாலமதயானாய் இமையோர்க்கு என்றும்- 
    முன்ஆனாய்*  பின்ஆனார் வணங்கும் சோதி!*  திருமூழிக் களத்துஆனாய் முதல்ஆனாயே!

        விளக்கம்  


    • ளதோவிம்மண்ணின் மிசையே” “எனக்கென்னினி வேண்டுவதே” “இல்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்களிறே எம்பெருமானையுடையார் – இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க. பொழிலேழுங் காவல்பூண்ட புகழானாய் = ஏழுலகங்களையும் ஆளிட்டு ரக்ஷிக்கையன் றியே தானே முன்னின்று ரக்ஷிப்பதனால் வந்த புகழ்படைத்தவனே!. ‘காவல் பூண்ட‘ என்றதனால் காத்தல் தொழிலைத் தனக்கு ஒரு அணிகலனாகப் பூண்டிருப்பனென்கிறது. ஸ்ரீவிபீஷணாழ்வான் கடற்கரையிலே வந்து சரணம்புகுந்தபோது ஸுக்ரீவமஹாராஜர் முதலானார் இவனை ரக்ஷித்தருளலாகாதென்று தடைசெய்த விடத்தும் ஒருதலை நின்று ரக்ஷித்தே தீரும்படியான விரதம்பூண்டவனிறே எம்பெருமான். (இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாப் என்னானாப் என்னலல்லால் என்னறிவனேடையேன்?) ‘இகழ்வாய்‘ என்பதை, ‘இகழ்வு ஆய‘ என்றும் ‘இகழ் வாய‘ என்றும் பிரிக்கலாம்; அடைவே, நீசனாகிய என்றும், இகழத்தக்க வாய்மொழியை யுடையேனான என்றும் பொருள் காண்க. தண்ணீர்க்குடமெடுக்கும் தாஸியொருத்தி ஸார்வ பௌமனை ஆசைப்படுதல்போலவும் பிச்சையாண்டி பட்டாபிஷேகத்தை விரும்புதல் போலவுமன்றோ நித்யஸம்ஸாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது என்கிறார். (என் ஆனாய்! என் ஆனாய்!) ஆனை என்பது ஈறுதிரிந்த விளியாய் ‘ஆனாய்‘ என்றாயி்ற்று; ‘என்னுடைய மத்தகஜமே! என்னுடைய மத்தகஜமே!‘ என்று ஏதோ வாய் வெருவுகின்றேனத் தனையொழிய ஸாதநாநுஷ்டானமாகச் சொல்லும் முறைமை யொன்றுமறியே னென்றவாறு.


    2782.   
    உன்னிய யோகத்து உறக்கத்தை,*  ஊரகத்துள்-
    அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை,*

    என்னை மனம்கவர்ந்த ஈசனை,* -வானவர்தம்-


        விளக்கம்  


    • ஊரகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் ஸந்நிதி. இத்தலத்தில் திருமாள் உரகருபியாய் ஸேவை சாதிப்பதுபற்றி இத்திருப்பதிக்கு ஊரகம் என்று திருநாமமென்பர், உரகம் – பாம்பு வடசொல். அட்டபுயகரம் –இத்தலத் தெம்பெருமானுக்கு எட்டுத் திருக்கைகள் உள்ளது பற்றி அஷ்டபுஜன் என்று திருநாமமாய் அவன் எழுந்தருளியிருக்கின்ற கரம் – க்ருஹம் ஆதல்பற்றி அட்டபயக்ரமென வழங்கப்படும் அட்டபுயவகரம் என்பதன் மரூஉ வென்பாருமுளர். என்னை மனங்கவர்ந்த வீசனை வானவர்தம் முன்னவனை – வானவர்தம் முன்னவனென்று தேவாதிராஜனான பேரருளானப் பெருமாளைச் சொல்லுகிறதென்றும், “என்னை மணங்கவர்ந்த வீசனை“ என்கிற விசேஷணம் இவ்வர்த்தத்தை ஸ்திரப்படுத்துகின்றதென்றும் பெரியோர் கூறுவர். திருமங்கையாழ்வாருடைய மனத்தைக் பேரருளாளன் கவர்ந்தானென்னுமிடம் இவரது. பைவத்திலே காணத்தக்கது. கனவிலே காட்சிதந்து வேகவதியில் நிதியைக் காட்டித் துயர் தீர்த்த வரலாறு.


    3739.   
    எம்கானல் அகம்கழிவாய்*  இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்* 
    செங்கால மடநாராய்!*  திருமூழிக்களத்து உறையும்*
    கொங்குஆர் பூந்துழாய்முடி*  எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்* 
    நும்கால்கள் என்தலைமேல்*  கெழுமீரோ நுமரோடே.  (2)

        விளக்கம்  


    • பறவைகளைத் தூதுவிடுகிற பதிகமானாலும், ஆசாரியர்களே இங்குப் பறவைகளாகக் கருதப்படுகிறார் களென்பதை இம் முதற் பாட்டில் தெளிய வைத்தருளுகிறாராழ்வார்–"நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ அமரோடே" என்னுமீற்றடி அமைந்த அழகை என் சொல்வோம்! முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் தூது போகைக்கு வண்டுகளையழைக்கும்போதே "எம்மீசர் வண்ணோர் பிரானார் மாசில் மலடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே!" என்றார். எம்பெருமானுடைய திருவடியிணையின்கீழ்த் தம்மைச் சேர்ப்பிக்க வல்ல ஆற்றல்வாய்ந்த ஆசாரியர்களையே தூதர்களாகக் கொண்டதாய் நன்கு காட்டியருளினார். அப்படிப்பட்ட ஆசாரியர்கள் ஸபரிவாரராகத் தம் தலைமீது திருவடிகளை வைக்கப் பெறுவதே பெறாப்பேறு என்னுமிடத்தை முடிவான இத்தூதுபதிகத்திலே உயிராகவைத்து அருளிச் செய்கிறாராயிற்று. எங்கனால்–என்ற விடத்து நம்பிள்ளை வீடு பரமபோக்யமானது; – "பகவத் விஷயத்தில் உபகாரகரோடு ஐகரஸ்யம் ப்ராப்தமாயிருக்க, எம் என்றது–ஒன்றைத் தம்ம சாக்கிக் கொடுத்தல்லது தரிக்கமாட்டாத உபகாரஸ்ம்ருகியாலே சொல்லுகிறது, பிறர்க்கு உபகரிக்கைக்காக வரும் மமகாரம் உத்தேச்யமாயிருக்குமிறே. தன்னை பகவத் விஷயத்துக்கு ஆக்கினவன்றே தன்லாதடங்கலும் அங்குத்தைக்கு சேஷமாயிருக்க, உபகாரஸ்ம்ருதியிறே இப்படி சொல்லுவித்தது. ஆத்ம ஸமர்ப்பணத்துக்கும் அடி இதுவிறே" என்று, 'எம் கானல்' என்று மமகாரம் தோற்றச் சொல்லுவது ஸ்வரூபவிருத்தமல்லா வென்று சவ்வை; ஏதாவதொன்றை ஸ்வகீயமாக்கி அத்தலைக்குக் கிஞ்சித்கரித்தாகவேண்டு மென்கிற ஆசை படியாக இங்ஙனே சொன்னதாகையாலே குற்றமில்லை யென்று பரிஹாரம். அகங்கழிவாய் இரை தேர்ந்து என்றது–அந்தரங்கமாய் வந்து வர்த்திக்கிறபடியைச் சொன்னவாறு, தூதனுப்ப உங்களைத் தேடிப்பிடியாக வேண்டாதபடி அருகே வந்து வர்த்திக்கப்பெற்ற பாக்கியம் என்னே ! என்று உன்குழைந்து சொல்லுகிறபடி. ஸ்வாபதேசத்தில் ஆசாரியர்களைத் தூது விடுவதாகச் சொல்லுகையாலே, எம்பெருமானார் திருமாளிகையிலேயே வந்திருந்து ப்ரவசநம் செய்தருளின பெரிய நம்பியைப் போன்ற ஆசாரியர்களை இங்குக் கருதுவதாகக் கொள்ளலாம். செங்கால மடநாராய்! என்று கால்களை விசேஷித்துச் சொல்லுகையாலே ஆசாரியன் திருவடிகளே தஞ்ச மென்கிற அர்த்தமும் காட்டப்படுகிறது.


    3740.   
    நுமரோடும் பிரியாதே*  நீரும் நும் சேவலுமாய்* 
    அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*
    எமராலும் பழிப்புண்டு*  இங்கு என்தம்மால் இழிப்புண்டு* 
    தமரோடுஅங்கு உறைவார்க்குத்*  தக்கிலமே! கேளீரே.

        விளக்கம்  


    • திருமூழிக்களத்திலே தாமும் தாமுகந்த அடியார்களுமாயெழுந்தருளியிருக்குமிருப்பிலே நானும் வந்து அடிமை செய்யப் பெறலாகாதோ? அந்த கோஷ்டியிலே அந்வயிக்கை நான் அயோக்யனோ வென்று கேளுங்கோளென்று சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள். [நுமரோடும் பிரியாதே] மேலே எம்பெருமானைச் சொல்லுமிடத்து "தமரோடு அங்குறைவார்க்கு" என்று சொல்லுகையாலே அவன் தமரோடு கூடி வாழுகிறப்போலே நீங்கள் நுமரோடுகூடி வாழப்பெறுகிறீர்கள். அவனுடைய ஸாம்யாபத்தி உங்கள் திறத்திலே பலித்திருப்பதுபோலே என் திறத்திலும் பலிக்கவேண்டாவோ? அவன் தன் அபிமதர்களோடே கூடி வாழுகிறப்போலவும்; நீங்கள் உங்களபிமதர்களோடே கூடிவாழுகிறாப் போலவும் நானும் என்னபிதமதனோடே கூடிவாழும்படி செய்யவேண்டாவோ? என்பது குறிப்பு. 'குறைவாளர்காரியம் குறைவற்றார்க்குத் தீர்ககவேண்டாவே? உண்டார்க்கு பட்டினி கிடந்தார்பசி பரிஹரிக்க ப்ராப்தமிதே' என்பது ஈடு. மூன்றாமடியை–"அணிமுழிக்களத்துறையும் தம்மாவிழிப் புண்டு எமராலும் பழிப்புண்டு இஙகு ஏன்?" என்று அந்வயித்துப் பொருள் கொள்ள வேணும். திருமூழிக்களத்து நாயனார் யாத்ருச்சிகமாக ஒருகால் கலந்து கைவிட்டார். அதுவே ஹேதுவாக பந்துக்களும் கைவிட்டார்களென்னை? இப்படி அத்தலைவர்க்குமாகாதே உற்றாருறவினர்க்குமாகாதே கைவல்யம் போலே யிருக்கிற இவ்விருப்புக்கு என்ன ப்ரயோஜனமுண்டு? என்றபடி. தமரோடு அங்குறைவார்க்கு=எம்பெருமான் என்னையுபேக்ஷிப்பதற்கு ஹேதுவில்லை; ஆனாலும் திருமூழிக்களத்திலே தன்னை யுகந்த பர்கவதர்களோடு கூடி வாழப்பெற்ற இனியைலே என்னை மறந்திருக்கினறவத்தனை என்று காட்டுவதும் இங்கு விவக்ஷிதம். அந்தத் தமரோடே நானும் ஒருவனாகத் திருவுள்ளம்பற்ற ப்ராப்தியில்லையோ வென்று கேளுங்கள் என்றாராயிற்று.


    3741.   
    தக்கிலமே கேளீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேரும்* 
    கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!*  குளிர் மூழிக்களத்து உறையும்*
    செக்கமலத்துஅலர் போலும்*  கண்கைகால் செங்கனிவாய்* 
    அக்கமலத்துஇலைப்போலும்*  திருமேனி அடிகளுக்கே.

        விளக்கம்  


    • திருவாய்மொழியாயிரத்தினுள் அது விடுகிற பதிகங்கள் நான் கென்று சொன்னோமே; அவற்றும் ஒவ்வொரு பாட்டு உயிராக வைக்கப்படுகிறது, இப்பதிக்த்திற்கு உயிரான பாட்டு இது; கீழ்ப்பாட்டில் தமரோடு அங்குறைவார்க்கு என்று சொன்னபடி தம்மை யுகந்த பாகவதர்களோடுண்டான சேர்த்தியில் இனிமையாலே பிரிந்தார்க்கு உயிர்தரித்திருக்க வொண்ணாதபடியான தம்முடைய வடிவழகை மறந்து நம்மை நினையாதிருக்கினறாரத்தனை; இவ்வடிவழகைப் பிரிந்தார் தரிப்பரோவென்று அவ்வழகையறிவித்து விட்டால் வாராதிருக்கமாட்ரென்று கொண்டு செக்கமலத்தல்போலுங் கண்கைகால் செங்கனிவாய் அக்கமலத்திலைபோலுந் திருமேனியடிகளுக்குத் தக்கிலமே கேளீர்கள் என்றும், பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக்கை யாருக்கு–தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்றென்றுரையீரே என்றும் வடிவழகு பற்றாசாகத் தூதுவிடுகிற பதிகமிது என்று அறிவதற்கு இப்பாட்டு நிதானாமாயிருக்கும். ஆசார்யஹருதயத்தில் *தம்பிழையும் சிறந்த செல்வமும் * என்ற சூர்ணையில் *தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸெளந்தர்யத்தை யுணர்த்தும் அர்ச்சை காலாந்தூதுக்கு விஷயம் * என்பது காட்டப்பட்டிருப்பது முணர்க. தக்கிலமே கேளீர்கள் என்றதற்கு நம்பிள்ளை யீடு;– "நாம் ஒன்றிலே துணியும்படி அறுதியாகக் கேட்டுப் போருங்கோள். அவர் இன்னும் இதுவேணுமென்றிருந்தாராகில் ப்ராணன்களை வருந்தி நோக்கிக் கொண்டு கிடக்கவும், வேண்டாவென்றிருந்தாராகில் நரமுமொன்றிலே துணியும்படி அறுதியாகக் கேட்டு விடுங்கோள" என்று. அதாவது, இரண்டத்தொன்று கேட்டு வந்து சொல்லுங்கோள்; இத்தலையில் அவர்க்கு அபேக்ஷையுளதென்று தெரியவந்தால் வருந்தியாகிலும் பிராணனைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறேன்; அவர்க்கு அபேக்ஷைபில்லை, உபேக்ஷைதான் என்று தெரிய வந்தால் வேண்யுத்க்ரதனத்திலே நுணிந்த பிராட்டியைப்போலே ஏதோவொரு வழியிலே துணிகிறேன் என்றவாறு. கொக்னிங்காள் குருகினங்காள்–குருகு என்பது கொக்கிலே ஒரு ஜாதி பேதம், குருகு–கொய்யடிநாரை என்பர். [அக்கமலத் திலைபோலுந் திருமேனி] கீழ் எட்டாம் பத்தில் சாயல் சாமத் திருமேனி தண்பாசடையா *என்றதையும் இங்கு நினைப்பது–தம் பத்மதளபத்ராக்ஷம் * என்ற ஸ்ரீராமாயண ச்லோகத்தை நிர்வஹிக்குமிடத்து இப்பாசுரம் உதவியாகும். எங்ஙனேயென்னில்; பத்ரம் என்றாலும் நம் என்றாலும் பர்யாயமாயிருக்க தளபத்ராக்ஷம் என்றது பொருந்துமோ வென்று சிலர் சங்கிப்பர்கள்; அதற்கு ஸமாதானமாவது, *அக்ஷமிந்த்ரிகாயயோ * என்ற நிகண்டின்படி அக்ஷசப்தமானது கண்ணையும் மேனியையும் சொல்லக் கடவதாகையாலே (இரண்டுற மொழிதலால்) அவ்விரண்டு பொருளையும் இங்குக் கொண்டு பத்மதளம் போன்ற அக்ஷத்தையுடையவர்–தாமரையிதழ் போன்று நீண்டழகிய திருக்கண்களை யுடையுவர்; பத்மபத்ரம் போன்ற அக்ஷத்தையுடையவர்–தாமரையிலை போன்று பசுமையான திருமேனியையுடையவர் என்று நிர்வஹிப்பதாம். எம்பெருமானது திருமேனிக்குத் தாமரையிலையை யொப்பாகச் சொல்லுவதற்கு இப்பாசுரம் ப்ரமாணமென்க.


    3742.   
    திருமேனி அடிகளுக்குத்*  தீவினையேன் விடுதூதாய்* 
    திருமூழிக்களம் என்னும்*  செழுநகர்வாய் அணிமுகில்காள்*
    திருமேனி அவட்குஅருளீர்*  என்றக்கால் உம்மைத்தன்* 
    திருமேனி ஒளிஅகற்றி*  தெளிவிசும்பு கடியுமே?   

        விளக்கம்  


    • சில மேகங்களை நோக்கி 'என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் உங்களுக்கு ஏதேனும் தண்டனை நேருமோ?' என்கிறாள். எம்பெருமானுக்குத் திருமேனி யடிகளென்ற ஒரு திருநாமஞ் சாத்துகிறாராயிற்று ஆழ்வார். வடிவழகையே நிரூபகமாகக் கொண்ட ஸர்வஸ்வாமி யென்று பொருள். ஸ்வரூபகுண சேஷ்டிதங்களினால் ஜகத்தையடையத் தோற்பிக்குமது ஒருபுறமிக்க, வடிவழகாலே தோற்பித்து அடிமை கொள்வது தலையாயிருக்கையாலே திருமேனியடிகள் என்கிறார். "அவசா ப்ரதிபேதிரே என்கிறபடியே ப்ரதிகூலர்க்கும் ஆகர்ஷகமாயிறே வடிவிருப்பது" என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. கண்ணபிரான் பாண்டவ தூதனாய்த் துரியோதனனிட மெழுந்தருள, அக்கண்ணன் வருகையையறிந்த துரியோதனன் 'கண்ணனுக்கு ஒருவரு மெழுந்து மரியாதை செய்யலாகாது' என்று உறுதியாய் நியமித்துத் தானும் ஸபையிலே உறுதியுடமிருக்க, கண்ணபிரான் அங்நேற வெழுந்தருளின வளவிலே, ஸபையிலிருந்த அரசர்களனைவரும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவின் சோதியைக் கண்டு பரவசராயெழுந்துவிட, துரியோதனன் தானும் துடை நடுங்கி யெழுந்திருந்துவிட்டு, உடனே 'ஐயோ! நம் உறுதி தடுமாறி விட்டதே ! ஒரு மரியாதையும் செய்யக்கூடாதென்றிருந்த வுறுதி குலைந்து மரியாதை செய்யும்படியாகச் செய்துவிட்டதே இந்தத் திருமேனி யழகு !' என்று கண்ணனையுற்று நோக்கினானாம். இதனைப் பெரியாவாரருளிச் செய்கிறார். சுழல் மன்னர் சூழக்கதிர்போல் விளங்கி யெழலுற்று மீண்டேயிருந்துன்னை நோக்கும் சூழலைப் பெரிதுடைத்துச் சோதனன் என்று. தீவினையேன் விடுதூதாய்="திருமேனியடிகள்" என்று என்னாலே பேரிடப்பெற்ற அவருடைய திருமேனி ஸர்வ ஸாதாரணமானது; எனக்கு அஸாதாரணமாயுமிருந்தது ; அப்படிப்பட்ட திருமேனியை யிழந்து உங்கள் காலிலே விழவேண்டும்படியான பாபத்தைப் பண்ணினேனேயென்று தீவினையேன் என்கிறாள் ; எதிர்மறையிலக்கணையால் நல்வினையேன் என்றபடி ; பாகவதர்களின் திருவடிகளியேல விழப்பெறுகை நல்வினைப் பயனன்றோ. நான் விட்ட தூதாய் நீங்கள் திருமூழிக்களத்தேறச் சென்று அத்திருமேனி யடிகளை நோக்கி திருப்புளியடியிலே கிடக்கிற வொருத்தி உம்முடைய திருமேனியிலே ஆசைவைத்து கைகின்றாள்; அவளுக்கு உமது திருமேனியைக் கொடுத்தருளீர் என்று சொல்லுங்கோள்; இந்த வொருவாய்ச சொல்லுக்கும் துர்ப்பிக்ஷமுண்டோ? இப்படி வாக்குதவி புரிந்தால், உம்மைத் திருமேனி யொளிசுற்றித் தெளிவிசும்புகடியுமே?=உங்கள் வடிவிற் புகரையும் போக்கி நில்மலமான ஆகாசத்தில் நின்றும் உங்களை யோட்டி விடுவிரோ? உங்களுக்குப்ப பண்டில்லாத புகரையும் உண்டாக்குவரே யல்லது உள்ள புகரைக் கொள்ளை கொள்ள மாட்டார் என்கிறாள்.


    3744.   
    தூதுஉரைத்தல் செப்புமின்கள்*  தூமொழிவாய் வண்டுஇனங்காள்*  
    போதுஇரைத்து மதுநுகரும்*  பொழில் மூழிக்களத்துஉறையும்* 
    மாதரைத்தம் மார்வகத்தே*  வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*  
    தூதுஉரைத்தல் செப்புதிரேல்*  சுடர்வளையும் கலையுமே.

        விளக்கம்  


    • சில வண்டுகளைக் குறித்துச் சொல்லுகிறாள்–எம்பெருமான் பகலிலே சென்று விண்ணப்பஞ்செய்யுமிடத்து உங்கள் வார்த்தை விலைச் செல்லும்படி பிராட்டி ஸன்னதியிலே வைத்துச் சொல்லுங்கோள் என்று. 'தூதுரைத்து மறுமாற்றம் கொண்டு வாருங்கள்' என்னாமல் "தூதுரைத்தல் செப்புமின்கள்" என்று இவ்வளவே சொல்லுகையாலே "என்" தூதவாக்யத்தையறிவித்தால் போதும், "ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதேயென்றிருப்பவர்க்கு இவ்வளவே போதும்" என்று காட்டப்பட்டதாம் தூமொழிவாய் வண்டினங்காள் ! =இனிய பேச்சாலே எம்பெருமானையும் வசப்படுத்திக் கொள்ள வல்லவர்கள் ஆசார்யர்கள் என்பது காட்டப்பட்டது. எம்பெருமானுறையும் திருமூழிக்களம் எப்படிப்பட்டதென்ன, போதிரைத்து மது நுகரும்பொழில்களை யுடையது என்கிறார்; புஷ்பவிகாஸதசையில் ஹர்ஷத்தாலே கோலாஹலம் பண்ணிக் கொண்டு உங்களுக்கு மதுபானம் பண்ணலாம்படியான சோலைகளையுடையது என்றபடி. என் காரியத்திற்காகவே நீங்கள் போகவேண்டா; போமிடத்தில் உங்கள், காரியமும் ஸித்திக்குமென்று காட்டுகிறவிதனால்–ஆசாரியர்களுக்கு சிஷ்யோஜ்ஜீவனக்ருத்யம் ஸ்வார்த்தமேயொழிய பரார்த்தமன்று என்பது காட்டப்பட்டதாம். மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு=நீங்கள் சொல்லுமளவே வேண்டுவது; உங்கள் வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருக்கவும், கேட்டுக் கொண்டாடுகைக்கும் அருகே புருஷகாரஸம்பத்தில் குறையில்லை யென்றடி. தூதுரைத்தல்செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே=இதற்கு இரண்டு படியாகப் பொருள் நிர்வஹிப்பர்; நீங்கள் தூதுவிண்ணப்பம் செய்வதானால் எது விஷயமாகச் சொல்ல வேணும் தெரியுமோ? என்னுடைய கைவளையையும் சேலையையும் பற்றிச் சொல்லுங்கோள்– இவை சிதிலமானபடியைச் சொல்லுங்கோள் என்பதாக வொரு நிர்வாணம். நீங்கள் தூது சொன்ன மாத்திரத்திலே எனக்குக் கைவளையும் சேலையும் ஆம்–நான் பேறு பெற்றேனாவேன் என்பதாக மற்றொரு நிர்வாஹம்.


    3745.   
    சுடர்வளையும் கலையும்கொண்டு*  அருவினையேன் தோள்துறந்த*  
    படர்புகழான்*  திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்* 
    சுடர்பவள வாயனைக்கண்டு*  ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*  
    படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!*  எனக்கு ஒன்று பணியீரே. 

        விளக்கம்  


    • சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்–எம் பெருமானைக்கண்டு, நீர் சிலரோடே கலந்து அவர்களைத் துறந்து அதுவே புகழாக வீற்றிருக்குமிவ்விருப்பு தருமோமென்று சொல்லுங்கோள் என்கிறாள். சுடர் வளையுங்கலையுங்கொண்டு அருவினையேன் தோற்துறந்த படர்புகழான் என்கையாலே – அடியார்களை இப்பாடு படுத்துவதையே தனக்குப் பெரும்புகழாக நினைத்திருப்பவர் என்றதாகிறது. தன்பாலீடுபட்டவர்களை மற்றொன்றுக்கு ஆகாதபடியாக்கிக் கொள்ளுகைதானே எம்பெருமானுக்குப் படர்புகழ். இப்புகழோடே திருமூழிக்களத்திலுறையும் பெருமான் பங்கயக்கண்சுடர் பவளவாயன்–இவ்வழகையநுபவித்தவன் பிரிந்து ஆறியிருப்பளோவென்று சொல்ல வேணுமென்பது கருத்து.


    3746.   
    எனக்குஒன்று பணியீர்கள்*  இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*  
    மனக்குஇன்பம் படமேவும்*  வண்டுஇனங்காள்! தும்பிகாள்* 
    கனக்கொள் திண்மதிள்புடைசூழ்*  திருமூழிக் களத்துஉறையும்*  
    புனக்கொள் காயாமேனிப்*  பூந்துழாய் முடியார்க்கே.

        விளக்கம்  


    • அவருடைய வடிவழகுக்கு என்ன அபாயம் நேருகிறதோவென்று அஞ்ச வேண்டாதபடி. ஸீரக்ஷிதாமாக வொரு திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருந்தார்; இனி நம்முடைய ஆர்த்தி தீர்க்குமத்தனையே வேண்டுவது; ஆன பின்பு என்னுடைய ஆர்த்தியை அறிவியுங்கோளென்று சில வண்டுகளையும் தும்பிகளையுங்குறித்துச் சொல்லுகிறான். ஆறாயிரப்படி காண்மின்; – "வண்டினங்காள் தும்பிகாள்! உன்னழகைக் காணப்பெறாதே அவளிழந்துபோமித்தனையோ வென்று சொல்லிகோளென்கிறான்" என்று. எனக்கு ஒன்று பணியீர்கள்=அத்தலையில் சென்று எனக்காக வொருவார்த்தை சொல்லுங்கோள; நீங்கள் ஒரு வார்த்தை சொல்லாவிடில் முடியும்படியான நிலைமையன்றோ என்னுடையது, [இரும்பொழில்வாய் இத்யாதி] நீங்கள் மாத்திரம் இன்புற்றிருந்தால் போதுமோ? பிறரை வாழ்விப்பதன்றோ உங்களுடைய வாழ்ச்சி. மனக்கு–மனத்துக்கு; அத்துச்சாரியை பெறாதசொல். யாரிடத்திற்சென்று என்ன வார்த்தை சொல்லவேணு மென்ன; [கனக்கொள் இத்யாதி] கனத்துத் திண்ணிய மதிள்சூழ்ந்த திருமூழிக்கனத்திலே ரக்ஷணத்திற்குத் தனிமாலையிட்டிருக்கும் பெருமானுடைய புனக்கொள் காயாமேனியிலே[வடிவழகிலே] எனக்குள்ள விருப்பத்தைச் சொல்லுங்கோளென்றபடி.


    3747.   
    பூந்துழாய் முடியார்க்கு*  பொன்ஆழிக் கையாருக்கு* 
    ஏந்துநீர் இளம்குருகே!*  திருமூழிக்களத்தாருக்கு*
    ஏந்துபூண் முலைபயந்து*  என்இணைமலர்க்கண் நீர்ததும்ப* 
    தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்*  தகவுஅன்றுஎன்று உரையீரே   

        விளக்கம்  


    • எம்பெருமானுடைய வடிவழகுதான் நினைக்க நினைக்க ஆழ்வாரை யுருக்குகின்றதென்னுமிடம் நன்கு தெரிவிக்கப்படுகிறது இப்பாட்டில். "தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரை" எனகிற [ஈற்றடி] வார்த்தை மிகவியத்தக்கது; எம்பெருமான் என்னைவிட்டுப் பிரிந்து போம்போது தன்னுடைய திருமேனியை இங்கு வைத்திட்டன்றோ போயிருக்கவேண்டும்; அந்தத் திருமேனியையுங்கொண்டு அகன்று போனாரே, இது தகவேலவென்று கேளுங்கோளென்று குருகினங்களை நோக்கிக் கூறுகின்றாள். உலகில் விநோதமாகப் பேசுகிறவர்கள் "நடந்தால் உடலும் கூடக்கூட வருகிறது, இதுதான் எனக்குப்பெரிய வியாதி" என்று சொலுவதுண்டு ; இதுவொரு ஹாதஸ்பவசன்மாகக் கொள்ளப்படுகிறது. இந்த முறையில்தானுள்ளது இங்கு ஆழ்வாருடைய வாசகமும். 'தாம் போகவேணுமானால் தம்மை வைத்துவிட்டுப் போகவேண்டாவோ' என்கிற இவ்வார்த்தையின் கருத்து இவ்வளவே–அவர் இறைப்பொழுதும் பிரிந்துபோகவேதகாது என்பதாம்; அவருடைய பிரிவு ஆற்றவொண்ணாததென்பதை முதலடியால் முதலிக்கிறார்; பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு=அவர் திருமுடியிலே திருத்துழாய் மாலை சாத்திக்கொண்டிருக்குமழகு ஒன்றுபோதுமே; அதற்குமேல் கையுந்திருவாழியுமானவழகு "சுடராழியும் பல்லாண்டு" என்று ஆலத்திவழிக்க வேண்டும்படியன்றோவுள்ளது; இவ்வழகுகளை நினைத்தன்றோ நான் வைவர்ணியமடைந்தும் கண்ணீர் சோர்ந்தும் நிற்பது; இந்நிலையைச் சென்று சொல்லவேணுமென்றாளாயிற்று.


    3748.   
    தகவுஅன்றுஎன்று உரையீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேர்ந்து* 
    மிகஇன்பம் படமேவும்*  மேல்நடைய அன்னங்காள்*
    மிகமேனி மெலிவுஎய்தி*  மேகலையும் ஈடுஅழிந்து*  என் 
    அகமேனி ஒழியாமே*  திருமூழிக் களத்தார்க்கே.

        விளக்கம்  


    • நான் முடிவதற்கு முன்னே என்னிலைமையைத் திருமூழிக்களத்தெம்பெருமானுக்கு உரையீரென்று சில அன்னங்களையிரக்கிறாள். தகவன்றென்று உரையீர்கள்–மருமதத்தில் பொற்றும்படியான வார்த்தை இதுதானென்று ஆழ்வார் திருவுள்ளம். கருணையையே நிரூபகமாகக் கொண்டு அருளாளனென்றும் பேரருளாளனென்றும் விருதுசுமந்து திரிகிற அவர்க்குக் கருணையில்லை யென்னுங்கோ ளென்கிறாள். 'தகஜவ இல்லை' என்னாதே 'தகவு அன்று ' என்கையாலே–அவரிடத்திலே கருணை இல்லை யென்னப்போகாது; கடலில் நீர் வற்றிற்று என்னவொண்ணாதப்பாலே அருட்கடலான அவரிடத்திலே கருணைவற்றிற்று என்னலாகாது; நீர் செய்வது கருணையின் காரியமன்று என்னுங்கோள்–என்கிறாளென்றுங் கொள்ளலாம். எந்த அன்னங்களைக் குறித்துச் சொல்லுகிறோளோ அந்த அன்னங்களை "தடம் புனல் வாயிரைதேர்ந்து மிகவின்பம்படமேவும் மென்னடைய" என்று விசேஷிக்கிறாள். இதனால் மஹாசாரியர்களே இங்கு அன்னமாக விளிக்கப்படுகிறார்களென்பது தெரியவரும். தங்களுக்குப் பரம போக்யமான அர்த்தங்களைத் தேடுவதிலேயே நோக்குடையவர்களும் அதுவே பேரின்பமாக விருப்பவர்களும் நல்ல நடத்தையை யுடையவர்களுமாயிருப்பவர்களை விளித்தபடி. தன்னுடைய இருப்பைச் சொல்லுகிறாள் மூன்றாமடியில்; உடம்புமிக மெலிந்து அரையில் துணியும் தங்காதபடியன்றோ நானிருப்பது. என் அகமேனியொழியாமே–இதற்கு 'உரையீர்கள்' என்பதனோடே அந்வயம். 'என் அகமேனியொழியாதே யீர்கள்' –அவனுக்கு அந்தரங்கரீரமாயிருக்கிற நான் வழிவதற்கு முன்னே உரையீர்கள் என்றபடி,. ஸகலாத்மாக்களும் எம்பெருமானுக்கு வீரமாயிரக்கச் செய்தேயும். ஆழ்வார் விசேஷித்து அவனுக்கு அந்தரங்காரீரமாகையாலே அகமெனி எனப்பட்டது. என் அகமேனி யென்றது–அப்பெருமானுக்கு அந்தரங்கரீரமாயிருக்கின்ற என்னாத்ம ஸ்வரூபம் என்றபடி.


    3749.   
    ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்*  ஒண்சுடரை* 
    ஒழிவுஇல்லா அணிமழலைக்*  கிளிமொழியாள் அலற்றியசொல்* 
    வழுஇல்லா வண்குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்துஉரைத்த*  
    அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்*  நோய் அறுக்குமே   (2) 

        விளக்கம்  


    • இத்திருவாய்மொழியானது தன்னைப்பயிலுமவர்கட்கு பகவத்விச்லேஷ ஹேலுவான ஸம்ஸார வியாதியையறுக்கு மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். திருமூழிக்களத்து ஒழிவின்றியையும் ஒண்சுடரை=எம்பெருமான் ராமகிருஷ்ண யவதாரங்கள் பண்ணியிருந்து ஒரு காலவிசேஷத்திலே தன்னடிச் சோதிக்கு எழுந்தருளியாகிறது. அர்ச்சாவதாரம் அப்படியன்றே. 'ஸம்ஸாரம் கிழங்கெடுத்தலல்லது பேரேன்' என்றிருக்குமிருப்பாகையாலே அழிவின்றியுறையு மென்கிறது. திருநாட்டில் விளங்கப்பெறாத திருக்குணங்களும் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது இங்கே யாதலால் ஒண்சுடரை என்றது. இரண்டாமடியில் அணிமழலைக் கிளிமொழியாள் என்றது ஆழ்வார் தம்மையன்று எம்பெருமானைப் பிரிவில் தரிக்கமாட்டாத ஸ்வபாவையாயிருப்பாளொரு பிராட்டி அவனைப் பிரிந்து அவற்றின பாசுரத்தாலே, தத்ஸத்ருசஸ்வபாவரான வண்குருகூர்ச்சடகோபன் எம்பெருமானைப் பிரிந்தலற்றின இப்பத்து என்பது ஆறாயிரப்படிய்ருளிச் செயல்.