விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூறாய்  நீறு ஆய் நிலன் ஆகி*  கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,* 
    சீறா எரியும் திரு நேமி வலவா!*  தெய்வக் கோமானே,* 
    சேறார்  சுனைத் தாமரை செந்தீ மலரும்*  திருவேங்கடத்தானே,* 
    ஆறா அன்பில் அடியேன்*  உன் அடிசேர் வண்ணம் அருளாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொடு வல அசுரர் குலம் எல்லாம் - மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம்
கூறு ஆய் - பலபல கண்டங்களாகி
நீறு ஆய் - சாம்பலாகி
நிலன் ஆகி - தரைப்பட்டிருக்கச் செய்தேயும்
சீறா - பின்னையும் சீறி

விளக்க உரை

கொடிய வலிய அசுரர் கூட்ட முழுதும் கூறு கூறு ஆகிச் சாம்பலாகி மண்ணோடு மண்ணாகும்படியாகச் சீறி, ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற அழகிய சக்கரத்தை வலக்கையில் தரித்திருப்பவனே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சேறு பொருந்திய சுனைகளிலே தாமரை மலர்கள் சிவந்த நெருப்பினைப்போன்று மலர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! குறைவுபடாத அன்பினையுடைய அடியேன் உனது திருவடிகளைச் சேரும்படி திருவருள் புரியவேண்டும்.

English Translation

O Lord of celestials bearing a fierce discus in hand that cuts, pulverises and grinds to dust the wicked Asura-clans! O Lord of Venkatam with water-tanks that brim with lotuses like fire! Grace that this love-brimming servant joins you lotus test.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்