கோவில் திருவாய்மொழி  கண்ணி நுண் சிறுத் தாம்பினால்*  கட்டு உண்ணப்
  பண்ணிய பெரு மாயன்*  என் அப்பனில்*

  நண்ணித் தென் குருகூர்*  நம்பி என்றக்கால்
  அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2)    நாவினால் நவிற்று*  இன்பம் எய்தினேன்*
   மேவினேன்*  அவன் பொன்னடி மெய்ம்மையே*

   தேவு மற்று அறியேன்*  குருகூர் நம்பி*
   பாவின் இன்னிசை*  பாடித் திரிவனே*    திரிதந்து ஆகிலும்*  தேவபிரான் உடைக்*
    கரிய கோலத்*  திருவுருக் காண்பன் நான்*

    பெரிய வண் குருகூர்*  நகர் நம்பிக்கு ஆள்-
    உரியனாய்*  அடியேன்*  பெற்ற நன்மையே*     நன்மையால் மிக்க*  நான்மறையாளர்கள்*
     புன்மை ஆகக்*  கருதுவர் ஆதலில்*

     அன்னையாய் அத்தனாய்*  என்னை ஆண்டிடும்
     தன்மையான்*  சடகோபன் என் நம்பியே  

            நம்பினேன்*  பிறர் நன்பொருள் தன்னையும்*
      நம்பினேன்*  மடவாரையும் முன் எலாம்*
      செம்பொன் மாடத்*  திருக் குருகூர் நம்பிக்கு
      அன்பனாய்*  அடியேன்*  சதிர்த்தேன் இன்றே


       இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்*
       நின்று தன் புகழ் ஏத்த அருளினான் *
       குன்ற மாடத்* திருக் குருகூர் நம்பி *
       என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே.


        கண்டு கொண்டு என்னைக்*  காரிமாறப் பிரான் *
        பண்டை வல் வினை*  பாற்றி அருளினான்*
        எண் திசையும்*  அறிய இயம்புகேன்* 
        ஒண் தமிழ்ச்*  சடகோபன் அருளையே


         அருள் கொண்டாடும்*  அடியவர் இன்புற*
         அருளினான்*  அவ் அரு மறையின் பொருள்*
         அருள்கொண்டு*  ஆயிரம் இன் தமிழ் பாடினான்* 
         அருள் கண்டீர்*  இவ் உலகினில் மிக்கதே


          மிக்க வேதியர்*  வேதத்தின் உட்பொருள்*
          நிற்கப் பாடி*  என் நெஞ்சுள் நிறுத்தினான்*
          தக்க சீர்ச்*  சடகோபன் என் நம்பிக்கு*  ஆட்- 
          புக்க காதல்*  அடிமைப் பயன் அன்றே?


           பயனன்று ஆகிலும்*  பாங்கலர் ஆகிலும்* 
           செயல் நன்றாகத்  *திருத்திப் பணிகொள்வான்,*
           குயில் நின்றார் பொழில் சூழ்  *குரு கூர்நம்பி,* 
           முயல்கின்றேன்  *உன்தன் மொய்கழற்கு அன்பையே.  (2) 


            அன்பன் தன்னை*  அடைந்தவர்கட்கு எல்லாம் 
            அன்பன்*  தென் குருகூர்*  நகர் நம்பிக்கு*
            அன்பனாய்*  மதுரகவி சொன்ன சொல் 
            நம்புவார் பதி*  வைகுந்தம்*  காண்மினே   (2)