திரு வதரி ஆசிரமம்

பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

பெயர்: பத்ரிநாத் தமிழ்: பத்ரிநாத் கோயில் மாநிலம்: உத்தராகண்டம் மாவட்டம்: சமோலி அமைவு: பத்ரிநாத்,

தாயார் : ஸ்ரீ அரவிந்த வல்லி
மூலவர் : ஸ்ரீ பத்ரி நாராயணன்

மண்டலம் : வட நாடு
இடம் : உத்தராகண்டம்
கடவுளர்கள்: ஸ்ரீ பத்ரி நாராயணன்,ஸ்ரீ அரவிந்த வல்லி


திவ்யதேச பாசுரங்கள்

  968.   
  முற்ற மூத்து கோல் துணையா*  முன் அடி நோக்கி வளைந்து* 
  இற்ற கால் போல் தள்ளி மெள்ள*  இருந்து அங்கு இளையாமுன்* 
  பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை 
  வற்ற வாங்கி உண்ட வாயான்*  வதரி வணங்குதுமே.

      விளக்கம்    969.   
  முதுகு பற்றிக் கைத்தலத்தால்*  முன் ஒரு கோல் ஊன்றி* 
  விதிர் விதிர்த்து கண் சுழன்று*  மேல் கிளைகொண்டு இருமி* 
  இது என் அப்பர் மூத்த ஆறு என்று*  இளையவர் ஏசாமுன்* 
  மது உண் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.  

      விளக்கம்    970.   
  உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து*  ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி* 
  நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று*  நடுங்காமுன்* 
  அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய்*  ஆயிரம் நாமம் சொலி* 
  வெறி கொள் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.    

      விளக்கம்    971.   
  பீளை சோரக் கண் இடுங்கி*  பித்து எழ மூத்து இருமி*
  தாள்கள் நோவத் தம்மில் முட்டி*  தள்ளி நடவாமுன்* 
  காளை ஆகி கன்று மேய்த்து*  குன்று எடுத்து அன்று நின்றான* 
  வாளை பாயும் தண் தடம் சூழ்*  வதரி வணங்குதுமே.

      விளக்கம்    972.   
  பண்டு காமர் ஆன ஆறும்*  பாவையர் வாய் அமுதம்* 
  உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி* 
  தண்டு காலா ஊன்றி ஊன்றி*  தள்ளி நடவாமுன்* 
  வண்டு பாடும் தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.

      விளக்கம்    973.   
  எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி*  இருமி இளைத்து*
  உடலம்  பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்*  பேசி அயராமுன்* 
  அத்தன் எந்தை ஆதி மூர்த்தி*  ஆழ் கடலைக் கடைந்த* 
  மைத்த சோதி எம்பெருமான்*  வதரி வணங்குதுமே.    

      விளக்கம்    974.   
  பப்ப அப்பர் மூத்த ஆறு*  பாழ்ப்பது சீத் திரளை* 
  ஒப்ப ஐக்கள் போத உந்த*  உன் தமர் காண்மின் என்று* 
  செப்பு நேர் மென் கொங்கை நல்லார்*  தாம் சிரியாத முன்னம்* 
  வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்*  வதரி வணங்குதுமே.            

      விளக்கம்    975.   
  ஈசி போமின் ஈங்கு இரேல்மின்*  இருமி இளைத்தீர்* 
  உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும்*  குவளை அம் கண்ணியர்பால்*
  நாசம் ஆன பாசம் விட்டு*  நல் நெறி நோக்கல் உறில்* 
  வாசம் மல்கு தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.

      விளக்கம்    976.   
  புலன்கள் நைய மெய்யில் மூத்து*  போந்து இருந்து உள்ளம் எள்கி* 
  கலங்க ஐக்கள் போத உந்தி*  கண்ட பிதற்றாமுன்* 
  அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு*  ஆயிரம் நாமம் சொலி* 
  வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்*  வதரி வணங்குதுமே

      விளக்கம்    977.   
  வண்டு தண் தேன் உண்டு வாழும்*  வதரி நெடு மாலைக்* 
  கண்டல் வேலி மங்கை வேந்தன்*  கலியன் ஒலி மாலை* 
  கொண்டு தொண்டர் பாடி ஆடக்*  கூடிடில் நீள் விசும்பில்* 
  அண்டம் அல்லால் மற்று அவர்க்கு*  ஓர் ஆட்சி அறியோமே. 

      விளக்கம்    978.   
  ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து*  அன்று இணை அடி இமையவர் வணங்க* 
  தானவன் ஆகம் தரணியில் புரளத்*  தடஞ் சிலை குனித்த என் தலைவன்*
  தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த*  தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து* 
  வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  (2)   

      விளக்கம்    979.   
  கானிடை உருவை சுடு சரம் துரந்து*  கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்* 
  ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப*  உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்* 
  தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்*  சென்று சென்று இறைஞ்சிட*
  பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.   

      விளக்கம்    980.   
  இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்*  இரு நிதிக்கு இறைவனும்*
  அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்*  கொழுஞ் சுடர் சுழன்ற* 
  விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்*  வெண் துகில் கொடி என விரிந்து* 
  வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.       

      விளக்கம்    981.   
  துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே!*  தொழுது எழு தொண்டர்கள் தமக்குப்* 
  பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்*  பேர் அருளாளன் எம் பெருமான்* 
  அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்*  ஆரமும் வாரி வந்து*
  அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.        

      விளக்கம்  


  • மனமே! உனக்கு உறுதியாக ஒன்றைச் சொல்கிறேன் கேள்! வணங்கி வாழ்ந்து போ!
   யாரை வணங்குவது என்று கேட்டால் சொல்கிறேன்! தொண்டு செய்பவர்களுக்கு எல்லாவிதமான நோய்களையும் ஒழித்து, மரணமில்லாத தேவர்களின் (நித்யர்களின்) நிலையான பெரிய பரமபதத்தை அருளும் பேரருளாளனான எம்பெருமான் அழகிய மலர்களைச் சூடிய கூந்தலை உடையவர்களான தேவ மகளிர்கள் நீராடும் போது, அவர்களின் மெல்லிய உடைகளையும் (துகிலையும்) கழுத்தில் அணியும் நகைகளையும் வாரிக்கொண்டு வந்து பொன்னும் மணியுமாகப் பொங்கி வரும் கங்கையின் கரை மேல் பத்ரிகாச்ரமத்தில் நிலையாக வாழ்கின்றான்! அவனைத் தொழுது எழு!


  982.   
  பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன்*  பெரு முலை சுவைத்திட*
  பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட*  வளர்ந்த என் தலைவன்*
  சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த*  செம்பொன் செய் விலங்கலில் இலங்கு,* 
  வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்,*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே

      விளக்கம்    983.   
  தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து*  ஒரு மறத் தொழில் புரிந்து* 
  பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த*  பனி முகில் வண்ணன் எம் பெருமான்
  காரணம் தன்னால் கடும் புனல் கயத்த*  கரு வரை பிளவு எழக் குத்தி* 
  வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.

      விளக்கம்    984.   
  வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்*  விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்* 
  இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்*  எந்தை எம் அடிகள் எம் பெருமான்*
  அந்தரத்து அமரர் அடி இணை வணங்க*  ஆயிரம் முகத்தினால் அருளி* 
  மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  

      விளக்கம்    985.   
  மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த*  மன்னவன் பொன் நிறத்து உரவோன்* 
  ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா*  உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்* 
  தான் முனிந்து இட்ட*  வெம் திறல் சாபம் தவிர்த்தவன்*
  தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 

      விளக்கம்    986.   
  கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்*  குரை கடல் உலகு உடன் அனைத்தும்* 
  உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த*  உம்பரும் ஊழியும் ஆனான்* 
  அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து*  அங்கு அவனியாள் அலமரப்*
  பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 

      விளக்கம்    987.   
  வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானை* 
  கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்* 
  வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்*  வானவர் உலகு உடன் மருவி* 
  இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  இமையவர் ஆகுவர் தாமே. (2)

      விளக்கம்