- முகப்பு
- திவ்ய தேசம்
- திருப்பாற்கடல்
திருப்பாற்கடல்
திருப்பாற்கடல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] பத்து ஆழ்வார்களால் பாடல்பெற்ற இத்தலம் இப்பூமியில் இல்லாத தலமாகும். இந்து தொன்மவியலில் பாற்கடல் என்பது திருமாலின் இருப்பிடமாக கூறப்படுகிறது. இந்த பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பு படுக்கையில் திருமால் படுத்துக் கொண்டிருப்பதாக திருமுறைகள் குறிப்பிடுகின்றன
அமைவிடம்
முகவரி இல்லை ,
தாயார் : ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (
மூலவர் : ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்
உட்சவர்: --
மண்டலம் : விண்ணுலகம்
இடம் : விண்ணுலகம்
கடவுளர்கள்: திருப்பாற்கடல் நாதன் ,ஸ்ரீ கடல் மகள் நாச்சியார்
திவ்யதேச பாசுரங்கள்
-
250.
‘பாற்கடல்வண்ணா’ என்றது-க்ருஷ்ணாவதாரத்தில் நிறத்தைச் சொன்னபடியன்று; ‘பாலின் நீர்மை செம்பொனீர்மை’ என்ற பாட்டிற் சொல்லியபடி-ஸாத்விகர்களான க்ருதயுக புருஷர்களுடைய ருசிக்குத் தக்கபடி திருமேனி நிறத்தை யுடையவனாய்க்கொண்டு அவர்களைக் காத்தருளினவாற்றைச் சொல்லுகிறதென்க; இனி, ‘பாற்கடல்வண்ணா”’ என்று பாடமாகில், பார்[பூமி] சூழ்ந்த கடல் போன்ற [கறுத்த] நிறத்தையுடையவனே! என்று பொருளாய் இவ்வவதாரத்தின் நிறத்தையே சொல்லிற்றாகலாம். கன்றினுருவாகி வந்த அசுரன் [வத்ஸாஸுரன்] ஒருவனாதலால் ‘அசுரன்றன்னை’ என்று ஒருமையாக சொல்ல வேண்டியிருக்க, அங்ஙனஞ் சொல்லாது ‘அசுரர்தம்மை’ என்று பன்மையாகக் கூறினது-பால்வழுவமைதியின் பாற்படுமென்க; “உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினுனும் பால்திணை இழுக்கினுமியல்பே” என்றார் நன்னூலார்; கோபத்தினால் பன்மைப்பால் ஒருமைப்பாலாதலேயன்றி ஒருமைப்பால் பன்மைப்பாலாதலும் உண்டென்பது ஒருசாரார் கொள்கை; சிறியதிருமடலில், “அருகிருந்த, மோரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே, ஓராதவன்போற் கிடந்தானைக் கண்டவளும், வாராத்தான் வைத்ததுகாணாள் வயிறடித்திங், கார்ர்புகுதுவார் ஐயரிவரல்லால், நீராமிதுசெய்தீர் என்றோர் நெடுங்கயிற்றால், ஊரார்கள் எல்லாருங்காண உரலோடே, தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப, ஆராவயிற்றி னோடாற்றாதான்” என்றவிடத்து ‘ஐய்யர்’ ‘நீராம்’ என்று ஒருமைப்பால் பன்மைப்பாலாக அருளிச் செய்துள்ளமையும், ‘தீரர்வெகுளியளாய்’’ என்றமையால் இதுக்கு அடி கோபமென்பதும் இங்கு உணரத்தக்கது. “உண்ணிலாவியவைவரால்”” என்ற பதிகத்திலும் மற்றும் பலவிடங்களிலும் ஐம்பொறிகளை ‘ஐவர்’ என உயர்திணையாற் கூறியது, இழிபு பற்றிய திணைவழுவமதி என்றாற்போலக் கொள்க. “கன்றினுருவாகி” என்றதை உபலக்ஷணமாக்கித் தாம்பர்யங் கண்டுகொல்வது; அன்றிக்கே, ஆழ்வாருக்கு கிருஷ்ணனிடத்தில் ப்ரேமாதிசயத்தாலே, வந்த ஒருவனே ஒன்பதாகத் தோற்றி பஹூவசநம் ப்ரயோகித்தார் என்று கொள்ளவுமாம்” என்பர் ஒரு அரும்பதவுரைகாரர். கண்ணபிரானே! உன்னை நலிய வந்த வத்ஸாஸுரனையும் கபித்தாஸுரனையும் அநாயாஸமாக முடித்தவனன்றோ நீ -என்று யசோதைசொல்ல, அவன் ‘ஆம்’ என்ன அதைக்கேட்ட யசோதை மனமகிழ்ச்சி ஒருபக்கத்திலும் வயிற்றெரிச்சல் ஒருபக்கத்திலுமாய் ‘என்னுடைய பிள்ளைக்குத் தீமை செய்யக் கருதுமவர்கள் என்றும் அப்படியே மாளக்கடவர்கள்’’ என்று கைநெரித்துச் சாபமிடுகிறாள் ஈற்றடியில்.
(பரமமூர்த்தி) “மூர்த்திசப்தம்- ஐச்வர்யத்துக்கும் விக்ரஹத்துக்கும் வாசகமாகையாலே, இவ்விடத்தில் ஐச்வர்யவாசகமாய்க் கொண்டு,சேஷித்வத்தைச் சொல்லுகிறது” என்ற வியாக்கியாகவாக்கிய மறியத்தக்கது. மூன்றாமடியில், மணிசரை என்றவிடத்து, ஐ- அசை; அன்றி, உருபுமயக்கமுமாக “பொய்யை” என்கிறவித்தைப் பொய் என்று குறைந்துக் கிடக்கிறது. *** என்றபடி தனது கட்டளையான சாஸ்த்ரங்களை மீறி ஸ்வேச்சையாகக் கபடநடைகளில் ஒழுகுபவர்கள் இவ்வுலகத்தவர்கள் என்று எம்பெருமான் திருவுள்ளத்திற்கொண்டு, அவ்வக்காலங்களில் அவரவர்கள் செய்யும் பாபங்களுக்கீடாகத தண்டம் நடத்தியாகிலும் இவ்வுலகைக் காக்க வேணுமென்ற கருணையினால், சிக்ஷைக்குக்கடவனான யமனையும் படைத்தருளினமை மூன்றாமடியில் விளங்கும். காலன்- வடசொல். தோற்றினாய், படைத்தாய்- விளிகள்
பிராபிருதமான உயவு அடியேனுக்கில்லை என்றாற்போல, அறக்கமுமில்லையெகிறார், இப்பாட்டில் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக்கொண்டு யோக நித்திரை செய்தருளுங் கிராமத்தை ஸாக்ஷாத்கரிக்கப்பெறலாமோ வென்னுமாவல்கொண்டு, (“பாலாழி நீ கிடக்கும் பண்பையாங் கேட்டேயும், காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்” என்கிறபடியே) அவ்வநுஸன்தாநகமடியாக நெஞ்சு அழியப்பெற்று, ப்ரீத்யதிசயத்தினால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச வொண்ணாதபடி ஏங்கி உடம்பெல்லாம் ரோமாஞ்சிதமாகப் பெற்று, ‘நமது மநோரதம் தலைக்கட்டவில்லையே’ என்ற அவஸாதத்தினால் கண்ணீர் துளிதுளியாகச் சோரப்பெறுகையால் இதுவே சிந்தையாய்ப் படுக்கையிற் சாய்ந்தால் கண்ணுறங்கப் பெறாத அடியேன் உன்னை எவ்வாறு கிட்டுவேனோ, அவ்வழியை அருளிச் செய்யாய் என்கிறார். எம்பெருமான் திருவனந்தாழ்வான்மீது உறங்குவான்போல் யோகுசெய்கின்றனனாதலால், கள்ளநத்திரை எனப்பட்டது. நித்திரை - *** . மார்க்கம்- *** . உரோமகூபம் - ***மென்ற வடமொழித்தொடர் விகாரப்பட்டது. ரோமம் - மயிர்; கூபம் -குழி. தத்துறுதல் என்பதற்குக் கீழ்ப்பாட்டில் “தட்டுப்படுதல்” என்று பொருள் கூறப்பட்டது; இப்பாட்டில், அச்சொல்லுக்கே கிட்டுதல் என்று பொருள் கூறப்படுகின்றது. ஒரு சொல்லுக்கு பல பொருள் கொள்ளக்கூடுமிறே. அன்றி, கீழ்ப்பாட்டிற் போலவே இப்பாட்டிலும் தந்துறுதல் என்று மாறுபாட்டையே சொல்லிற்றாய், கிட்டுதல் என்பது தாத்பரியப் பொருளாகவுமாம்; உள்ளஞ்சோர்தலும், உகர்தெதிர் விம்முகையும் கண்ணநீர்துள்ளஞ் சோர்தலும், துயிலணை கொள்ளாமையும் மாறுபடுவதே எம்பெருமானைக் கிட்டுகை என்று கருத்து. இனி, உண்மைப்பொருளை வல்லார் வாயக் கேட்டுணர்க.
‘பைம்கொண்ட பாம்பனையோடும்- மெய்க்கொண்டு வந்து புகுந்து கிடந்தார்’ என்று உபக்ரமத்தில் அருளிச்செய்தபடியே நிகமித்தருளுகிறார்- எம்பெருமானுக்குத் திருப்பாற்கடலிலும் திருவனந்தாழ்வானிடத்தும் மிக்க அன்பாதலால் அவற்றைவிட்டுப் பிரிந்து வரமாட்டாமல் அவற்றையும் உடன்கொண்டு எழுந்தருளினனென்க. இது மற்றுமுள்ள நித்யஸூரிகளோடுங்கூட எழுந்தருளிமைக்கு உபலக்ஷணமென்பர். அமளி- - படுக்கை. அரவிந்தம் - வடசொல் பாவை- உவமையாகுபெயர். அகம்படி வந்து புகுந்து- அந்தரங்க பரிஜகங்களோடுகூட வந்து புகுந்து என்று முரைப்பர். பாவை- கடல்; எம்பெருமான் அழைத்துக்கொண்டுவந்த திருப்பாற்கடல், “பட்டினக் காவல் பொருட்டுப் பரவுகின்றான்”- (இப்படி) ஆத்துமாவைக் காத்தருளின உபகாரத்திற்காகப் போற்றுகின்றான் என்றபடி. இத்திருமொழி ஸ்வயமே இனியதாயிருத்தலால் இதற்குப் பயன் கூறாதொழிந்தன ரென்க. அடிவரவு நெய் சித்திர வயிற்றில் மங்கிய மாணி உற்ற கொங்கை ஏதம் உறகல் அரவத்துக்க.
எம்பெருமான், தன்னை அநுபவிக்குமவர்களான நித்தியஸூரிகளை உபேக்ஷித்துவிட்டு, என்னிடத்து அன்புபூண்டு, என்னையே போந்தாலாகக் கொணாவந்தான் என்றார், கீழ்ப்பாட்டில்; இப்பாட்டில், அவ்வெம்பெருமான் தன்னுடைய போக (***) ஸ்தாநங்களையும் உபேக்ஷித்துவிட்டு வந்து என் நெஞ்சையே தனக்கு உரிய இடமாக அங்கீகரித்தருளினாலென்கிறார். (வரதராஜபஞ்சாசத்) என்ற தூப்புற்பிள்ளையி னருளிச் செயல், இப்பாசுரத்தை ஒரு புடை அடியொற்றிய தென்றுணர்க. “பள்ளி கோள்“ என்றவிடத்து, கோள் – முதனிலைதிரிந்த தொழிற்பெயர். பழகவிட்டு-பழகும்படிவிட்டு, அதாவது – ‘எம்பெருமானுக்குப் பனிக்கடலில் பள்ளி கொள்ளுதல் எப்போதோ பழைய காலத்தில் இருந்த சங்கதி‘ என்னும்படியாகவிட்டு என்றபடி, பழகுதல் – பிராசீநமாதல். மனத்தைக் கடலாகக் கூறியது – குளிர்ச்சி. இடமுடைமை முதலிய தன்மைகளின் ஒற்றுமைபற்றி. “***“ என்பதனால், எம்பெருமான் ஸூர்யமண்டலத்தை இருப்பிடமாக்க் கொண்டவனென்பது அறியற்பாற்று.
விசேஷ காரியத்தில் ஒருப்பட்டவர்கள் அக்காரியம் தலைக்கட்டுமளவும் சிலவற்றைப் பரிஹரிக்க வேண்டுமென்றும் சிலவற்றைப் பற்றவேண்டுமென்றும் அந்த வீடுபற்றுக்களை முதலில் ஸங்கல்பித்துக்கொள்ள வேண்டுமென்றும் சாஸ்திரங்களிற் கூறியுள்ளதனால், அதற்கேற்ப, நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஒருப்பட்ட இவ்வாயர் மங்கைகள் தாங்கள் விடுமவற்றையும் பற்றுமவற்றையும் ஸங்கல்பிக்கிறார்கள், இப்பாட்டில். பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடுகை, நாட்காலே நீராடுகை, ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டுகை ஆகிற இம்மூன்றும் செய்யப்படுமவை. நெய்யுண்ணாமை, பாலுண்ணாமை, மையிட்டெழுதாமை, மலரிட்டு முடியாமை, செய்யாதன செய்யாமை, தீக்குறளை சென்றோதாமை என்பன விடப்படுமவை. “உண்ணோம், செய்யோம், ஓதோம்” என்ற தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் ஸங்கல்பத்தைக் காட்டுமவை. “செய்யுங் கிரிசைகள் கேளீரோ” என்றாற்போலவே “விடுங்கிரிசைகள் கேளீரோ” என்றுஞ் சொல்ல வேண்டாவோவென்னில்; வேண்டா; விடுகையென்பதும் செய்யுங் கிரிசையினுள் அடங்கக்கூடுமாதலின் எனவே, “செய்யுங் கிரிசைகள்” என்ற ஒரு சொற்போக்கிற்றானே வீடுபற்றுக்களிரண்டும் வெளியாயின வென்க.
(குண்டுநீர்) ப்ரளயகாலத்தில் உலகமெல்லாம் ஜலமயமாய் ஏகார்ணவமான நிலைமை’ “பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் நெடுங்கடலே யானகாலம்” என்றது காண்க. ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக எம்பெருமான் அந்த ஏகார்ணவத்தில் சாய்ந்தருளினமை அறிக. (“கடைக் கண்களாலிட்டு வாதியேல்.”) முழுநோக்குப் பெறவேணுமென்று ஆசைப்பட்டிருக்குமவர்கட்குக் கடாக்ஷவீக்ஷணம் (கடைக்கண் பார்வை.) ஹிம்ஸகமிறே. அணையவேணுமென்று விரும்பப்பட்ட வ்யக்தியை தூரிரத்தில் நின்று காண்கைக்கு மேற்பட்ட ஹிம்ஸை இல்லாதாப் போலே. யானை கோள்விடுத்த வரலாறு:- இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்க விஷ்ணுபக்தியுடையவனாய் ஒருநாள் விஷ்ணுபூஜை செய்கையில் அகஸ்திய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால் அவ்விருடியின் வரவை அறிந்திடானாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அம்முனிவன், தன்னை அரசன் அலட்சியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து ‘நீ யானை போலச் செருக்குற்றிருந்ததனால் யானையாகத் தோன்றினனாயினும், முன் செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையால் அப்பொழுதும் விடாமல் நாள் தோறும் ஆயிரந் தாமரைத் தடாகத்தில் அர்ச்சனைக்காகப் பூபறித்தற்குப் போய் இறங்கியபொழுது, அங்கே முன்பு நீர் நிலையில் நின்றுத் தவஞ்செய்து கொண்டிருந்த தேவலனென்னும் முனிவனது காலைப் பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற் பெரிய முதலையாய்க் கிடந்த ஹூஹூ என்னுங் கந்தருவன் அவ்யானையின் காலைக் கௌவிக்கொள்ள அதனைக் விடுவித்துக்கொள்ள முடியாமல் கஜேந்திரன் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே திருமால் கருடன் மீதேறி அங்கு எழுந்தருளித் தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன் வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருளினன் என்பதாம்.
பரமபதத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெருமானைப் புணரவேணுமென்ற அபிநிவேசத்தினால் என் கொங்கை களானவை காலவிளம்பம் பொறுத்திருக்கமாட்டாத தன்மையினால் விம்மிவளர்ந்து, அவ்வளவிலும் அவன் ஓடிவந்து அணைக்காணாமையினாலே ‘யாம் உன்மார்விலேவந்து முளைத்தபடியாலன்றோ எமக்கு இந்தக்கஷ்டம் விளைந்தது’ உன்னுடைய தெளர்ப்பாக்யமானது எங்கள் மேலும் ஏறிப்பாய்ந்து எம்பெருமான் எங்களையும் உபேஷிக்கும்படியாயிற்று’ என்று சொல்லிக் கொண்டு அவை என்னைப்புடைக்கிற புடையை என்சொல்வேன்? என்று ஆண்டாள் கூக்குரலிட்டுக் கூறியதைக் கேட்ட அச்சோலைக்குயிலானது ‘இப்போது நாம் இவளுக்கு முகங்கொடுத்தால் நம்மை இவள் வெறுமனே விடமாட்டாள்;. “என்செய்யதாமரைக்கட் பெருமானார்க்கென்தூரிதாய், என் செய்யுமுரைத்தக்கால் இனக்குயில்காள்!” (திருவாய்மொழி க-ச-உ) என்றாள்போல இவளும் நம்மைத் தூரிதுபோகவேண்டிக் காலையொடிக்கக் கருதுவள்’ இந்த வெய்யிலிலும் கானலிலும் ஓடுவதற்கு நம்மாலாகாது’ அதுதன்னிலும் திருப்பாற்கடலெம்பெருமான் மீது இவளுக்கு ஆசையாம்’ அங்கே ஓட ஆராலாகும்? ஆகையாலே இவளுக்கு நாம் முகங்காட்டாமல் தலைமறைந்திருப்பதே தகுதி’ என்று நினைத்து முகத்தையுங்காட்டாமல் குரலையும் தெரிவியாமல் பதுங்கிக் கிடந்தது’ அங்ஙனமிருந்த அக்குயிலின் கருத்தைத் தெரிந்து கொண்ட ஆண்டாள் “அம் குயிலே!” என்று விளித்தான்’ (அழகிய குயிலே! என்றபடி) நீ மற்றகுயில்களைப் போலேயிருந்தாயாகில் உன்னைச்ரமப்படுத்த நினைத்தாலும் நினைப்பேன்’ அழகியகுயிலன்றோநீ’ உன் அழகைக் கண்டிருக்கிறநான் அவ்வழகுக்கு ஒருவாட்டம் பிறக்கும்படி உன்னைச்ரமப்படுத்த நினைப்பேனா? நீ எங்கும் தூரிது செல்லவேண்டா’ நீ இருந்த விடத்திலிருந்து கொண்டே, அப்பெருமான் இங்கேவரும்படி கூவினாயாகில் இதுவே மஹோபகாரமாம்’ எனக்குமாத்திரம் நன்மையன்று’ நீயும் ஒருவாய்ச்சொல்லாலே பெரிய தருமம் நடத்தினாயாவாய்; ‘நாம் கூவினால் அவ்வெம்பெருமான் ஓடிவரக் காத்திருக்கிறானோ; என்று நினையாதே; “நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான்” என்றும் “(பாது ப்ரணதரக்ஷாயாம் விளம்பமஸஹந்நிவ, ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸந: ஸ்ரீரங்கநாயக: ஸ்ரீ ஸ்ரீரங்கராஜஸ்தவனம்.)” என்றும் சொல்லியிருக்கிறபடி என்னைப் போன்ற ஆர்த்தர்கட்க விரைவாகவந்து காரியஞ் செய்வதற்காக அவன் திவ்யாயுதங்களை க்ஷணகாலமும் கைவிடாமல் ஏந்திக் கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா? ஏற்கனவே இங்கு வந்து காரியஞ்செய்வதில் ஆதரமுடையவனான அப்பெருமான் உன் கூவுதல் கேட்டபின்பும் வாராதே நிற்பனோ? அரைகுலையத்தலை குலைய ஆனைக்கு வந்து உதவினாற் போலே எனக்கும் உதவ ஓடிவருவன்காண்; ஆகையாலே நீ கூவு என்கிறாள்.
திருப்பாற்கடலில் பள்ளிகொள்பவனும் நறுந்தேன் மிக்க செவ்வித் துழாய் மாலையையணிந்த பெருந் திருமார்பையுடையவனும் புண்டரீகாக்ஷனுமாகிய ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே மையல்கொண்டு இருந்தவிடத்திலிருக்க வொட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் விகாரப்படுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய அந்த ஸ்ரீவைஷ்ணவலஷ்மிக்கே என் நெஞ்சு பித்தேறா நின்ற தென்கிறார். அப்படிப்பட்ட நிலைமை நமக்கு வாய்க்குமோ? என்று ஆசை கொள்ளா நின்றதென்றபடி. இரண்டாமடியில் மாத்திரம் மாலை என்பது நாதா என்ற வடசொல் விகாரம். மற்ற மூன்றடிகளிலுள்ள மாலை-மோஹம் என்னும் பொருளதான் மால் என்னுஞ் சொல் இரண்டாம் வேற்றுமை யுருபேற்றது.
உரை:1
ஜங்கமமானதொரு பிறப்பு வேண்டுமென்பதில்லை; திருவேங்கடமலையில் இருப்பு சேரும்படியாக அங்கு நிற்பதொரு ஸ்தாவரமாகவாயினும் நான் ஆக வேண்டுமென்று அபேக்ஷிக்கின்றார். “வானவர் வானவர்கோனெடுஞ் சிந்து பூமகிழும் திருவேங்கடம்” என்றபடி பரமபதத்திலுள்ளார் புஷ்பவர்ஷம் வர்ஷிக்கின்ற இடமாதல் பற்றிப் புஷ்பமண்டப மெனப்படுகின்ற திருமலையிலே எம்பெருமானுக்குப் புஷ்பகைங்கரியஞ் செய்வது விசேஷமாதலால் அக்கைங்கரியத்துக்கு உபயோகப்படுவதொரு மரமாதலை வேண்டினரென்க. பலவகைப் புஷ்பங்களுள் சண்பகமலர் எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மிகவும் உகப்பாதலைப் பெரியாழ்வார் பூச்சூட்டல் திருமொழியில் ” தேனிலினிய பிரானே! செண்பகப்பூச் சூட்டவாராய் ” என்று இதனை முதலிற்கூறியதனாலும் உணர்க. கீழ்ப்பாட்டில் விரும்பின கைங்கரியம் கிடைத்தால் வட்டிலைக் களவு செய்ய ஆசை தோன்றிச் சிறையிருக்க நேரிடும் என நினைத்து சண்பகமரமாய்ப் பிறக்க வேணுமென்று அபேஷித்தபடி.
உரை:2
அருமையான பவளங்களை அலைகள் கரையினில் தினமும் சேர்க்கும் குளிர்ந்தத் திருப்பாற்கடலில் அறிதுயில் புரியும் மாயவா உன் கழலிணைகள் காண்பதற்கு வழி தெரிந்துவிட்டது. பாடல்களைப் பாடிய படி வண்டுக் கூட்டங்கள் திரியும் திருவேங்கட மலையில் ஒரு செண்பக மரமாய் நிற்கும் பெரும்பேறு உடையேன் ஆவேனே. தினந்தோறும் உன் திருவடிகளுக்கு அர்ச்சனையாய் செண்பக மலர்கள் தந்து எப்போதும் உன் திருவடிகளில் நிலையாக இருப்பேனே.
பரவாஸுதேவ மூர்த்தியா யிருந்துகொண்டு நித்யவிபூதியை நிர்வஹித்தும், வ்யூஹம் முதலாக ஸ்தாவரஜந்மபர்யந்தமாகத் திருவவதரித்து லீலாவிபூதியை நிர்வஹித்தும் போருகிற இவை ஓரொன்றே சாஸ்த்ரங்களுக்கு அவிஷமாயிருக்க, அதுக்குமேலே* தமருகந்த தெவ்வுரு மவ்வுருவந்தானாய் ஸர்வஸுலபனாய் ஸர்வஸஹிஸ்ணுவாய் ஸர்வஜுஸமாராத்யனாய் அர்ச்சாவதார ரூபியாய்த் தன்னை அமைத்துநின்ற தன்மை என்னே! என்று அது தன்னிலே உள்குழைகின்றார். “மேல் ஆகமூர்த்தியாய வண்ணம் என்கொல்!”- கீழ்க்கூறிய பற்பல திருவுருவங்களை ஏற்றுக் கொண்டதுமல்லாமல் இப்படிப்பட்ட ஊர்வாத்மா பரதந்த்ரமான தொரு நிலைமையை ஏற்றுக்கொண்டவிது என்ன ஸௌலப்ப பரமகாஷ்டை! என உள்குழைகிறபடி ஆதிதேவனே! = ஜகத்துக்கெல்லாம் ஆதிகாரணமாயிருக்கிற நீ கார்யவர்க்கத்துக்குள்ளே அதிக்ஷûத்ரனாயிருப்பானொரு சேதானுடைய விருப்பத்துக்கிணங்கி நடப்பது என்ன வித்தகம்! என்று கேட்கிறபடி.
கீழ் “நரசமூர்த்தி சயனமாய்” என்றும் “தடங்கல்பணத்தலைச் செங்கணாகணைக் கிடந்த” என்றும் க்ஷீரஸநகரசயநம் ப்ரஸ்துதமானவாறே திருவுள்ளம் அங்கே ஆழங்காற்பட்டு அந்நிலையிலே அபிநிவேசாதிசயம் தோற்ற அருளிச்செய்கிறார். “விடத்தவாயொராயிர மிராயிரங்கண் வெந்தழல் விடுத்து” என்னுமளவால் “ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு” (என்முகன் திருவந்தாதி.) என்ற அர்த்தத்தை அருளிச்செய்தபடி. ஆபத்து நேருவதற்கு ப்ரஸந்தியற்ற இடத்திலுங்கூட ஆதராதி சயத்தினால் ஆபத்தை அதிசங்கித்துக் காப்பிடுந்தன்மை நித்யஸுரிகளுக்கெல்லாம் உண்டாயிருக்கச் செய்தேயும் திருவனந்தாழ்வானுக்கு அது விசேஷித்திருக்குமாய்த்து. வீழ்வு இலாத போகம் = “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாய் நின்றால் மாவடியாம். நீள்கடலுள்- என்றும், புணையாமணிவிளக்காம் பூம்பட்டாம் புக்கு மணையாந் திருமாற்கரவு.” என்றபடி பஹுமுகாமகத்திருமால் திறத்தில் கிஞ்சித்கரிக்கும் தன்மையினால் பகவதநுபவமாகிற போகததிற்கு எப்போதும் விச்சேதமில்லாதவன் என்கை. மிக்க சோதி = பகவதநுபவம் மாறாதே செல்லுமவர்கட்கு விலக்ஷணமானதொரு ஜேஸ்ஸு உண்டாகக் கடவதிறே; அதனைச் சொல்லுகிறது.
மேன்மை எல்லைகாண முடியாதாப்போலே நீர்மையும் எல்லைகாண வொண்ணாதபடி யிருக்குமாற்றை அநுபவித்து ஈடுபடுகிறார். க்ஷீரஸாகரசாயித்வமும் லக்ஷ்மீபதித்வமும் பராத்பரத்வப்ரகாசகமாதலால் “பரத்திலும் பரத்தையாதி” என்றதற்கு உபபாதகமாக அவ்விரண்டையும் அருளிச்செய்தார். பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியனத்திற்கு அரும்பதவுரை வரைந்த வொருவர்- “பரத்தையாதி யென்றது- ‘பரத்தையாகி’ என்று பாடமாக வேணுமென்று கண்டு கொள்வது” என்றெழுதிவைத்தது மறுக்கத்தக்கது. ஆதி என்பது ‘ஆ’ என்னும் வினைப்பகுதியடியாப் பிறந்த நிகழ்கால முன்னிலை யொருமை வினைமுற்று என்பதை அவர் அறிந்திலர். ஆதி= ஆகின்றாய் என்றபடி. பரத்தை = முன்னிலை; படர்க்கையில் பரத்தன் என்றாம். மேற்பட்ட வஸ்துக்களிலும் மேற்பட்ட வஸ்துவாக இராநின்றா யென்கை. நரத்திலும் பிறத்தி = ராமகிருஷ்ணாதிரூபேண மனுஷ்ய ஜாதியிலும் பிறக்கின்டறா யென்கை. நினாது = நினது என்றதன் நீட்டல்.
(உடைந்தவாலி தந்தனுக்கு.) ‘உடைந்த’ என்ற அடைமொழி வாலிக்கும் ஆகலாம்; வாலிதம்பிக்குமாகலாம். உடைதல்- தளர்வு. வாலி, ‘நமக்குப் பகையான ஸுக்ரீவன் நாம் புகவொண்ணாதரிச்யமூகமலையிலே ஹனுமானைத் துணைகொண்டு வாழாநின்றான்; எந்த ஸமயத்திலே நமக்கு என்ன தீங்கை விளைப்பானோ’ என்று உடைந்து கிடப்பவன். ஸுக்ரீவனுடைய உடைதல் சொல்ல வேண்டா. “வாலி தன்பீனுக்கு” எனப் பாடமிருந்திருக்க மென்பர்.
ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு அபயப்ரதாநம் செய்தருளினாற் போலவும் அர்ஜுநனை நோக்கி “மாசுச:” என்றாற்போலவும் அடியேனைநோக்கி அஞ்சேல் என்றருளிச் செய்யவேணும் பிரானே! என்கிறார். “முன்கடைந்த நின்றனக்கு” என்றும் பாடமுண்டு. அஞ்சல்- எதிர்மறை வினைமுற்று.
புறப்பண்டான விஷயங்களில் விருப்பத்தை விலக்கி உன்னளவில் அபிநிவேசத்தைப் பிறப்பித்து கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கும்படி அடியேனை இவ்வளவு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்த நீதானே என்னை உபேக்ஷித்து விஷயாந்தர ப்ரவணானகக் கெட்டுப்போகும்படி ஒருகால் கைவிட்டபோதிலும் உன்னையொழிய வேறொரு கதி இல்லை யெனக்கு என்று தம்முடைய அத்யவ ஸாயத்தை அருளிச்செய்கிறார். ஆசார்யனுடைய நல்ல உபதேசங்களைக்கொண்டும் சாஸ்த்ர பரிசயத்தைக் கொண்டும் இந்திரியங்களை அடக்கப்பார்த்தால் அடக்கமுடியாத இவ்விந்திரியங்களை உன் திவ்யமங்கள விக்ரஹவலக்ஷண்யத்தைக் காட்டி ஈடுபடுத்தி விஷயாந்தாங்களில் போகாதபடி தகைந்து புருஷார்த்தங்களின் மேலெல்லையாகிய கைங்கர்ய ப்ரார்த்தனையிலேயே நிலைநிற்கும்படி உன் திருவருளுக்குப் பாத்திரமாøகி நின்ற என்னை நீ உபேக்ஷிப்பதாகத் திருவுள்ளம்பற்றி எனது உஜ்ஜீவ நக்குஷியை முட்டமுடியா நடத்தாமல் இன்னும் விஷயாந்தரங்களிலேயே ருசியைப் பிறப்பித்து உன்னைவிட்டு நீங்கும்படி நீ செய்தாயாகிலும் என் மனம் உன்னைவிட்டு நீங்காது என்றவாறு. “என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்தன்னை அகல்விக்க தானுங் கில்லாணினி” என்ற நம்மாழ்வாரைப்போல அருளிச் செய்கிறபடி. மெய்செயாது= என்னை உஜ்ஜிவிப்பிக்க வேணுமென்ற திருவுள்ளத்துடன் தொடங்கின க்ருஷிகளை மெய்யாகத் தலைகாட்டாமல் என்கை.
தூயனாயும் அன்றியும் = என்னை ஒருவிதத்திலே பார்த்தால் பசுசுத்ததென்னலாம்; மற்றொருவிதத்திலே பார்த்தால் அபரிசுத்தனென்றும் சொல்லலாம்;- தேவரீரைப் பரமனை பரிசுத்தாக அநுஸந்திப்பதே எனக்கு சுத்தியாதலால் அந்த விதத்தாலே அடியேன் சுத்தனாகவுமாம்; அஹங்கார மமகாரங்களால் நிறைந்திருக்றேனாதலால் அந்த விதத்தாலே அபரிசுத்தனாகவுமாம்; சுத்தனாயோ அசுத்தனாயோ தேவரீரை வணங்கித் துதித்துவிட்டேன்; இனி க்ஷமிப்பதே நலம்.
‘தெய்வம் உண்டு’ என்று ஆதரவோடு அங்கீகரியாவிடினும் ‘தெய்வம் உண்டு’ என்று ஒருவன் சொன்னால் அதில் ஆக்ஷேபாதிகளாலே பகைமை பாராட்டாதிருக்கும் நிலை - அத்வேஸ் மெனப்படும்: இதுவே பரமபக்திக்கு முதற்படி எனப்படும். ஒருவஸ்துவில் ஒருவனுக்கு த்வேஷம் குடிகொண்டிருந்தால் அவன் அவ்வஸ்துவைப்பற்றிச் சிந்திக்கவே முடியாது: அன்றி, ‘நேசமுமில்லை, த்வேசமுமில்லை’ என்கிற நிலைமையிலிருந்தால் அவன் நாளடைவில் அவ்வஸ்துவிடத்தில் பரமபக்திபர்யந்தமான அன்பைப் பெற்றுவிடக்கூடும் என்பது அனைவர்க்கு அநுபவம் ஸித்தமான விஷயம். ஆனதுபற்றியே அத்வேஷமென்பது பரமப்ரீதிக்கு முதற்படியாகக் கொள்ளப்புட்டிருக்கின்றதென்க.
ஹேயமான ஐச்வர்யம் அருளிச்செயல் கற்கைக்குப் பயனாகச்சொல்லத்தகுமோ வென்னில்; இவ்வாழ்வார் படைத்த பெருஞ் செல்வமெல்லாம் பகவத்பாகவத கைங்கரியங்களிலே உதவப்பெற்று உத்தேச்யகோடியில் புகக் கண்டதனால் எல்லார்க்கு மிங்ஙனேயாகக் கடவதென்று திருவுள்ளம்பற்றி யருளிச்செய்கிறாரென்னலாம். ஐச்வர்யார்த்திகளும் தம் ஸ்ரீஸூக்தியை இழக்கலாகாதென்று அவர்களையும் ஆகர்ஷிப்பதற்கு அருளிச் செய்தாராகவுமாம். இவ்வருளிச்செயல் ஐஹிக புருஷார்த்தத்தோடு ஆமுஷ்மிக புருஷார்த்தத்தோடு வாசியற எல்லாவற்றுக்கும் ஸாதநம் என்பது விளங்கும்
ஆழ்வார் கீழ்த்திருமொழியில் பட்ட வ்யதைமெல்லாத் தீர்ந்து மகிழ்ந்து பேசுந்திருமொழியாயிற்று இது என்னாதனைத் திருவரங்கத்தில் காணப்பெற்றேன் என்கிறார். கைம்மான மழகளிற்றை = ஓர் ஆனை கைகளையும் கால்களையும் பரப்பிக்கொண்டு கிடப்பதுபோலப் பள்ளிகொண்டிருக்கும் அழகில் ஈடுபட்டுச் சொல்லுகிறபடி. நீண்ட துதிக்கையை யுடையதாய்ப் பருவத்தாலே இளையதாயிருப்பதொரு ஆனை சாய்ந்தாற்போலே யிருக்கின்றவனையென்கை. “களிறுபோன்றவனை” என்னாது களிற்றை என்றது ஐக்கியமாகச் சொன்னது உவமையாகுபெயர். கடல்கிடந்த கருமணியை – ஒரு நீலரத்னம் சாய்ந்தாற்போலே திருப்பாற்கடலிலே கிடந்தவனை என்கை. மைம்மான மரதகத்தை – பசுமை, நீலம், கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவி மரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குக் கருமணியையும் மரதகத்தையும் உவமை கூறினர். மறையுரைத்த என்பதற்கு – ‘வேதங்களை உபதேசித்தருளின’ என்றும் வேதங்களால் பிரதிபாதிக்கப்பட்ட’ என்றும் இரண்டுவகையாகப் பொருள் ஆகும். பிந்தினபொருள் பாங்கு
யமதூதுர்கள் பாகவதர்களை அணுகமாட்டார்களென்றது கீழ்ப்பாசுரத்தில் அவர்கள் கிட்டாதமாத்திரமேயோ? அவர்கள் கள்ளர்போலே மறைந்தொளிந்து கிடக்கும் படியாயன்றோ உன் பிரபாவமிருப்பது என்கிறார் இப்பாட்டில். “சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன் பொறியொற்றி, வைத்த இலச்சினைமாற்றித் தூதுவரோடியொளித்தார்” என்றார் பெரியாழ்வாரும். நோவுபட்டுக் கூவுமடியார்களின் கூக்குரல் செவிப்படுவதற்கு அணித்தாகத் திருப்பாற்கடலிலே சிறுதிவலைகள் துடைகுத்தத் திருவனந்தாழ்வான்மீது உறங்குவான்போல் யோகுசெய்யும் பெருமானே! அத்தனை தூரமும் பொறாமல் திருக்கண்ணபுரத்திலே வந்து மிக அணியனாகவுள்ள பெருமானே! நான் யமதூதர்களுக்கு அஞ்சவேண்டிற்றுண்டோ? உனக்கு அடியனாகுமத்தனையே வேண்டுவது; யமபடர்கள் அவ்வளவிலே ஓடியொளிக்கப் பெறுவர்களன்றோ – என்றதாயிற்று.
கீழ்ப்பாட்டில், கிளிப்பிள்ளை திருநாமங்களைச் சொல்லக்கேட்டு ஆச்வாஸமடைந்து அதனையும் கௌரவித்தபடியைச் சொல்லி நின்றது. அந்த நிலைமைபோய்த் தன் வாயாலே திருநாமத்தைச் சொல்லி அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்; அந்த வீணையானது ஸம்ச்லேஷதசையிலே தன் படிகளையும் அவன்படிகளையும் இட்டு வாசிக்கப் பெறுவதாகையாலே அந்த வீணைமுகத்தாலே அவன்வடிவை ஸாக்ஷாத்கரித்து அந்த வீணையை அவனாகவேகொண்டு, அவனோடு ஸம்ச்லேஷிக்குமிடத்திற் பண்ணும் வியாபார விசேஷங்களை இவ்வீணையிலே பண்ணா நின்றாள்; இவள் உணர்ந்தாள் என்னவாய்த் தலைக்கட்டப் புகுகிறதோ வென்று திருத்தாய் இன்னாப்போடே பேசும் பாசுரம் இது. கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சிமேய களிறென்றும் = கல்லாலே செய்யப்பட்டுப் பிரதிகூலர்க்கு அணுகவொண்ணாதபடி ஓக்கத்தையுடைத்தாய், உள்ளுக்கிடக்கிற யானைக்கு யதேச்ச விஹாரம் பண்ணுதற்குப் பாங்கான விஸ்தாரத்தையுமுடைத்தான திருமதிளாலே சூழப்பட்ட திருக்கச்சிமாநகரில் நித்யவாஸஞ்செய்கின்ற மத்தகஜமே! என்றும். இங்குக் கச்சிமேயகளிறு என்கிறது திருப்பாடகத்து நாயனாரை என்பர் பெரியவாச்சான்பிள்ளை. திருவத்திமாமலையில் நின்றருளாநின்ற பேரருளாளப் பெருமாளை என்று அருளிச்செய்திருக்கலாம்; அவருடைய திருவுள்ளமங்ஙனே நெகிழ்ந்தபடி. திருப்பாடகத்து நாயனாராக அருளிச்செய்தற்கு ஒருபொருத்தமுண்டு ; “நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து, அன்று வெஃகாணைக் கிடந்தது – என்று திருமழிசைப்பிரான் அநுபவித்தபடியை இம் மூன்றுஸ்தலத்திலும் அநுபவிக்கிறாள் இவள்“ என்றுமேலே நிர்வஹித்தருளுகையாலே அதற்குப் பொருந்தும், திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருக்கோலமுமாக அநுபவிக்கிறாரென்று நிர்வஹிப்பதில் ஒரு சமத்கார அதிசயமுண்டு காணும். கடல்கிடந்த கனியே யென்றும் = கச்சிமேய களிறு தோன்றினவிடம் திருப்பாற்கடல் போலும். அதிலே பழுத்த பழம்போலே கண்வளர்ந்தருளுகிற பரமபோக்யனே! கனியானது கண்டபோதே நுகரத்தக்கதும் புஜிப்பாரைப் பெறாதபோது அழிந்துபோவதுமாயிருக்கும்; அப்படியே தன்னை யநுபவிப்பார் தேட்டாமாய் அவர்களைப் பெறாதபோது தான் அழியும்படியா யிருப்பன் எம்பெருமான். போக்தாக்களைக் குறித்து அவஸா மெதிர்பார்த்திருப்பவன் எனக்கு முகங்காட்டாதொழிவதே! என்றும்“, போக்தர்களைப் பெறாதபோது அழியும்படியாயிருக்கிறவன் தன்னைப் பெறாதபோது முடியும்படியாயிருக்கிற வெனக்கு முகங்காட்டாதொழிவதே! என்றும் வருந்துவது தோன்றச் சொல்லுகிறபடி. அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழனவேலியணியழுந்தூர் நின்ற கந்த வம்மானென்னும் = தாதுமிக்கு நறுமணங் கமழ்ந்து அழகியவாயிருந்துள்ள புஷ்பங்களை யுடைத்தான தடாகங்களையும் நீர்நிலங்களையும் வேலியாகவுடையதாய், பிரதிகூலர்க்கு அணுகவொண்ணாததாய் அநுகூலர்க்குத் தாபஹரமாய்ப் பரமபோக்யமாயிருந்துள்ள திவ்யதேசத்திலே ஸம்ஸாரிகள் ஆச்ரயிக்கலாம்படி நின்று, அவர்கள் தன் நிலையழகையும் அதுக்கடியான திருக்குணங்களையு மநுஸந்தித்துத் திருவடிகளைக் கிட்டினால் உகப்பானும் தானேயாயிருக்கும் பெருமானே! – என்றிங்ஙனே சில திருநாமங்களை யிட்டுப்பாடி. சொல்லுயர்ந்த நெடுவீணைமுலைமேல்தாங்கி = ‘கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ்கச்சிமேய களிறு‘ இத்யாதிகளை வீணையிலேட்டுப் பாடினாள்; வீணையை ஸ்வர்சித்வாறே நாயகன் ஸம்ச்லேஷதசையில் தன்னுடைய போக்யதையையும் இவளுடைய யோக்யதையையும் வீணையிலேறிட்டு வாசிக்கும்படியை ஸாக்ஷாத் கரித்து, அதைத் தடவும் திருக்கையை ஸாக்ஷாத்கரித்து, அதுக்கு ஆச்ரயமான திருத்தோளை ஸாக்ஷாத்கரித்து, அதுக்கு ஆச்ரயமான வடிவையும் ஸாக்ஷாத்கரித்து அவனை ஸம்ச்லேஷதசையிலே தன்மார்பில் ஏறிட்டுக்கொள்ளுமாபோலே வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள்; “க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பார்த்து; கரவிபூஷணம் – பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“ (ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னு ங் கணக்கிலேயாருற்று இதுவும். திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கைநீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல. தூமுறுவல் நகை இறையே தோன்ற நக்கு = வீணையை முலைமேல் தாங்கினவாறே அவனையே ஸ்பர்சித்ததாக நினைக்கையாலுண்டான மகிழ்ச்சியால் பல்வரிசைகள் சிறிதே பிரகாசிக்கும்படி புன்முறுவல் செய்து, ஸுருமாரமாய் இயற்கையாகவே சிவந்துள்ள விரல்கள் இன்னமும் சிவப்புமல்கும்படி தந்திக்கம்பிகளை வெருடி அதுக்குமேலே கிளிபோல வும் மிக மிழற்றத் தொடங்கினாள் என்றாளாயிற்று. என்பேதையே = என்வயிற்றிற்பிறந்த சிறுபெண் இவையெல்லாம் எங்கே கற்றாள்! என்றவாறு.
‘என்னுள்ளம் உரைமேற்கொண்டு ஏத்தியெழும்” என்றதனால் –நெஞ்சு தந்தொழிலாகிய சிந்தனையோடு நில்லாமல் வாக்கின் தொழிலையும் ஏற்றுகொண்டமை கூறப்பட்டது. திருவாய்மொழியில் “முடியானே மூவுலகுந் தொழுதேத்தும்” என்ற பாசுரத்தை இங்கே நினைப்பது . “உரைமேற்கொண்டு” என்பதை ‘மேல் உரைகொண்டு” என்று மாற்றி மேலான சொற்களைக் கொண்டு என்று முரைக்கலாம். [வரைமேல் மரகதமேபோலத் திரைமேற்கிடந்தானை.] திருப்பாற்கடலிலே எம்பெருமான் பள்ளிகொண்டிருப்பது- வெண்ணிறமானதொரு மயிலில் மரகதக்கல்லைப் பதித்தாற் போன்றிருப்பதாக அபூதோபமை கூறப்பட்ட்தென்க. [கீண்டானை.] ‘இரணியன் பார்வை’ என்பது மூலத்திலில்லையாயிலும் கீண்டா னென்னும்போதே ‘இரணியன் மார்வு’ ஞாபகத்திற்கு வந்துவிடும். இரணியனுடலைக் கீண்டது போலவே, குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமஸுரனது வாயைக் கீண்டதும் பகாஸுரனுடைய வாயைக் கீண்டது முண்டாதலால் அவையும் நினைவுக்குவரின் அவற்றையும் கொள்ளத் தட்டில்லை. அன்றியே, “ கேழலாய்க் கீண்டானை இடந்தானை” என்று சேர்த்து வராஹரூபியாய் அண்டபித்தியிலே ஒட்டின பூமியை அதனின்று ஒட்டு விடுவித்துப் பிறகு கோட்டாற் குத்தியெடுத்தவனை என்று பொருள் கூறுவதும் பொருந்தும். “திரைமேற்கிடந்தானைக் கீண்டானை” என்ற சேர்த்தியால்- எம்பெருமான் ‘நம் அடியார்க்கு எப்போது என்ன தீங்கு வருமோ’என்ற சிந்தனையுடனே சயனித்திருப்ப, துன்புற்ற அடியாரின் கூக்குரல் செவிப்பட்டவுடனே பதறி அத்துன்பத்தைத் தீர்க்க ஏற்றதொரு திருக்கோலங்கொண்டு இங்குத்தோன்றி ரக்ஷித்தருள்கிறானென்பது விளங்கும். இப்படிப்பட்ட எம்பெருமானை எனது நெஞ்சு இடைவிடாது துதித்து உஜ்ஜீவிக்கின்றது என்றாராயிற்று.
ஸமயத்தில் ஆச்ரிதர்களுக்கு வந்து உதவுகைக்காகத் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளும் திருக்குணத்தி லீடுபட்டு அப்பெருமானது திருவடிகளிலே நல்ல மலர்களைக் கொண்டு ஸமர்ப்பித்து ஆராதிக்குமவர்கள் பரஞ்சோதியான பரமபதத்திலே சென்று புகப்பெறுவர்; இந்திரன் முதலிய தேவர்களும் அப்பரமபதத்தை இன்னமும் காதால் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே யொழிய கண்ணால் கண்டு சேரப் பெற்றார்களில்லை; அப்படி தேவர்கட்கும் அரிதான பரமபதத்தை அநந்ய ப்ரயோஜநரான பக்தர்கள் அடையப்பெறுவர் என்கிறார். “புகப்பெறுவர்போலாம்” என்றவிடத்து ‘போல்’ என்பது ஒப்பில் போலியாய் வந்தது வடமொழியில். “கிமில் ஹி மதுராணாம்” இத்யாதி ஸ்தலங்களில் இவசப்தம்போலே வாக்யாலங்காரமென்க. புரிவார்கள் தொல்லமரர் கேள்வி - புரிவார்களான தொல்லமரருண்டு. முழுகுவது மூக்கைப் பிடிப்பது ஜபிப்பது முதலிய ஸாதநாநுஷ்டங்களைச்செய்பவரான தேவர்கள்; அவர்களுடைய செவிப்புலனுக்கு மாத்திரம் இலக்கானதேயன்றி, கட்புலனுக்கு இலக்கானதன்று பரமபதம். ஆழ்வானருளிய ஸ்ரீவைகுண்ட ஸ்தலத்தில் “யத் ப்ரஹம் ருத்ர புருஹூதமுகைர் துராபம் நித்யம் நிவ்ருத்தி நரதைஸ் ஸநகாதி பிர்வா” என்றதும், பிள்ளைப் பெருமாளையங்காரருளிய திருவேங்கடமாலையில் “கேட்டமரர் வேட்டுத் தளர்வாகுமந்தரத்தான்” என்றதும் காண்க. சாஸ்த்ரங்களில் பரமபதத்தைப் பற்றிச் சொல்லுமிடத்து “அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர்மஹாத்மந:” (ஸூர்யன் அக்நிமுதலிய சுடர்ப் பொருள்களிற் காட்டிலும் மிக விஞ்சி விளங்குவது) என்று சொல்லப்பட்டிருத்தலால் ‘துலங்கொளி சேர் தோற்றத்து’ என்றார்.
கீழ்ப்பாட்டில் “கோல்தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்” என்னும்படியாக ஆசை கரைபுரண்டு செல்லப்பெற்ற மதமுடைய திருவுள்ளத்திலே திருவேங்கடமுடையான் அழகிய மணவாளன் திருப்பாற்கடல் நாதன் பரமபதநாதன் ஆகிய எம்பெருமான்க ளெல்லாரும் வந்து குடிகொண்டபடியைக் கூறுகின்றாரிதில். தேவாதிதேவனான பரமபத நிலயன் ஜகத்ரக்ஷணார்த்தமாக முதலில் திருப்பாற்கடலில் வந்து தங்கிப் பின்பு ஸ்ரீக்ருஷ்ணனாயவதரித்து ‘இப்படி நாம் வருவதும்போவதுமாக இராமல் ஸ்திர ப்ரதிஷ்டையாக இருந்து ஸம்ஸாரிகளைக் காக்க வேணும்’ என்று திருவுள்ளம் பற்றிக் கோயில் திருமலை முதலிய திருப்பதிகளிலே யெழுந்தருளியிருந்து இப்போது என்னெஞ்சிலே வந்து கிடக்கிறானென்கிறார். இப்பாட்டில் ‘மனத்துள்ளான்’ என்பது முதலிலேயிருந்தாலும் அர்த்தஸ்வாரஸ்யம் நோக்கி அது முடிவுசொல்லாகக் கொள்ளப்படும். தேவாதி தேவன் - வடசொல் தொடர்.
எம்பெருமானுடைய திருநாம ஸங்கீர்த்தநம் பண்ணினால் எல்லாவகை நன்மைகளும் வந்துகூடு மென்றார் கீழ்ப்பாட்டில், எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை உள்ளபடியே உணருகையாகிற நன்மையும் உண்டாகுமோ என்று கேள்விபிறக்க, எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை உணர்வது மாத்திரம் அருமையான தென்கிறார் இதில். நால் வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்டவனாய், ‘தேன் தோற்றது‘ என்னும்படியான போக்யதையுடைய விலக்ஷண திவ்யமங்கள விக்ரஹமுடையனாய், திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளர்ந்தருளுமவனாய், மநு முதலிய மஹர்ஷிகளினால் வேதங்களுக்கு உபப்ரும்ஹண (வியாக்கியான) மாக இயற்றப்பட்ட ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களினால் பிரதி பாதிக்கப்பட்டவனான எம்பெருமான், நுண்ணறிவினான் – நுட்பமான அறிவையுடையவன், அதாவது – அவனை அறிவது மிகவும் நுட்பமானது – அஸாத்யமானது என்றபடி. “நுண்ணறிவினான்“ என்பதற்கு – ஸூக்ஷ்மமான ஜ்ஞாநத்தாலே அறியக்கூடியவன், (நம் போன்றவர்களுடைய ஸ்தூலமான ஜ்ஞாநத்தாலே அறியக்கூடாதவன்) என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டாமடியில், ஓதம் + அருவி, ‘ஓதமருவி‘ என்றாக வேண்டுவது ‘ஓதருவி‘ என்றானது தொகுத்தல்.
கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்த திவ்யஸ்தலங்கள் ஆழ்வார் திருவுள்ளத்தைவிட்டுப் பேராமல் அநுவர்த்திக்கவே, பின்னையும் இவையவன் கோயில் என்கிறார். “கடல் குடந்தை வேங்கடம் என் சிந்தை நிறைவிசும்பு வாய்ந்தமறை பாடகம் அனந்தன்“ என்று கீழ்ப்பாட்டிற் சொன்னவற்றையே இங்கு ‘இவை‘ என்று சுட்டிக்காட்டினார். நரசிங்கவுருக்கொண்டு ஹிரண்யாஸுரனுடைய மார்பைப் பிளந்தவனும் சேஷசயனத்தில் திருக்கண் வளர்ந்தருள்பவனும் நான்கு தேங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனும், அஹங்காரியான ருத்ரனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து ஆதரிப்பவனும் திருப்பாற்கடலி லுள்ளபவனுமான எம்பெருமானுக்குக் கீழ்ப்பாட்டிற் சொன்ன தலங்கள் உகந்து வாழுமிடமாயிருக்கின்றன – என்றாராயிற்று. அவை செய்தல் – இருபிளவாகச் செய்தல். செய்து – எச்சத்திரிபு, செய்ய என்க. அன்றியே, உருபு பிரித்துக்கூட்டி, ‘அரியுருவமாய் இரணியனதாகம் அவையெதான்‘ என்றும் யோஜிக்கலாம். சேவிதெரியா நாகத்தான் – பாம்புக்கு வடமொழியில் ‘சக்ஷுச்சரவஸ்‘ என்றும், தென்மொழியில் ‘கட்செவி‘ என்றும் பெயர் வழங்கும். கண்ணைக்கொண்டே காண்பதும் கேட்பதும் செய்தல் பாம்புஜாதியின் இயல்வாம், ஆகவே செவிகள் தனிப்படத்தெரியா. இங்கு இந்த விசேஷணம் திருவனந்தாழ்வானுக்கு ஏதுக்கு இட்டதென்னில், ஒரு இந்திரியத்தாலே பல இந்திரியங்களின் காரியங்களை நிர்வஹிப்பதுபோல, “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும் புணையாமணிவிளக்காம் பூம்பட்டாம் புலகுமணையாம் திருமாற்கரவு“ என்கிறபடியே ஒரு திருமேனியைக் கொண்டே பல கைங்கரியங்களும் செய்பவன் திருவனந்தாழ்வான் என்று காட்டுதற்கென்க.
இப்பாட்டிலும் எம்பெருமானிருப்பிடங்களைச் சொல்லுகிறார். திருப்பாற்கடல் திருவேங்கடம் திருவனந்தாழ்வான் ஸ்ரீவைகுண்டம் வேதவேதாங்கங்கள் யோகிகளின் உள்ளக் கமலம் ஆகிய இவற்றை இருப்பிடமாகக் கொண்டவனென்றாராயிற்று. பனிவிசும்பு – ஸம்ஸாரத்தில் பட்ட தாபங்களையெல்லாம் ஆற்றிக் குளிரப்பண்ணும் பரமபதம் என்கை. நூற்கடல் – கடல் போன்றிருக்கிற ச்ருதிஸ்மிருதி இதிஹாஸம் புராணம் முதலிய சாஸ்த்ரங்கள். (நுண்ணூல தாமரையித்யாதி) என்று வேதத்திற் சொல்லப்பட்ட யாதொரு தாமரையுண்டு – ஹ்ருதயகமலம், அதிலே ஸமஸ்த கரணங்களும் ப்ரவணமாம்படி யோகத்தில் ஊன்றியிருக்கிற பரம யோகிகளுடைய மநஸ்ஸைச் சொன்னபடி. என்ற வரதராஜஸ்தவ ஸ்ரீஸூக்தி உணர்க. இனி நுண்ணூலதாமரை யித்யாதிக்கு வேறுவகையாகவும் பொருள் கூறலாம். நுட்பமான நூலையுடைத்தான் யாதொரு தாமரையுண்டு, அதன்மேல் பொருந்தியிருக்கும் பெரியபிராட்டியாருடைய, மனம் –திருமார்பு, அதாவது திருமுலைத்தடம் என்று, பெரியபிராட்டியாருடைய நெஞ்சையே கொள்ளவுமாம். தாமரை நாளத்தில் நுட்பமான நூல் இருப்பது ப்ரஸித்தம். மேற்பால் – மேலிடத்தில், மேலே என்றபடி. குருந்தொசித்த வரலாறு – கண்ணனைக் கொல்லுமாறு கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் ஒருவன் ஒருநாள் கண்ணபிரான் மலர் கொய்தற்பொருட்டு விரும்பியேறும் குருந்தமாமொன்றில் பிரவேசித்து அப்பெருமான் வந்து தன்மீது ஏறும்போது தான் முறிந்துவீழ்ந்து அவனை வீழ்த்திக் கொல்லக்கருதியபோது மாயவனான கண்ணபிரான் அம்மரத்தைக் கைகளாற்பிடித்துத் தன்வலிமைகொண்டு முறித்து அழித்தன்னென்பதாம்.
கீழ்பாட்டில் “ஆருமறியாரவன் பெருமை“ என்றதை விவரிக்கிறாரிதில். அப்பெருமான் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட விதத்தையும் திருவரங்கத்தில் வந்து சேர்ந்த விதத்தையும் ஆலந்தளிரில் பள்ளிகொண்ட விதத்தையும் ஆர் அறிவார்? என்கிற விதற்குக் கருத்து யாதெனில்; தன் தாளுந்தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பித் திருப்பாற்கடலில் சயனித்தருளுமழகிலே நான் ஈடுபட்டிருக்கும் வண்ணமாக ஈடுபட்டிருப்பார் ஆருமில்லை, “பாலாழி நீகிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்“ என்றாற்போலே அக்கிடையில் வியாமோஹித் திருப்பவன் நானொருவனே, திருவரங்கம் பெரிய கோயிலில் உபய காவேரீ மத்யத்தில் “என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே“ என்னும்படியே பரம போக்யமாகவும் அத்யந்த ஸூலபமாகவும் ஸந்நிதிபண்ணி ஸேவைஸாதித்தருளுந் திறத்தில் ஈடுபட்டு “இஃது என்ன போக்யதை! இஃது என்ன ஸெளலப்யம்” என்று அக்குணங்களை வாய்வெருவுகின்றவன் நானொருவனே, உலகங்களைப் பிரளய வெள்ளம் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துநோக்கி ஒரு சிற்றாலந்தளிரின் மேல் திருக்கண்வளர்ந்தருளின அகடிதகடநா ஸாமர்த்தியத்தைப் பாராட்டிப் பேசுவார் ஆரேனுமுண்டோ? அந்த சக்தி விசேஷத்தை மெச்சுகிறவன் நானொருவனே – என்பதாம். ஞாலத்து ஒரு பொருளை – கார்யரூபமான ஸகலப்ரபஞ்சங்களுக்கும் “***“ என்கிறபடியே துணையற்ற காரணவஸ்துவாயிருப்பவன் என்று முரைக்கலாம். வானவர்தம் மெய்ப்பொருளை – தனது திருமேனியை நித்யஸூரிகளுக்குப் பூர்ணாநுபவம் பண்ணக் கொடுத்தருள்பவனென்றவாறு. அப்பிலருபொருளை – வடமொழியில் “அப்“ என்பது ஜல வாசகம் “***“ என்னும் வட்சொல் தமிழில் “அப்பு“ என்றாயிற்றென்றலுமுண்டு. 1. “***“ என்றும் 2. “நன்மைப்பனல்பண்ணி“ என்றும் சொல்லுகிறபடியே முதன் முதலில் ஜலதத்துவத்தை ஸ்ருஷ்டித்து அதிலே கண்வளர்ந்து ஒப்பற்ற காரணப்பொருளாயிருப்பவன் என்கை. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை அவனது நிர்ஹேதுக கிருபையினால் நான் அறிந்தவிதம் ஆச்சரியம்! என்று தலைக்கட்டினவாறு அன்றியே, யானறிந்தவாறு – யானறிந்த வண்ணமாக, ஆர் அறிவார் -, என்று கீழாடே கூட்டி ஏகவாக்கியமாக யோஜிக்கவுமாம்.
கீழ்பாட்டில் “ஐந்தலைவாய் நாகத்தணை – கிடந்தருளும்“ என்று சேஷசயநம் ப்ரஸ்துதமாகையாலே இங்ஙனே திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டு ஸேவைஸாதிக்கப் பெற்ற திருப்பதிகளுள் சிலவற்றைப் பேசியநுபவிக்கிறார். அன்பருடைய அந்தரங்கத்திலே புகுவதற்கு ஸமயம் எதிர்பார்த்துக் கொண்டு திவ்யதேசங்களிலே தங்கியிருக்கிறானென்பதும் இதில் அநுஸந்திக்கப்படுகிறது. திருக்குடந்தைத் திருவெஃகா, திருவெவ்வுளுர், தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய ஏழு தலங்களில் நாகத்தணையிலே கிடந்தருள்வது அன்பருடைய ஹ்ருதயத்திலே புகுருகைக்கு அவஸர ப்ரதீக்ஷையாலே யென்கை. வெஃகா – கச்சித்திருப்பதியில் ஸ்ரீயதோக்தகாரிஸந்நிதி. திரு எவ்வுள் – எம்பெருமான் சாலிஹோத்ர மாமுனிவனுக்குப் பிரத்ய க்ஷமாகி ‘வஸிப்பதற்கு உரிய உள் எவ்வுள்?‘ என வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளூர் என்று திருநாம்மாயிற்றென்பர். “கிம்க்ருஹம்“ என்பது ஸம்ஸ்க்ருதவ்யவஹாரம். பேர் – அப்பக்குடத்தான் ஸந்நிதி. அடிதோறும் ‘நாகத்தணை‘ என்றது போக்யதாசிசயம் தோற்ற. அணைப்பார் கருத்தனாவான் என்று கீதையிற் சொல்லுகிறபடியே எப்போதும் எம்பெருமானோடு அணைந்தேயிருக்கவேணு மென்று ஆசையுடையார் ‘அணைப்பார்‘ என்ப்படுவர், அவர்களுடைய, கருத்தன் – கருத்திலே (திருவுள்ளத்தில) பொருந்தினவானாக, ஆவான் – ஆவதற்காக என்றபடி. எம்பெருமானுக்கு, பரமபதம் திருப்பாற்கடல் கோயில் திருமலை பெருமாள்கோயில் முதலான உகந்தருளின விடங்களில் இருப்பத்திற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறான் என்றும், ஆகவே திவ்யதேசங்களில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில்வாஸமே புருஷார்த்னுக்கு திவ்யதேசவாஸத்தில் ஆதரம் மட்டமாய்விடு மென்றும் ஸ்ரீவசநபூசணத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச் செய்ததெல்லாம் இப்பாசுரத்தையும் மூலமாகக் கொண்டதாகும். “கல்லுங்கனைகடலும் வைகுந்தவானாடும், புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்! – வெல்ல, நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்“ என்று நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் அருளிச்செய்த பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தகும்.
எம்பெருமானொருவனையே துதிப்பதற்கென்று படைக்கப்பட்ட நாவைக் கொண்டு அற்ப மனிதர்களைக் கவிபாட மாட்டேனென்று தமது உறுதியை வெளியிடுகின்றார். சடைமுடியனானவற்றைக் கொண்டு ஆராதித்து அநுவர்த்தித்தாலும் நித்யஸூரிஸேவ்யனான தனக்கு இது ஒரு பெருமையன்றாகையாலே இதனால் சிறிதும் மகிழ்ச்சி கொள்ளாத ஸ்ரீவைகுண்ட நாதனுடைய திருவடிகள் மேல் கவிபாடுதற்கே ஏற்றநாவைக் கொண்டு மானிசரைப் பாடுதல் தகாது என்றதாயிற்று. இவ்வாழ்வார் காலத்தில் வாழ்ந்த இவரது சிஷ்யரான கணிகண்ணன் வாக்கினால் தான் ஒரு பாடல் பெறக்கருதிப் பெருமுயற்சி செய்தும் பெற்றிலனென்பத இவ்வாழ்வார்வைபவத்தில் விரியும். சிஷ்யருடைய உறுதியே அங்ஙனிருக்கும்போது ஆசாரியரான இவரது உறுதியைப் பற்றிச் சொல்லவேணுமோ?
பகவத் விஷயத்தில் ருசிடையவர்கள் எம்பெருமானை யநுபவிப்பதற்கு ஏகாந்தமான பரமபதத்தை யடையவேணுமென்னும் விரைவினால் தத்விரோதியான தங்கள் சரீரத்தை வியாதியாகக் கொண்டு தங்களுடைய வாய்ந்தமனத்திலே அவனை இருத்தவேணுமென்னும் விருப்பமுடையவர்கள், தங்களுக்கென்றே ஏற்பட்டிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தை ‘பெற்றபோது பெறுகிறோம்‘ என்று ஆறியிருக்கையன்றியே ‘கூவிக்கொள்ளுங் காலமின்னங்குறுகாதோ‘ என்று விரைந்தவராய்க்கொண்டு, ‘அதற்கு இடையூறாயிருக்கின்ற இவ்வுடல் என்றைக்குத் தொலையப்போகிறது!‘ என்று வியாதியைக் கழிக்க விரும்பிக் கிடப்பாரைப் போலே கிடப்பர்கள் என்றாராயிற்று.
நாயகனைப் பிரியாத பாக்கியம் பெற்ற மகளிர்களின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கும் பாசுரம் இது. வேதம் வல்லவனாய் சுத்தமான யஜ்ஞோபவீத மணிந்தவானய் மேலுலகத்தார் துதிக்குமாறு அவர்கட்குத் தலைவனாக நிற்பவனாய்ப் பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினுள் வைத்து நோக்குபவனாய்த் தனக்கொரு தலைவனையுடையனாகாதவனாய் உலகத்தையளந்த திருவடியையுடைவனாய்த் திருப்பாற்கடலில் க்ஷேசாயியாகி யோகந்துயிர் கொண்டருள்பவனாய்க் குளிர்ந்த தன்மையயுடைவனான எம்பெருமானையே இடைவிடாது வணங்கி யநுபவிப்பவர் யாரோ, அவர்கள் பரமபதத்தில் வாழும் நித்ய முக்தர்களிற் காட்டிலும் சிறப்புடையராவர் என்கிறது. நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை சிறப்புடையராவர் என்கிறது. நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை யாற்றுவிக்கிற தோழியை நோக்கி, ‘நாயகனைப் பிரியாமல் அவனுடன் என்றுங்கூடி வாழ்பவர் முத்தியுலகத்துப் பேரின்பம் நுகர்வாரினுஞ் சிறப்புடையாராவர், என்ற இதனால் ‘அப்படிப்பட்ட பாக்ய விசேஷத்தை யான் பெற்றிலனே!’ என்று தன் ஆற்றாமை மிகுதியை வெளியிட்டாளாயிற்று. ஸ்ரீதேவியும் பூதேவியும் ஒருகாலும் விட்டுப் பிரியாது திருவடி வருடக் கூடிக்குலவி யின்புற அவர்களுடன் அறிதுலமருந்தன்மையை ‘பாற்கடல் பாம்பணைமேற் பள்ளிகொண்டருளுஞ் சீதனை’ என்றதனால்குறிப்பிட்டு,அப்படிப்பட்ட இடையீடில்லாப் போகம் தனக்குக் கிடையாமையைப் பற்றிப் பொறாமையும் வருத்தமுங் கொண்டவை கொள்க.
நைச்சியங்கொண்டாடி அகலப் பார்ப்பது தகாது, எப்படியாவது அவனை அணுகப் பார்ப்பதே நன்று என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார் தாம் அணுகி அநுபவிக்க இழிந்தார்; திருப்பாற் கடலிலே திருமால் பள்ளி கொள்ளுந் திறத்தை அநுபவிக்கத் தொடங்கும்போதே தாம் விகாரப்படும்படியைப் பேசுகிறார் இதில். ஒரு வெள்ளைக் கடலிலே ஒரு கருங்கடல் சாய்ந்தாற்போல், நீலமணி வண்ணானான நீ திருப்பாற்கடலிலே கிடந்ததோ கிடக்கையை சாஸ்த்ரமறிந்த மஹான்கள் சொல்ல நான் காதாற்கேட்ட மாத்திரத்திலும் ‘இப்படியும் ஒரு அழகுண்டோ!’ என்று ஈடுபட்டு, கால் நடைதாராமல் ஆழ்ந்து போகவும், நெஞ்சு நீர்ப்பண்டமாகக் கரைந்து அழிந்து போகவும், கண்கள் ஒரு வஸ்துவையும் க்ரஹிக்க முடியாமற் சுழலமிடவும் பெற்றேன் என்கிறார். “நீலாழிச் சோதியாய்! பாலாழி நீ கிடக்கும் பண்பை” எனச் சேர்த்து அந்வயித்துப் பரபாக சோபா ரஸத்தைப் பாங்காக அநுபவிக்க. நீலம் என்பது நீல் எனச் சிதைந்தது என்றாவது, நீல + ஆழி, (நீலவாழி என்றாகாமல்) வடமொழித் தீர்க்க சந்திபெற்றுக் கிடக்கிறது என்றாவது கொள்க. நின் + சார்ந்து, நிற் சார்ந்து, நைச்சியம் பேசிப் பின்வாங்குகை தவிர்ந்து உன்னை அணுகினேன்; அணுகினவாறே உன் சரிகைகளைக் கேட்க ஆவல் கொண்டேன்; க்ஷீராப்திசயன வ்ருத்தாந்த விஷயமாகச் சிறிது கேட்டேன்; கேட்டவுடனே விகாரமடைந்தொழிந்தேன். காதால் கேட்டதற்கே இவ்வளவானால் கண்ணால் காணப்பெற்றால் என்படுவேனோ அறியேன் என்றாராயிற்று. “தொல்வினை எம்பாற்கடியும் நீதியாய!” என்பதற்கு- நைச்சியம் கொண்டாடிப் பிற்காலிக்கையாகிற பழைய பாவத்தைப் போக்கடிக்கு மியல்வினனே! என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்; ஸகலவித பந்துவும் எனக்கு நீயேகாண்” என்கிறார். “ஓர் சுற்றத்தாருற்றா ரென்றில்லை” என்ற நிஷ்கர்ஷித்தே சொல்லலாமாயிருக்க அங்ஙனம் சொல்லாது “உற்றாரென்ற ஆரோ?” என்ற எம்பெருமானைக் கேள்வி கேட்பதன் கருத்துயாதெனில்; நாம் எம்பெருமானை இப்படி கேள்வி கேட்டால் அதற்கு அவன் சோதிவாய்திறந்து “வேறுயாருமில்லை; நானேயுளேன்” என்று உத்தரமருளிச் செய்திடுவான் என்ற கருத்துப்போலும். இரைக்கும் கடல்= எம்பெருமானுடைய நித்ய ஸந்நிதாநத்தாலே மகிழ்ந்து கொந்தளிக்கின்ற கடல் என்றபடி. எந்தாய்- ‘எந்தை’ என்பதன் விளி. ஓர் சொல் நன்றியாகுந்துணை= அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு “ஸர்வதர்மாந் பரித்யஜய் சரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:” என்று பிரதிஜ்ஞை பண்ணிச்சொன்ன ஒரு சொல்லாலே எமக்கு நீ துணையாவதுபோல வேறு ஆரேனும் ஆவாருண்டோ என்கை. ஸ்ரீ விபீஷணாழ்வானை வியாஜமாகக்கொண்டு “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே - அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று சொன்ன ஒரு சொல்லையும் இங்க அர்த்தமாகக்கொள்ளலாம். இவ்வகையாக சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களை நோக்கிப் பிரதிஜ்ஞைபண்ணி எந்தெந்தத் துணையாகத்தான் ஆவதாக அருளிச் செய்திருக்கிறானோ அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பெல்லாம்” என்கிறார்.
வளப்பம் பொருந்திய ஏழ் உலகங்கட்கும் காரணனாய நித்தியசூரிகள் தலைவனை, போக்கற்கு அரிய தீவினையினையுடைய யான் மனத்தால் நினைந்து, நினைப்பின் மேலீட்டால் உடல் கரைந்து, ‘களவு பிரசித்தமாம்படி வெண்ணெயைக் களவு செய்து உண்ட கள்வனே!’ என்று அழைப்பேன்; அதற்கு மேல், ‘முல்லை அரும்புகள் போன்று தோன்றிய பற்களையுடைய நப்பின்னைப்பிராட்டியாருக்காகப் பசுக்களையுடைய வலிய ஆயர்கட்குத் தலைவனாக, இளமை பொருந்திய எருதுகள் ஏழனையும் தழுவிக் கொன்ற எந்தையே!’ என்று அழைப்பேன்.
நித்ய கைங்கர்யத்திலே ஊன்றியிருக்குமடியேன் உன்னை விடுவதற்கு ப்ரஸக்தி லேசமுமில்லையென்று மீளவும் வற்புறுத்திப்பேசுகிறார். உய்ந்து போந்து என்றது ஸ்வரூபலாபம் பெற்றமை சொன்னபடி. இதற்குமுன், “அஸந்நேவ ஸ பவதி” என்னும்படி கிடந்த நான், இப்போது சேதநகோடியிற் புகுந்தேனென்றபடி. அஸந்தான நிலைமை தவிர்ந்து ஸத்தான நிலைமை யடைந்தவாறே, பாபங்கறெல்லாம் தொலையப் பெறுகையாலே என் உலப்பில்லாத வெந்தீவினைகளை நாசஞ்செய்து என்கிறார். உலப்பு-முடிவு; எத்தனை காலமனுபவித்தாலும் முடிவு பெறமாட்டாத கொடுவினைகளெல்லாம் தொலையப்பெற்று,’என்றவாறு. உனது அந்தமில் அடிமை யடைந்தேன் விடுவேனோ?-ஆத்மா வுற்றவரையில் கைங்காரியம் செய்வது தவிர வேறுவிதமர்ன போதுபோக்கைக் கொள்வதில்லை யென்று, திண்ணிய வுறுதி கொண்ட நான், எவ்விதத்திலும் உன்னை விடுவதற்கு ப்ரஸக்தியில்லை யென்றபடி. அந்தம் இல் அடிமை-ஆத்மஸ்வரூபத்திற்கு அந்தம் இல்லாமையாலே, ஸ்வரூபாநுபந்தியான கைங்காரியத்திற்கும் அந்தமில்லை யென்க.
“பூவைகள்“ என்னும் பன்மைச்சொல்லின் மேல் விளியுருபு ஏறினால் “பூவைகாள்“ என்றாகும், “பூவைகள்காள் என்றாவதற்கு வழியில்லை எனினும், வடமொழி வேதத்தில் வரும் பலவகைப் பிரயோகங்களைச் “சாந்தஸத்வாத் நதோஷ“ என்பதுபோல இங்குங்கொள்க. “பூவைகாள்“ என்றே பாடமென்று சிலர் சொல்லுவது அஸம்பிரதாயம். “உடையம்“ என்றதை மாற்றி “நம்முடைய“ என்று கொள்வது. நம்மிடத்தில் ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினானென்கிறது இரண்டாமடி. கொண்டான் என்றது வினைமுற்றன்று, வினையாலணையும் பெயர், மூன்றாமடியின் முதலிலுள்ள அடையும் என்பதில் அந்வயிக்குமது, கொண்டானடையம்வைகுந்தமும் என்க. இத்தலையிலுள்ளதெல்லாம் நேராகக்கொண்டு எட்டவொண்ணாத நிலத்திலேபோய்ப் பாரித்து வெற்றிகொண்டாடியிருந்தானென்கை“ என்பது ஈடு. என்னையு மென்னுடைமையையுங் கொள்ளைக்கொண்டு அவன் பரமபதத்திலோ திருப்பாற்கடலிலோ * சேணுயர்வானத்தோடொத்தான * சேணுயர்வேங் கடத்திலோ சென்று சேர்ந்தாலும் (அவை நணிய) அவை நமக்குக் கிட்டத்தகாதவையல்ல, ஸமீபஸ்தங்களே என்கிறார். “நண்ணிய“ என்பது “நணிய“ என்று தொக்கிக் கிடக்கிறது. நண்ணத்தகுந்தவையே என்றபடி. அப்படியானால் அநுபவம் கிடைக்கவில்லையேயென்று அழுவானேன்? கிட்டியநுபவித்துச் சளிக்கலாகாதோவென்ன, அதற்கு உத்தரமுரைக்கிறார் கடையறப்பாசங்கள் விட்ட பின்னையன்றி அவனவைகாண்கொடானே என்று. இங்கே ஈடு, “அவன் சுணையுடையவன், புறம்பேஞமொருவிஷயத்திலே நசைகிடக்க ஸ்வாநுபவத்தைக் காட்டிக்கொடான், பின்னாட்டாதபடி ஸவாஸநமாக பாஹ்யருதிபோனாலல்லது போகஸ்தானங்களைக் காட்டிக் கொடான்“. என்று ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்திகாண்மின், -“அவன் நம்முடைய நிறமும் வளையும்நெஞ்சும் தொடக்கமாகவுள்ள ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக்கொண்டு போனானாகிலும், பரமப்ராப்யமான திருநாடும் திருப்பாற்கடலும் திருமலையும் தன்னையாசைப்பட்டார்க்குக் காணநணியவாகில் காட்டாதொழிவானென்னென்னில், உங்கள் பக்கலுள்ள ஸங்கம் நிச்சேஷமாகப் போனாலல்லது அவனவை காண்கொடான், ஆதலால் இனி உங்களோடு முறவில்லையென்கிறார்.“ என்று.
விளக்கம்
427.
விளக்கம்
439.
விளக்கம்
452.
விளக்கம்
471.
விளக்கம்
475.
விளக்கம்
516.
விளக்கம்
551.
விளக்கம்
665.
விளக்கம்
680.
விளக்கம்
768.
விளக்கம்
769.
விளக்கம்
780.
விளக்கம்
832.
விளக்கம்
843.
விளக்கம்
846.
விளக்கம்
861.
விளக்கம்
886.
விளக்கம்
1003.
விளக்கம்
1006.
விளக்கம்
1019.
விளக்கம்
1341.
விளக்கம்
1347.
விளக்கம்
1398.
விளக்கம்
1744.
விளக்கம்
2066.
விளக்கம்
2106.
விளக்கம்
2184.
விளக்கம்
2209.
விளக்கம்
2292.
விளக்கம்
2312.
விளக்கம்
2313.
விளக்கம்
2384.
விளக்கம்
2417.
விளக்கம்
2456.
விளக்கம்
2460.
விளக்கம்
2556.
விளக்கம்
2618.
விளக்கம்
2661.
விளக்கம்
2835.
விளக்கம்
2960.
விளக்கம்
3570.
விளக்கம்
3581.