விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அமரவோ ரங்க மாறும்*  வேதமோர் நான்கு மோதி,*
  தமர்களில் தலைவ ராய*  சாதியந் தணர்க ளேலும்,*

  நுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,*  ஆங்கே-
  அவர்கள்தாம் புலையர் போலும்*  அரங்கமா நகரு ளானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நுமர்களை - தேவரீருடைய ஜந்மத்தைப்;
பழிப்பர் ஆகில் - (அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில்;
நொடிப்பது ஓர் அளவில் - ஒரு நிமிஷகாலத்துக்குள்ளே;
அவர்கள் தாம் - அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம்;
ஆங்கே - அப்போதே;
 

விளக்க உரை

ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்று வேதங்கள் நான்கு; சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு; இவற்றை யெல்லாம் கண்டபாடம் பண்ணி அவற்றின் பொருள்களையும் அறிந்து, அவ்வறிவுக்குப் பலனாக பகவத் கைங்கர்யத்தில் முதன்மையாக ஊன்றியிருக்கும் சிறந்த அந்தணர்களா யிருந்தபோதிலும் அவர்கள், கீழ்க்கூறிய யோக்யதைகளெல்லாமில்லாமல் கேவலம் பகவத்தைங்கர்ய மொன்று மாத்திரமுடைய ஒரு ஸ்ரீவைஷ்ணவரை (அதாவது சண்டாளஜாதியிலே பிறந்தவரை) அந்தப் பிறவியைப் பற்றி இகழ்வாக நினைத்து தூஷிப்பார்களானால் தூஷிக்குமவர்கள் தாங்களே ப்ராஹ்மண்யம் கெட்டுக் கர்மசண்டாளராயப் போவர்கள். இப்படி போவது ஜந்மாந்தரத்திலோ வென்னில்; அன்று தூஷித்த அந்த க்ஷணத்திலேயே சண்டாளராயொழிவர்.

English Translation

What though they study the six Angas, and the four Vedas, rank ahead of all, and pride themselves in their Andanar lineage, if they but speak ill of your devotees, that very moment, right there, they become worse than the Pulaiyar. O Lord of Arangama-nagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்