விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வளவெழும் தவள மாட*  மதுரைமா நகரந் தன்னுள்,*
  கவளமால் யானை கொன்ற*  கண்ணனை அரங்க மாலை,*

  துவளத்தொண் டாய தொல்சீர்த்*  தொண்டர டிப்பொ டிசொல்,*
  இளையபுன் கவிதை யேலும்*  எம்பிறார் கினிய வாறே!(2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வளம் எழும் தவளம் மாடம - அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களையுடைய;
மா மதுரைநகரம் தன்னுள் - பெருமை தங்கிய வடமதுரையில்;
கவளம் மால் யானை கொன்ற -
கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலைசெய்தருளின;
கண்ணனை - ஸ்ரீ க்ருஷ்ணனாகிய;
அரங்கம் மாலை - கோயிலிலே (கண்வளரும்) எம்பெருமானைக் குறித்து;

விளக்க உரை

உரை:1
 
அடடா. மதுரை மாநகரம் என்று சொல்லியிருக்கிறாரே. அது நம் தமிழக மதுரையாய் இருக்கலாமே. தவள மாடங்கள் நிறைந்த மதுரை என்று இம்மாநகரை இன்னும் பல இலக்கியங்கள் புகழ்கின்றதே - என்றால், 'மாநகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற' என்று சொன்னதால் இங்கும் சொல்லப்பட்டது வடநாட்டு மதுரையைத் தான் என்பது தெளிவு.
 
உரை:2

விசேஷ உணவுகளையுண்டு மதம் பிடித்துக் கொழுத்திருந்த குவலயாபீடமென்னும் கம்ஸனது யானையை ஒழித்தருளினாற்போலே தம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் போக்கினபடியை அருளிச் செய்து பெரியபெருமாளுடைய ப்ரீதியே தமக்கு ப்ரயோஜன மென்று முடிக்கிறார் . கவளம் என்று யானையுணவுக்குப் பெர். “களவமால்யானை” என்றும் பாடமுண்டு. அப்போது கலப: என்னும் வடசொல் களவமெனத்திரிந்ததாம் ஒரு பருவத்தில் பெருத்தயானை யென்றபடி. இளைய புன் என்பவை -சப்தத்தில் இளமையையும் கவித்வத்தில் குற்றத்தையும் கூறும். எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பிய வையாயினும், எனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரிய பெருமாளுக்கு இது ஆராவமுதமாயிருக்கு மென்கிறார்.

English Translation

Krishna, the killer of the rutted elephant in the great city of Mathura, is the Lord of Arangam where beautiful mansions rise high. These words of the trusted Tulasi-garland-weaver Tondaradippodi, even if puerile as poetry, are sweet to the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்