2 எண்ணிக்கை பாடல் பாட

முயற்றி சுமந்துஎழுந்து*  முந்துற்ற நெஞ்சே,* 
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,* -நயப்புஉடைய-
நாஈன் தொடைக்கிளவி*  உள்பொதிவோம்,*  நல்பூவைப்- 
பூஈன்ற வண்ணன் புகழ்  (2)

கார்கலந்த மேனியான்*  கைகலந்த ஆழியான்,* 
பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-
சொல்நினைந்து போக்காரேல்*  சூழ்வினையின் ஆழ்துயரை,* 
என்நினைந்து போக்குவர் இப்போது?   (2) 

இப்போதும் இன்னும்*  இனிச்சிறிது நின்றாலும்* 
எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே*-எப்போதும்-
கைகழலா நேமியான்*  நம்மேல் வினைகடிவான்* 
மொய்கழலே ஏத்த முயல் (2)