விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மெய்யெலாம் போக விட்டு*  விரிகுழ லாரில் பட்டு,*
  பொய்யெலாம் பொதிந்து கொண்ட*  போட்கனேன் வந்து நின்றேன்,*

  ஐயனே!அரங்க னே!உன் அருளென்னு மாசை தன்னால்,*
  பொய்யனேன் வந்து நின்றேன்*  பொய்யனேன் பொய்ய னேனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மெய்எல்லாம் - மெய்யான (நினைவு, சொலவு, செயல் ஆகிய ) எல்லாவற்றையும்;
போகவிட்டு - நீக்கிவிட்டு;
விரி குழலாரில் பட்டு - விரிந்த கூந்தலையுடைய மாதர் திறத்தில் ஆழங்காற்பட்டு (அகப்பட்டு);
பொய் எல்லாம் - எல்லாவிதமான பொய்களையும்;
பொதிந்து கொண்ட - நிறைத்துக்கொண்டிருக்கிற;

விளக்க உரை

தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி கதறி தேவரீர் உடைய கருணையொன்றைய எதிர்பார்திருப்பவனடியேன் என்கிறார். மனம், மொழி, மெய், என்கிற முக்கரணங்களிலும் சத்தியம் நிலையாய் இருக்கப்பெற்ற உத்தமாதிகாரியாய் இருக்க முடியாமற்போனாலும் ஏதாவது ஒரு காரணத்திலாவது சத்தியமாய் இருக்கலாம்; அப்படிப்பட்ட நிலைமையும் எனக்கு இல்லை; விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பொய் தவிர வேறுயில்லாதவனாயிராநின்றேன். ஆயினும் “தேவரீருடைய திருவருள் இருக்குமானால் நமக்கொரு குறைவுமில்லை” என்கிற விச்வாஸமொன்றுமாத்திரம் என்னிடத்தில் உள்ளதாதாலால் அக்கருணையிலுள்ள நசையாலே, வெட்கமும் அச்சமுமற்றுத் திருமுன்பே வந்து நின்றேன் என்கிறார். போழ்க்கன் - முறைகேடன், வழிதப்பினவன். ‘போட்கன்’ என்றலுமுண்டு.

English Translation

O Lord, Aranga! I am a vagabond full of vice, I have no integrity. I was caught in the net of coiffured dames. Desirous of your grace, I have come to you now. O False, false me! I stand before you shamelessly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்