திருத்தண்கா

இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க எத்தனையோ முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப் போகவே இனிமேல் என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணினாள். உடனே சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச் செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள். திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞானத்தால் உணர்ந்த பிரம்மன், உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத் துதித்தார். உடனே மஹாவிஷ்ணு (அன்றையதினமான சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகத்தை தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சமாக்கினார். தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து அக்கினி வடிவில் மாய நலன் என்ற ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி. அக்கினி வடிவில் யாகத்தை அழிக்க வந்த அசுரனை பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் நல்கினார். இவ்வாறு அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் விளக்கொளிப் பெருமாள் (தீபப்பிரகாசர்) என அழைக்கப்படுகிறார்.

அமைவிடம்

பெயர்: திருத்தண்கா விளக்கொளி பெருமாள் திருக்கோயில்,
ஊர்: தூப்புல் மாவட்டம்: காஞ்சிபுரம் தொலைபேசி எண்: +91- 98944 43108 ,

தாயார் : ஸ்ரீ மரகத வல்லி
மூலவர் : ஸ்ரீ தீபப் பிரகாசன்
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: ஸ்ரீ தீபப் பிரகாச பெருமாள்,ஸ்ரீ மரகத வல்லி