விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து* 
  கூடினேன் கூடி இளையவர்தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி 
  ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து 
  நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாடினேன் - கீழ்க்கழிந்த காலமெல்லாம் வாடிக்கிடந்தேன்;
வாடி - அப்படி வாடியிருந்ததனால்
மனத்தால் வருந்தினேன் - மனவருத்தமடைந்தேன்;
பெரு துயர் இடும்பையில் - அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான ஸம்ஸாரத்திலே
பிறந்து கூடினேன் - பிறந்து (அந்த ஸம்ஸாரத்திலேயே) பொருந்தப்பெற்றேன்;

விளக்க உரை

கீழ்க்கழிந்த காலமெல்லாம் வாடிக்கிடந்தேன் , மனவருத்தமடைந்தேன் அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான இல்லரத்திலே பிறந்து பொருந்தப்பெற்றேன்; அப்படி கிடந்ததனால் இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன்; இப்படி ஓடித்திரியுமிடத்து; எம்பெருமான் திருவருளாலே ஞானமென்கிற ஒரு சிறந்த நிலையில் அடிவைத்து நன்மை தீமைகளை ஆராயப் புகுந்தேன் அப்படி ஆராயுமளவில் நாராயணா மஹா மந்த்ரத்தை நான் கண்டுகொண்டேன்.

English Translation

I wilted, wilting despaired in my heart, born in the pain of a dark womb. I mingled, mingling with lurid young dames, seeking the sex they did give me. I ran, and running by grace of Good-Lord, probed into nature of my mind. I sought, and seeking, found out for myself, Narayana is the good name.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்