2 எண்ணிக்கை பாடல் பாட

பொய் நின்ற ஞானமும்*  பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்,* 
இந் நின்ற நீர்மை*  இனி யாம் உறாமை,*  உயிர் அளிப்பான்- 
எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!* 
மெய்ந் நின்று கேட்டருளாய்,*  அடியேன் செய்யும் விண்ணப்பமே.(2) 

முலையோ முழு முற்றும் போந்தில,*  மொய் பூங் குழல் குறிய- 
கலையோ அரை இல்லை நாவோ குழறும்,*  கடல் மண் எல்லாம்-
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே!*  பெருமான்-
மலையோ*  திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே? (2)

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு,*  அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்* 
மூது ஆவியில் தடுமாறும்*  உயிர் முன்னமே,*  அதனால்- 
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*
மாதாவினை பிதுவை,*  திருமாலை வணங்குவனே. (2)

ஈனச் சொல் ஆயினும் ஆக,*  எறி திரை வையம் முற்றும்*
ஏனத்து உருவாய் இடந்த பிரான்,*  இருங் கற்பகம் சேர்-
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும*
ஞானப் பிரானை அல்லால் இல்லை*  நான் கண்ட நல்லதுவே (2) 

நல்லார் நவில் குருகூர் நகரான்,*  திருமால் திருப் பேர்-
வல்லார்*  அடிக் கண்ணி சூடிய*  மாறன் விண்ணப்பம் செய்த-
சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
பொல்லா அருவினை*  மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே. (2)