விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  போதெல்லாம் போது கொண்டுன்*  பொன்னடி புனைய மாட்டேன்,*
  தீதிலா மொழிகள் கொண்டுன்*  திருக்குணம் செப்ப மாட்டேன்,*

  காதலால் நெஞ்ச மன்பு*  கலந்திலே னதுதன் னாலே,*
  ஏதிலே னரங்கர்க்கு எல்லே!*  எஞ்செய்வான் தோன்றி னேனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

போது எல்லாம் - எல்லாக் காலங்களிலும்;
போது கொண்டு - பூக்களைக் கொண்டு;
உன் பொன்அடி புனைய மாட்டேன் - உன்னுடைய அழகிய திருவடிகளிலே ஸமர்ப்பிக்க மாட்டுவேனல்லேன்;
தீது இலாமொழிகள் கொண்டு - குற்றமற்ற சொற்களினால்;
உன் திருக்குணம் செப்பமாட்டேன் - உன்னுடைய நற்குணங்களைக் கீர்த்தநம் செய்யமாட்டுவேனல்லேன்;

விளக்க உரை

“கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும்ஆம்பலும் முன் சண்டக்கால், புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று உள்ளாதா ருள்ளத்தை உள்ளமாக்கொள்ளோமே” என்றபடி கண்ணிற்கண்ட பூக்களைக் கொணர்த்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்பிக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க, அது செய்யமாட்டுகிறிலேன்; இவ்வளவு கஷ்டமும் வேணடா; வாயில்வந்த நாலு சொற்களைச் சொல்லி ஸ்தோத்ரமானது செய்யலாமே; அதுவும் செய்யப் பெற்றிலேன்; அவ்வளவு சிரமமும் வேண்டா; நெஞ்சிலேயாவது சிறிது ஸ்நேஹம் வஹிக்கலாமே; அதுவும் பெற்றிலேன்; இப்படி ஒருவிதத்தாலும் எப்பெருமான் விஷயத்திலே தான் கிஞ்சித்கரிக்கப் பெறாதவனானபின்பு அட்டின் கழுத்தில் முலைக்கும் எனக்கும் ஒரு வாசியில்லை; என்னுடைய பிறவி வீண்! வீண்!! வீண்!!! என்கிறார்.

English Translation

I do not worship your golden feet thrice a day with flowers. I do not sing your glories with faultless words of praise. I do not melt with over-flowing love for you in my heart. I do not have anything for you, Ranga! Alas, I wonder why I was born!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்