- முகப்பு
- வைணவ மலர்
- வாழி திருநாமம்
வாழி திருநாமம்
மண்ணுலகத் துள்ளோர்கள் மகிழ்ந்துவாழ
-- மணவாள மாமுனிகளருள் தன்னாலே
பண்ணருளிச் செயல்விளக்கம் வாழிநாமம்
-- பத்தியுடனிவ் வுலகிற்பயில் வார்கேட்பார்
விண்ணுலகத் தோர்களினுங் கீர்த்தியுற்று
-- விளங்கியிட மெய்ஞ்ஞான வாழ்வுபெற்றே
கண்ணனடி யார்களுடன் கலந்துநாளும்
-- காசினியிற் சதிராகவாழ் வார்தாமே.ஆரண நான்கின் பொருளை ஆழ்வார்கள் ஆய்ந்து அடைவே
-- யன்புடனே யம்புவியோர் அனைவரும் ஈடேற வென்று
நாரணனார் தாள்களிலே நாலாயிரம் தமிழால்
-- நண்ணி யுரை செய்தவற்றை நாடி வகை தொகை செய்தாய்
பூரண மா ஞானியர் சேர் பொங்கு புகழ்த் தூப்புல் வரும்
-- புனிதன் என்றும் பிள்ளை என்றும் புவியர் புகழ் வேங்கடவா
தாரணியோர் இங்கு உகக்கச் சாற்றிய நற் பிரபந்த சாரம்
-- தனை யுரைத்து வாழு மனம் தந்து அருளாய் என் தனக்கே –1–வேதத்தின் நுண்பொருளைத் தமிழால் நாளும்
-- விளக்கியிடப் பன்னிருவர் வந்து தோன்றும்
மாதத்தை அவரவர்க ளுதித்த நாளை
-- வாழ்பதியைக் கலைத்தொகையை மனதில் வைத்துப்
போதத்தைத் தருந்தமிழால் வாழி நாமம்
-- பூதலத்திற் பேசுகின்றே னிதனைக் கற்பார்
பாதத்தை யென்முடிமேல் அணியாப் பூண்டு
-- பன்னாளுங் கைகூப்பிப் பணிவேன் யானேஆதி மறை யோதி மகிழ அயக்கிரிவர் தம் அருளால்
-- அன்புடனே தூப்புல் நகர் அவதரித்தே இங்கு வந்த
வாதியரை வென்று உவந்து வன் புவி மேல் எதிராசர்
-- வாழ்வுறு நல் தரிசனத்தை வண்மை யுடனே வளர்த்து
நீதி நெறி தவறாமல் நிறுத்தியிடும் வேங்கடவா
-- நேசமுடன் ஆழ்வார்கள் நிலைகளை எல்லாம் உணர்ந்து
சாது சனம் வாழ என்று சாற்றிய நற் பிரபந்த சாரம்
-- தனை யுரைத்து வாழும் மனம் தந்து அருளாய் என் தனக்கே –2-போதமிகும் பொய்கையார் பூதத்தார் வாழியே
புகழ்பேயார் மழிசையர்கோன் புத்தூரன் வாழியே
நாதமுனி தொழுங்குருகை நாவீறன் வாழியே
நற்பாணன் கொல்லிநகர் நாதனார் வாழியே
ஆதரிக்குந் தொண்டரடிப்பொடி தாள்கள் வாழியே
அருட்கலியன் மதுரகவி யாண்டாளும் வாழியே
ஏதமற்ற நாலாயிரப் பனுவல் வாழியே
இவருதித்த நாள்மாத மெழிற்பதியும் வாழியே.3)
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து
4)
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு
5)
அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள்
இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த
மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய
ஈதென்று சொல்லுவோமி யாம்.ஆழ்வார்கள் அவதரித்த நாளூர் திங்கள்
-- அடைவு திரு நாமங்கள் அவர் தாம் செய்த
வாழ்வான திரு மொழிகள் அவற்றுள் பாட்டின்
-- வகையான தொகை இலக்கம் மற்றும் எல்லாம்
வீழ்வாக மேதினி மேல் விளங்க நாளும்
-- விரித்து உரைக்கும் கருத்துடனே மிக்கோர் தங்கள்
நீள் பாதம் நிரந்தரமும் தொழுது வாழ்த்து
-- நேசமுடன் அடியேன் தன் நெஞ்சு தானே –1–- [1]"செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியேதிருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியேவையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியேவனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியேவெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியேவேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியேபொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியேபொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே"
- "6)ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவைஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்தேசுடனே தோன்று பிறப்பால்7)மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்துநற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்குநின்றது உலகத்தே நிகழ்ந்து(முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்ஓங்குமுறை யூர்பாண னூர். (30)(பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)"
- "அருள் மிகுந்ததொரு வடிவாய்க் கச்சி தன்னில்-- ஐப்பசி மாதத் திரு வோணத்து நாளில்பொருள் மிகுந்த மறை விளங்கப் புவியோர் உய்யப்-- பொய்கை தனில் வந்து உதித்த புனிதா முன்னாள்இருள் அதனில் தண் கோவல் இடைகழிச் சென்று-- இருவருடன் நிற்கவும் மால் இடை நெருக்கத்திரு விளக்காம் எனும் வையம் தகளி நூறும்-- செழும் பொருளா வெனக்கு அருள் செய் திருந்த நீயே –2-"
- "அன்பே தகளிநூறும் அருளினான் வாழியேஐப்பசியி லவிட்டத்தி லவதரித்தான் வாழியேநன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியேநல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியேஇன்புருகு சிந்தைதிரி யிட்டபிரான் வாழியேஎழின்ஞானச் சுடர்விளக்கை யேற்றினான் வாழியேபொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியேபூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே. (2)"
- "6)ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவைஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்தேசுடனே தோன்று பிறப்பால்7)மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்துநற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்குநின்றது உலகத்தே நிகழ்ந்து(முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்ஓங்குமுறை யூர்பாண னூர். (30)(பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)"
- "கடல் மல்லைக் காவலனே பூத வேந்தே-- காசினி மேல் ஐப்பசியில் அவிட்ட நாள் வந்துஇடர் கடியும் தண் கோவல் இடை கழிச் சென்று-- இணையில்லா மூவருமாய் இசைந்தே நிற்கநடுவில் இவர் ஒருவரும் என்று அறியா வண்ணம்-- நள்ளிருளில் மால் நெருக்க நந்தா ஞானச்சுடர் விளக்கு ஏற்றி யன்பே தகளியான-- தொடை நூறும் எனக்கு அருள் துலங்க நீயே –3-"
- "திருக்கண்டே னெனநூறுஞ் செப்பினான் வாழியேசிறந்தஐப் பசிசதயம் செனித்தவள்ளல் வாழியேமருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியேமலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியேநெருங்கிடவே யிடைகழியில் நின்றசெல்வன் வாழியேநேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன் வாழியேபெருக்கமுடன் திருமழிசைப் பிரான்தொழுவோன் வாழியேபேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே. (3)"
- "6)ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவைஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்தேசுடனே தோன்று பிறப்பால்7)மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்துநற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்குநின்றது உலகத்தே நிகழ்ந்து(முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்ஓங்குமுறை யூர்பாண னூர். (30)(பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)"
- "மா மயிலைப் பதி யதனில் துலா மாதத்தில்-- அரும் சதயத்து வவதரித்துக் கோவலூரில்தூ முனிவர் இருவருடன் துலங்க நின்று-- துன்னிய பேர் இருள் நீங்கச் சோதி தோன்றச்சேமமுடன் நெடுமாலைக் காணப் புக்குத்-- திருக் கண்டேன் என வுரைத்த தேவே யுன் தனபா மருவு தமிழ் மாலை நூறு பாட்டும்-- பழ வடியேன் எனக்கு அருள் செய் பரம நீயே –4-"
- "அன்புடனந்தாதி தொண்ணூற் றாறுரைத்தான் வாழியேஅழகாருந் திருமழிசை யமர்ந்தசெல்வன் வாழியேஇன்பமிகு தையில்மகத் திங்குதித்தான் வாழியேஎழிற்சந்த விருத்தம்நூற் றிருபதீந்தான் வாழியேமுன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியேமுழுப்பெரு்ககில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியேநன்புவியில் நாலாயிரத் தெழுநூற்றான் வாழியேநங்கள் பத்திசாரனிரு நற்பதங்கள் வாழியே. (4)"
- "12)தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் - துய்யமதிபெற்ற மழிசை பிரான் பிறந்த நாளென்றுநற்றவர்கள் கொண்டாடும் நாள்(திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார்)மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர்மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்- நன்னெறியோர்ஏய்ந்தபத்தி சார ரெழில்மாறன் பட்டர்பிரான்வாய்ந்துதித் தவூர்கள் வகை. (32)(திருமழிசையாழ்வார்- திருமழிசை: நம்மாழ்வார்- திருக்குருகூர்: பெரியாழ்வார்- திருவில்லிபுத்தூர்.)"
- "தைம்மகத்தில் வரு மழிசைப் பரனே மற்றைச்-- சமயங்கள் பல தெரிந்து மாயோன் அல்லால்தெய்வம் மாற்றி இல்லை என வுரைத்த வேதச்-- செழும் பொருள் நான்முகன் தொண்ணூற்றாறு பாட்டுமெய்ம்மிகுத்த திருச் சந்த விருத்தப் பாடல்-- விளங்கிய நூற்று இருபதும் தப்பாமல் மெய்யேவையகத்து மறவாமல் உரைத்து வாழும்-- வகை யடியேனுக்கு அருள் செய் மகிழ்ந்து நீயே -5-"
- "ஆனதிரு விருத்தநூறும் அருளினான் வாழியேஆசிரிய மேழுபாட் டளித்த பிரான் வாழியேஈனமறவந் தாதியெண்பத் தேழீந்தான் வாழியேஇலகுதிருவாய் மொழியாயிர முரைத்தான் வாழியேவானணியுமா மாடக்குருகை மன்னன் வாழியேவைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியேசேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியேதிருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே (5)"
- "14)ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைபாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகைநாதன் அவதரித்த நாள்15)உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் - உண்டோதிருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோஒரு பார் தனில் ஒக்கு மூர்(திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார்)மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர்மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்- நன்னெறியோர்ஏய்ந்தபத்தி சார ரெழில்மாறன் பட்டர்பிரான்வாய்ந்துதித் தவூர்கள் வகை. (32)(திருமழிசையாழ்வார்- திருமழிசை: நம்மாழ்வார்- திருக்குருகூர்: பெரியாழ்வார்- திருவில்லிபுத்தூர்.)"
- "முன்னுரைத்த திருவிருத்த நூறு பாட்டும்-- முறையின் வரும் ஆசிரியம் ஏழு பாட்டும்மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி-- மறவாத படி எண்பத்து ஏழு பாட்டும்பின்புரைத்த தோர் திருவாய் மொழி எப்போதும்-- பிழை யற வாயிரத்து ஒரு நூற்று இரண்டு பாட்டும்இந்நிலத்தில் வைகாசி விசாகம் தன்னில்-- எழில் குருகை வருமாறா விரங்கு நீயே –6- "
- "அஞ்சனமா மலைப்பிறவி யாதரித்தோன் வாழியேஅணியரங்கர் மணத்தூணை யடைந்துய்ந்தோன் வாழியேவஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியேமாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியேஅஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியேஅநவரத மிராமகதை அருளுமவன் வாழியேசெஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியேசேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே. (6)"
- "13)மாசிப் புனர்பூசங் காண்மினின்று மன்னுலகீர்தேசித் திவசத்துக் கேதென்னில் - பேசுகின்றேன்கொல்லி நகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்நல்லவர்கள் கொண்டாடும் நாள்(தொண்டரடிப்பொடியாழ்வார், குலசேகராழ்வார்)தொண்ட ரடிப்பொடியார் தோன்றியவூர் தொல்புகழ்சேர்மண்டங் குடியென்பர் மண்ணுலகில்- எண்டிசையும்ஏத்துங் குலசேகர னூரென வுரைப்பர்வாய்த்த திருவஞ்சிக் களம். (31)(தொண்டரடிப்பொடியாழ்வார்- மண்டங்குடி: குலசேகராழ்வார்- திருவஞ்சிக்களம்.)"
- "பொன் புரையும் வேல் குல சேகரனே மாசிப்-- புனர்பூசத்து எழில் வஞ்சிக் களத்துத் தோன்றியன்புடனே நம்பெருமாள் செம் பொற் கோயில்-- அனைத்து உலகின் பெரு வாழ்வும் அடியார் தங்கள்இன்பமிகு பெரும் குழுவும் காண மண் மேல்-- இருள் இரிய வென்று எடுத்த இசையில் சொன்னநன்பொருள் சேர் திரு மொழி நூற்றைந்து பாட்டு-- நன்றாக வெனக்கு அருள் செய் நல்கி நீயே –8-"
- "நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியேநானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியேசொல்லரிய வாணிதனிற் சோதிவந்தான் வாழியேதொடைசூடிக் கொடுத்தாள்தான் தொழுந்தமப்பன் வாழியேசெல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியேசென்றுகிழி யறுத்துமால் தெய்வமென்றான் வாழியேவில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியேவேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே. (7)"
- "16)இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சேஇன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனைபல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்தநல்லானியில் சோதி நாள்17)மாநிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்தஆனி தன்னில் சோதி நாள் என்றால் ஆதரிக்கும் - ஞானியருக்குஒப்பொருவர் இல்லை இவ்வுலகுதனில் என்று நெஞ்சேஎப்பொழுதும் சிந்தித்திரு18)மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்தங்கள் ஆர்வத்தளவு தானன்றி - பொங்கும்பிரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்பெரியாழ்வார் என்னும் பெயர்19)கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்குஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்தான் மங்களம் ஆதலால்20) [ ஒப்பிலா உயர்வு ]உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்21)ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவிவாழ்வார் எதிராசர் ஆமிவர்கள் - வாழ்வாகவந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்(திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார்)மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர்மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்- நன்னெறியோர்ஏய்ந்தபத்தி சார ரெழில்மாறன் பட்டர்பிரான்வாய்ந்துதித் தவூர்கள் வகை. (32)(திருமழிசையாழ்வார்- திருமழிசை: நம்மாழ்வார்- திருக்குருகூர்: பெரியாழ்வார்- திருவில்லிபுத்தூர்.)"
- "பேர் அணிந்த வில்லிபுத்தூர் ஆணி தன்னில்-- பெரும் சோதி தனில் தோன்றும் பெருமானே முன்சீர் அணிந்த பாணியன் தன் நெஞ்சு தன்னில்-- தியக்கு அற மால் பரத்துவத்தைத் திறமாச் செப்பிவாரணம் மேல் மதுரை வலம் வரவே வானில்-- மால் கருட வாகனனாய்த் தோன்ற வாழ்த்தும்ஏர் அணி பல்லாண்டு முதல் பாட்டு நானூற்று-- எழுபத்து ஓன்று இரண்டும் எனக்கு உதவு நீயே –9"
- "மண்டங் குடியதனை வாழ்வித்தான் வாழியேமார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியேதெண்டிரைசூ ழரங்கரையே தெய்வமென்றான் வாழியேதிருமாலை யொன்பத்தஞ்சுஞ் செப்பினான் வாழியேபண்டுதிருப் பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியேபாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியேதொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியேதொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே (8)"
- "11)மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ்மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்நான்மறையோர் கொண்டாடும் நாள்(தொண்டரடிப்பொடியாழ்வார், குலசேகராழ்வார்)தொண்ட ரடிப்பொடியார் தோன்றியவூர் தொல்புகழ்சேர்மண்டங் குடியென்பர் மண்ணுலகில்- எண்டிசையும்ஏத்துங் குலசேகர னூரென வுரைப்பர்வாய்த்த திருவஞ்சிக் களம். (31)(தொண்டரடிப்பொடியாழ்வார்- மண்டங்குடி: குலசேகராழ்வார்- திருவஞ்சிக்களம்.)"
- "மன்னு மதிள் திரு மண்டங்குடி தான் வாழ-- மார்கழி மாதக் கேட்டை நாளில் வந்துதுன்னு புகழ்த் தொண்டர் அடிப் பொடியே நீ முன்-- துழாய் மாலைப் பணி யடிமை செய்து நாளும்தென்னரங்க மணவாளற்கு அன்பு மிக்குச்-- செப்பிய நல் திரு மாலை நாற்பத் தைந்தும்பன்னிய நல் திருப் பள்ளி எழுச்சி பத்தும்-- பழ வடியேனுக்கு அருள் செய் பரிந்து நீயே –11-"
- (9)"உம்பர்தொழும் மெய்ஞ்ஞான முறையூரான் வாழியேஉரோகிணிநாள் கார்த்திகையி லுதித்தவள்ளல் வாழியேவம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியேமலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியேஅம்புவியில் மதிளரங்க ரகம்புகுந்தான் வாழியேஅமலனாதி பிரான்பத்து மருளினான் வாழியேசெம்பதுமை யருள்கூரும் செல்வனார் வாழியேதிருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே"
- "10)கார்த்திகையில் ரோகினி நாள் காண்மினின்று காசினியீர்வாய்த்த புகழ்பாணர் வந்துதிப்பால் - ஆத்தியர்கள்அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதர்பின்நன்குடனே கொண்டாடும் நாள்(முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்ஓங்குமுறை யூர்பாண னூர். (30)(பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)"
- "உலகு அறிய மலி புகழ்க் கார்த்திகை மாதத்தில்-- உரோகிணி நால் உறைந்த வளம் பதியில் தோன்றிப்தலம் அளந்த தென்னரங்கர் பால் உலோக-- சாரங்க மா முனி தோள் தனிலே வந்துபல மறையின் பொருளால் பாண் பெருமாளே நீ-- பாதாதி கேசமதாய்ப் பாடித்தந்தசொல் வமலன் ஆதி பிரான் பத்துப் பாட்டும்-- சோராமல் எனக்கு அருள் செய் துலங்க நீயே –12–"
- "கலந்திருக் கார்த்திகைக்கார்த் திகைவந்தோன் வாழியேகாசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியேநலந்திக ழாயிரத்தெண் பத்துநாலுரைத் தோன்வாழியேநாலைந்து மாறைந்தும் நமக்குரைத்தான் வாழியேஇலங்கெழுகூற் றிருக்கையிரு மடலீந்தான் வாழியேஇம்மூன்றி லிருநூற்று மூவொன்பான் வாழியேவலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியேவாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே. (10)"
- "8)பேதை நெஞ்சே இன்றை பெருமை அறிந்திலையோஏது பெருமை இன்றைக் கென்றியேல் - ஓதுகின்றேன்வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்தகார்த்திகையில் கார்த்திகைநாள் காண்9)மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்ஆரங்கம் கூற அவதரித்த - வீறுடையகார்த்திகையில் கார்த்திகைநாள் இன்றென்று காதலிப்பார்வாய்த்தமலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து(முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்ஓங்குமுறை யூர்பாண னூர். (30)(பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)"
- "அறிவு தரும் பெரிய திருமொழி தப்பாமல்-- ஆயிரத்து எண்பத்து நீலு பாட்டும்குறிய தொரு தாண்டகம் நாலு ஐந்தும் ஆறு ஐந்தும்-- குலா நெடும் தாண்டகம் எழு கூற்று இருக்கை ஒன்றும்சிறிய மடல் பாட்டு முப்பத்து எட்டு இரண்டும்-- சீர் பெரிய மடல் தனில் பாட்டு எழுபத்து எட்டும்இறையவனே கார்த்திகையில் கார்த்திகை நால்-- எழில் குரையல் வரு கலியா விரங்கு நீயே –13-"
- "சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியேதிருக்கோளூ ரவதரித்த செல்வனார் வாழியேஉத்தரகங் காதீரத் துயர்தவத்தோன் வாழியேஒளிகதிரோன் தெற்குதிக்க வுகந்துவந்தோன் வாழியேபத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியேபராங்குசனே பரனென்று பற்றினான் வாழியேமத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியேமதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே. (11)"
- "25)ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்தசீராரும் சித்திரையில் சித்திரைநாள் - பாருலகில்மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்உற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்26)வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்சீர்த்த மதுரகவி செய்கலையை - ஆர்த்தபுகழ்ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவேசேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து(ஆண்டாள், மதுரகவிகள்)சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர்ஏராரும் பெரும்பூதூ ரென்னுமிவை- பாரில்மதியாரு மாண்டாள் மதுரகவி யாழ்வார்எதிராசர் தோன்றியவூ ரிங்கு. (33)(ஆண்டாள்- திருவில்லிபுத்தூர்: மதுரகவியாழ்வார்- திருக்கோளூர்.)"
- "தேறிய ஞானமுடன் திருக் கோளூரில்-- சித்திரையில் சித்திரை நாள் வந்து தோன்றிஆறிய நல்லன்புடனே குருகூர் நம்பிக்கு-- அநவரதம் அந்தரங்க வடிமை செய்துமாறனை அல்லால் என்றும் மறந்தும் தேவு-- மற்று அறியேன் எனும் மதுர கவியே நீ முன்கூறிய கண்ணி நுண் சிறுத் தாம்பு அதனில் பாட்டுக்-- குலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே –7–"
- "திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியேதிருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியேபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியேபெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியேஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியேஉயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியேமருவாருந் திருமல்லி வளநாடி வாழியேவண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே. (12)"
- "22)இன்றோ திருவாடிப்பூரம் எமக்காகஅன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாதவாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்துஆழ்வார் திருமகளாராய்23)பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்ததிருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்குண்டோ மனமே உணர்ந்துப் பார் ஆண்டாளுக்உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு24)அஞ்சுக் குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்வழுத்தாய் மனமே மகிழ்ந்து(ஆண்டாள், மதுரகவிகள்)சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர்ஏராரும் பெரும்பூதூ ரென்னுமிவை- பாரில்மதியாரு மாண்டாள் மதுரகவி யாழ்வார்எதிராசர் தோன்றியவூ ரிங்கு. (33)(ஆண்டாள்- திருவில்லிபுத்தூர்: மதுரகவியாழ்வார்- திருக்கோளூர்.)"
- "வேயர் புகழ் வில்லி புத்தூர் ஆடிப் பூரம்-- மேன்மேலும் மிக விளங்க விட்டு சித்தன்தூய திரு மகளாய் வந்து அரங்கனார்க்குத்-- துழாய் மாலை முடி சூடிக் கொடுத்த மாதேநேயமுடன் திருப்பாவைப் பாட்டு ஆறைந்து-- நீ யுரைத்த தையொரு திகள் பா மாலையாய புகழ் நூறு உடன் நால் பத்தும் மூன்றும்-- அன்புடனே அடியேனுக்கு அருள் செய் நீயே –10-"
- "திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியேசெய்யவிடைத் தாய் மகளார் சேவிப்போன் வாழியேஇரு விசும்பில் வீற்றிருக்கும் இமையவர் கோன் வாழியேஇடர் கடியப் பாற்கடலை ஏய்தினான் வாழியேஅரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியேஅந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியேபெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியேபெரிய பெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே"
- "பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியேபங்குனியில் உத்தர நாள் பார் உதித்தாள் வாழியேமங்கையர்கள் திலகம் என வந்த செல்வி வாழியேமால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியேஎங்கள் எழிற் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியேஇருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியேசெங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியேசீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே"
- "ஓங்கு துலாப் பூராடத்துதிச் செல்வன் வாழியேஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியேஈங்குலகில் சடகோபற்கு இதம் உரைத்தான் வாழியேஎழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியேபாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியேபங்கயத் தாள் திருவடியைப் பற்றினான் வாழியேதேங்கு புகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியேசேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே"
- "மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியேவேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியேஆதி குருவாய்ப் புவியில் அவதரித்தோன் வாழியேஅனவரதம் சேனையர் கோன் அடி தொழுவோன் வாழியேநாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியேநன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியேமாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியேமகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே"
- "ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியேஆளவன்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியேபானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியேபராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியேகானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியேகருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியேநானிலத்தில் குரு வரையை நாட்டினான் வாழியேநலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே"
- "வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியேமால் மணக்கால் நம்பி தொழும் மலப்பதத்தோன் வாழியேசீல மிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியேசித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியேநாலிரண்டும் ஐயைன்தும் நமக்குரைத்தான் வாழியேநாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியேமால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியேவையம் உய்யக் கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே"
- "தேசம் உய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியேதென்னரங்கர் சீர் அருளைச் சேர்ந்திருப்போன் வாழியேதாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியேதமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியேநேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியேநீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியேமாசி மகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியேமால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே"
- "மச்சணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியேமறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியேபச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியேபாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியேகச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வழியேகடக உத்தராடத்துக் காலுதித்தோன் வாழியேஅச்சமற மன மகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியேஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே"
- "அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்துரைப்போன் வாழியேஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ன்தோன் வாழியேஉம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியேஓங்கு தனுக் கேட்டை தன்னில் உதித்த பிரான் வாழியேவம்பவிழ்தார் வரதர் உரை வாழி செய்தான் வாழியேமாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியேஎம்பெருமானார் முனிவர்க்கு இதம் உரைத்தான் வாழியேஎழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே"
- "மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியேமாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியேஅருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியேஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியேதிரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியேதேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியேதெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியேதிருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே"
- "அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியேஅருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியேபத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியேபதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியேசுத்த மகிழ் மாறன் அடி தொழுதுய்ந்தோன் வாழியேதொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியேசித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியேசீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே"
- "27)இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரைநாள்என்றையினும் இதனுக்கு ஏற்றமென்றான் - என்றவர்க்குச்சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம்பிறப்பால்நாற்றிசையும் கொண்டாடும் நாள்28)ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்செய்ய திருவாதிரை29)எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்காவந்துதித்த நாள் என்னும் வாசியினால் - இந்தத்திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சேஒருவாமல் எப்பொழுதும் ஓர்(37)எம்பெருமானாரின் ஏற்றம்ஓராண் வழியா உபதேசித்தார் முன்னோர்ஏரா ரெதிராச ரின்னருளால்- பாருலகில்ஆசை யுடையோர்க் கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்றுபேசி வரம்பறுத்தார் பின்.(38)எம்பெருமானார் தரிசனம் என்று வழங்கக் காரணம்எம்பெருமானார் தரிசனமென்றே யிதற்குநம்பெருமாள் பேரிட்டு நாட்டிவைத்தார்- அம்புவியோர்இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்தஅந்தச் செயலறிகைக் கா. "
- "பற்பமெனத்திகழ் பைங்கழலும் தண் பல்லவமே விரலும்பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்கற்பகமேவிழி கருணைபொழிந்திடு கமலக்கண்ணழகும்காரி சுதன்கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே"
- "எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியேஎழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்குரைத்தான் வாழியேபண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியேபரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியேதண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியேதாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியேதெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியேசித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே"
- "சீராரும் எதிராசர் திருவடிகள் வாழிதிருவரையில் சாத்திய சென்துவராடை வாழிஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழிஇலங்கிய முன்னூல் வாழி இணைத் தோள்கள் வாழிசோராத துய்ய செய்ய முகச் சோதி வாழிதூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழிஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழிஇனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே"
- "அறு சமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியேஅடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியேசெறு கலியைச் சிறிதுமறத் தீர்த்து விட்டான் வாழியேதென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியேமறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியேமாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியேஅற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியேஅழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே"
- "சங்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே"
- "சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியேதென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியேபாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியேபாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியேநாராயணன் சமயம் நாட்டினான் வாழியேநாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியேஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியேஎழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே"
- "அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியேஅருட்பச்சை வரணத்தில் அவதரித்தான் வாழியேசித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்தோன் வாழியேசீபாடியம் ஈடு முதல் சீர் பெருவோன் வாழியேஉத்தமமாம் வாதூலம் உயர வந்தோன் வாழியேஊர் திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியேமுத்திரையும் செங்கோலும் முடி பெறுவோன் வாழியேமுதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதோறும் வாழியே"
- "எந்தாதை கூரேசர் இணை அடியோன் வாழியேஎழில் மூங்கில்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியேநந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியேநம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியேபைந்தாம அரங்கர் பதம் பற்றினான் வாழியேபங்குனியில் அத்த நாள் பார் உதித்தோன் வாழியேஅந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியேஅணி அரங்கத்தமுதனார் அடியிணைகள் வாழியே"
- "பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியேபொய்கை முதல் பதின்மர் கலைப் பொருள் உரைப்போன் வாழியேமாவளரும் பூதூரான் மலர்ப் பதத்தோன் வாழியேமகரத்தில் புனர்புசம் வந்துதித்தோன் வாழியேதேவும் எப்பொருளு படைக்கத் திருந்தினான் வாழியேதிருமலை நம்பிக்கு அடிமை செய்யுமவன் வாழியேபாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியேபட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே"
- "தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்க வந்தோன் வாழியேதிருநெடுன்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியேஅன்னவயல் பூதூரான் அடி பணிந்தோன் வாழியேஅனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியேமன்னு திருக்கூரனார் வளம் உரைப்போன் வாழியேவைகாசி அனுடத்தில் வந்துதித்தோன் வாழியேபன்னு கலை நால்வேதப் பயன் தெரிவோன் வாழியேபராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே"
- "தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியேசீமாதவன் என்னும் செல்வனார் வாழியேபண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியேபங்குனியில் உத்தர நாள் பார் உதித்தான் வாழியேஒண்டொடியாள் கலவி தன்னை ஒழித்திட்டான் வாழியேஒன்பதினாயிரப் பொருளை ஓதுமவன் வாழியேஎண்டிசையும் சீர் பட்டர் இணை அடியோன் வாழியேஎழில் பெருகும் நஞ்ஜீயர் இனிதூழி வாழியே"
- "தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியேதிருவரையில் பட்டாடை சேர் மருங்கும் வாழியேதாமம் அணி வட மார்வும் புரி னூலும் வாழியேதாமரைக் கை இணை அழகும் தடம் புயமும் வாழியேபாமருவும் தமிழ் வேதம் பயில் பவளம் வாழியேபாடியத்தின் பொருள் தன்னைப் பகர் நாவும் வாழியேநாம நுதல் மதி முகமும் திருமுடியும் வாழியேநம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியேகாதலுடன் நன்ஜீயர் கழல் தொழுவோன் வாழியேகார்த்திகைக் கார்த்திகை உதித்த கலிகன்றி வாழியேபோதமுடன் ஆழ்வார் சொல் பொருள் உரைப்போன் வாழியேபூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியேமாதகவால் எவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியேமதிள் அரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியேநாதமுனி ஆளவந்தார் நலம் புகழ்வோன் வாழியேநம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே"
- "ஆனி தனில் சோதி நன்னாள் அவதரித்தான் வாழியேஆழ்வார்கள் கலைப் பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியேதான் உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியேசடகோபன் தமிழ்க்கு ஈடு சாற்றினான் வாழியேநானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியேநல்ல உலகாரியனை நமக்கு அளித்தான் வாழியேஈனமற எமை ஆளும் இறைவனார் வாழியேஎங்கள் வடவீதிப் பிள்ளை இணை அடிகள் வாழியே"
- "அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியேஐப்பசியில் திருவோணத்து அவதரித்தான் வாழியேமுத்தி நெறி மறைத் தமிழால் மொழிந்தருள்வோன் வாழியேமூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியேநித்தியம் நம்பிள்ளை பதம் நெஞ்ஜில் வைப்போன் வாழியேநீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியேஉத்தமமாம் முடும்பை நகர் உதித்த வள்ளல் வாழியேஉலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே"
- "சந்ததமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியேதாரணியில் சிறுநல்லூர் தான் உடையோன் வாழியேஎந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியேஇலகு துலா ஆதிரையில் இங்குதித்தோன் வாழியேஇந்த உலகோர்க்கு இதம் உரைத்தோன் வாழியேஎழில் வசன பூடணத்துக்கு இனிமை செய்தான் வாழியேகுன்தி நகர் சிந்தை கொண்ட செல்வனார் வாழியேகூர குலோத்தம தாசர் குரை கழல்கள் வாழியே"
- "வையகமெண் சடகோபன் மறை வளர்த்தோன் வாழியேவைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியேஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியேஅழகாரும் எதிராசர் அடி பணிவோன் வாழியேதுய்ய உலகாரியன் தன் துணைப் பதத்தோன் வாழியேதொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியேதெய்வ நகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியேதிருவாய்மொழிப் பிள்ளை திருவடிகள் வாழியே"
- "இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியேஎழில் திருவாய்மொழிப் பிள்ளை இணை அடியோன் வாழியேஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியேஅரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்றும் வாழியேஎப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியேஏராரும் எதிராசர் என உதித்தான் வாழியேமுப்புரி நூல் மணிவடமும் முக்கோல் தரித்தான் வாழியேமூதரிய மணவாள மாமுனிவன் வாழியே"
- "செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்சீர் உலகாரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடு நாள்மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானில் உயர்த்திடு நாள்மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்அந்தமில் சீர் மணவாள முனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் அதெநு நாளே"
தனியன்-1
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
தனியன்-2
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
ஆழ்வார்கள் பொது வாழி
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
பொய்கையாழ்வார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
பூதத்தாழ்வார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
பேயாழ்வார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
திருமழிசைப்பிரான்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
நம்மாழ்வார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
குலசேகரப் பெருமாள்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
பட்டர்பிரான்/பெரியாழ்வார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
தொண்டரடிப்பொடியாழ்வார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
திருப்பாணாழ்வார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
கலியன்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
மதுரகவியாழ்வார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
ஆண்டாள்/கோதைநாச்சியார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
பெரிய பெருமாள்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
பெரிய பிராட்டியார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
சேனை முதலியார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
நம்மாழ்வார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
ஸ்ரீமந் நாதமுனிகள்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
உய்யக்கொண்டார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
மணக்கால் நம்பி
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
ஸ்ரீ ஆளவந்தார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
பெரிய நம்பிகள்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
திருக்கச்சி நம்பிகள்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
எம்பெருமானார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
எம்பெருமானார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
எம்பெருமானார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
எம்பெருமானார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
"எம்பெருமானார் - திருநாள் பாட்டு"
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
கூரத்தாழ்வான்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
முதலியாண்டான்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
திருவரங்கத்தமுதனார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
எம்பார்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
பட்டர்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
நஞ்ஜீயர்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
நம்பிள்ளை
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
வடக்குத் திருவீதிப் பிள்ளை
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
பிள்ளை லோகாசார்யர்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
கூர குலோத்தம தாசர்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
திருவாய்மொழிப் பிள்ளை
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
மணவாள மாமுனிகள்
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்
மணவாள மாமுனிகள் - திருநாள் பாட்டு
வாழித் திருநாமங்கள்
உபதேசரத்தினமாலை
ஸ்ரீ பிரபந்த சாரம்