விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திகழும்தன் திருவருள் செய்து*  உலகத்தார்- 
    புகழும் புகழ்*  தானதுகாட்டித் தந்து என்உள்-
    திகழும்*  மணிக்குன்றம்ஒன்றே ஒத்துநின்றான்* 
    புகழும் புகழ்*  மற்றுஎனக்கும் ஓர்பொருளே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திகழும் தன் திரு அருள் செய்து - மிகப்பொலிகின்ற தன் திருவருளைப்பண்ணி
உலகத்தார் புகழும் புகழ் அது தான் காட்டி தந்து - லோகத்தார் இதுகண்டு புகழுகிற அப்புகழையும் பிரபலப்படுத்தி
என்னுள் திகழும் மணி குன்றம் - என்னுள்ளே, விளங்கரநின்றதொரு மாணிக்க மலைபோலே நின்றான்,
எனக்கு மற்று புகழும் புகழ் ஓர் பொருளே - எனக்கு இந்நிலையொழிய வேறு விதமாக அவனைப் புகழ்வதும் ஒரு பொருளோ.

விளக்க உரை

“தேசந் திகழுந்தன் திருவருள் செய்தே“ என்று கீழ்ப்பாட்டிலருளிச்செய்த்தை இதில் விவரித்தருளுகிறார். (திகழுந்தன் திருவருள்செய்து) உலகத்திலும் சிலர் சிலரிடத்தே அருள் செய்வதுண்டு, அதுதான் ஓரளவிலே நின்றிருக்குமே, என்பால் எம்பெருமான் செய்தவருள் இரண்டு தலைக்கும் நிறமாம்படியமைந்தது, அதாவது –இன்னானுக்கருள் செய்தோமென்று அவனும் பெருமைபொங்கி, “இவ்வருளுக்கு நாமிலக்காககப் பொற்றோமே! என்று நானும் பெருமைபொங்கி நிற்கை. ஆக இப்படிப்பட்ட மஹாக்ருபையைச் செய்ததனாலே என்னுடைய பேற்றைக் குறித்து உலகத்தார் செய்யும் புகழ்ச்சியைத் தான் காட்டித்தந்தான். அதாவது -* எதற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் * என்றும், * என்னில் மிகுபுகழார் யாவரே? பின்னையும் மற்றெண்ணில் மிகுபுகழேன்யானல்லால் * என்றும் * பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் * என்றும் என் வாயில் வரும்படி பண்ணிவைத்தானென்கை. என்னுள் திகழுமணிக்குன்றமொன்றே யோத்து நின்றான் –பளபளவென்று விளங்காநின்றதொரு நீல மலைபோலே என்னுள்ளேவந்து புகுந்து நிலைப்பெற்றுக் கால்வாங்கிப் போகமாட்டாதே யிராநின்றான். புகழும் புகழ் மற்றெனக்குமோர்பொருளே – என்னுள்ளேநின்றாருளாகையாகிற இந்த மஹா குணத்தையல்லது மற்றுள்ள புகழை ஒரு புகழாக மதிக்கமாட்டேனென்கை.

English Translation

The radiant Lord is praised by all the worlds, like a radiant mountain gem, he came and stood in my heart does anything else matter now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்