- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
மழைக்கன்று வரைமு னேந்தும்* மைந்தனே மதுர வாறே,*
உழைக்கன்றே போல நோக்கம்* உடையவர் வலையுள் பட்டு,*
உழைக்கின்றேற் கென்னை நோக்கா* தொழிவதே,உன்னை யன்றே*
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!* அரங்கமா நகரு ளானே!
காணொளி
பதவுரை
விளக்க உரை
பேறு பெறுவதில் விரைவு மிகுதியாலே ஆற்றாமை கரைபுரண்டு பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார். இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழுநாள் விடாமழை பெய்வித்து வருத்தப்படுத்தின காலத்தில் கோவர்த்தநகிரியைக் கொற்றக்குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரையையும் காத்தருளினவனன்றோ நீ; அப்படி அவர்களைக் காப்பதற்கு அவர்களிடத்தில் ஏன்ன குணம் கண்டுபிடித்தாய்? அவ்விடையருடைய கோஷ்டியிலாவது பசுக்களின் திரளிலாவது அடியேனையும் சேர்த்துக்கொள்ளலாகாதா? என்னும் இரக்கப்பொருள்தோன்ற மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! என்கிறார். மதுர ஆறே! - ரக்ஷித்தருளாமல் உபேக்ஷித்தபோதிலும் உன்னைவிட முடியவில்லையே! என்பது கருத்து. ஆறானது ஏரி, குளம் முதலியவைபோலே ஒரிடத்திலேயே இராமல் நாநா தேசங்களிலும் போய்ப் பெருகுவது போல் எம்பெருமான் அடியார் இருக்குமிடங்களிலெல்லாம்போய் ஸேவை ஸாதிததருள்கின்ற ஸௌலப்யமும் இந்த முற்றுவமையால் தோற்று மென்க.
English Translation
O Prince who lifted a mountain against the storm! O River of sweetness! I was caught in the net of fawn-eyed damsels and struggled. Is this fair on you not to take notice? I have none to call but you! O First Lord, Lord of Arangama-nagar!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்