விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உம்பரா லறிய லாகா*  ஒளியுளார் ஆனைக் காகி,*
  செம்புலா லுண்டு வாழும்*  முதலைமேல் சீறி வந்தார்,*

  நம்பர மாய துண்டே?*  நாய்களோம் சிறுமை யோரா,*
  எம்பிராற் காட்செய் யாதே*  எஞ்செய்வான் தோன்றி னேனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உம்பரால் அறியல் ஆகா ஒளி உளார் - தேவர்களாலும் (இவ்வகை யென்று பரிச்சேதித்து) அறிய முடியாத தேஜோ மயமான பரமபதத்தை விபூதியாகவுடைய எம்பெருமான்;
ஆனைக்காகி - கஜேந்திராழ்வானுக்காக;
செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி - சிவந்த மாம்ஸத்தை புஜித்து வாழ்கிற முதலையின் மேலே சீற்றங்கொண்டு;
வந்தார் - (மடுவின் கரையிலே) எழுந்தருளினார்;

விளக்க உரை

மடுவின் கரையிலே முதலையின் வாயில் அகப்பட்டு வருந்தின கஜேந்த்ராழ்வான் “நாராயணா! ஓ! மணிவண்ணா நாகணையாய்!” என்று அழைத்தவாறே அரைகுலையத் தலைகுலைய மடுவின்கரையிலே ஓடிவந்தவனன்றோ எம்பெருமான்; இப்படி ஆச்ரித ஸுலபனாய் ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானிருக்க அவனைக் கடகாகப் பற்றாமல் நம்மைநாமே ரக்ஷித்துக் கொள்ளப் பார்ப்பதும் ஒரு காரியமாகுமோ? ஆனால் பரமோத்க்ருஷ்டனான அவன் பரமநிக்ருஷ்டரான நம்மை ஒரு பொருளாக நினைப்பனோ என்று சிறிது சங்கிக்கலாம்; இதுவும் அவனுடைய ஸ்வரூபத்தை அறியாதாருடைய சங்கையாகும்; ‘இவன் நீசன், இவன் உத்கிருஷ்டன்’ என்று ஏற்றத்தாழ்வுகளைப் பார்ப்பவனல்லன் எம்பெருமான். இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே சிறிதும் அடிமை செய்யப்பெறாத பாவியேன் ஏதுக்காக ஒரு மனிதனாகப் பிறந்தேனென்று தலையிலடித்துக் கொள்ளுகிறபடி பரமபதத்தை ஒளி என்ற சொல்லாற் கூறியது வடமொழி வேதப்ரக்ரியையை அடியொற்றியாம்.

English Translation

Even gods cannot understand the radiant Lord. Heeding an elephant, he came rushing against a flesh-eating crocodile. Need we carry our burden! Meaner than dogs, yet we are cared for by him. If I am not to serve him, for what was I born?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்