விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஊரிலேன் காணி யில்லை *  உறவுமற் றொருவ ரில்லை,*
  பாரில்நின் பாத மூலம்*  பற்றிலேன் பரம மூர்த்தி,*

  காரொளி வண்ண னே!(என்)*  கண்ணனே! கதறு கின்றேன்,*
  ஆருளர்க் களைக ணம்மா!*  அரங்கமா நகரு ளானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பற்றிலேன் - (தஞ்சமாகப்) பற்றாதவனா யிராநின்றேன்;
பரமமூர்த்தி - மிகச் சிறந்தவனே;
கார் ஒளி வண்ணனே - மேகத்தின் காந்திபோன்ற மேனி நிறமுடையவனே;
கண்ணனே - ஸ்ரீ க்ருஷ்ணனே;
கதறுகின்றேன் - (வேறு புகலற்று உன்னையே) கூப்பிடா நின்றேன்;

விளக்க உரை

தமக்கு ஒருவிதத்தாலும் ‘பேறு தப்பா’ தென்று நிச்சயித்து விசாரமற்றிருப்பதற்கு இடமில்லாமையை விரிய உரைக்கும் பாசுரம் இது. ஊரிலேன் - வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில் முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம். அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே! காணி யில்லை.-- திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால் அங்குப்போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும் அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.

English Translation

O Great Lord, I have no town to call mine, no rights to claim, no relatives or friends in this wide world. O Dark Radiant One, I have not secured your feet, My Krishna, I scream and call. Who is there to protect me? O Lord of Arangama-nagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்