- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இராமபிரானும் கண்ணபிரானுமாய் அவதரித்த பெருமான்றானே திருவரங்கம் பெரிய கோயிலில் கண் வளர்ந்தருளுகிறான்; ஜாயமாநகால கடாக்ஷமில்லாமையாலன்றோ நீங்கள் இழக்கிறது! என்று க்ஷேபித்துக்கூறுவது இப்பாட்டு. இராமபிரான் ஸமுத்ரராஜனை அடைக்கலம்பற்றி வழிவிட வேணுமென்று வேண்டிக்கொண்டவிடத்தும் அவன் வந்து முகங்காட்டாதொழிய, “ஒரு மீன்படுகுட்டம் நம்மை அஸமர்த்தராக நினைத்துவிட்டது; இனி ஒரு கைபார்க்குமத்தனை” என்று துணிந்து இளையபெருமாளை நோக்கி “வில்லைக்கொண்டுவா” என்று நியமித்தருளின பின்பு ஸமுத்ரராஜன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து முதுகைக்காட்டித் தன்மீது அணைகட்டிப் போகும்படி அமைந்தனனாதலால், ஒரு வில்லாலோங்கு முந்நீரடைத்து என்கிறார். ஓங்கு என்றது-கடலின் இயற்கையான கொந்தளிப்பைக் கூறுகிறபடி யன்று; இராமபிரான் சீற்றத்தாலே கையும் வில்லுமாய் நின்ற வீரவுறப்பைக் கண்டு கீழ்மண்கொண்டு மேல் மண்ணெறிந்து காலிலேவிழுமாபோலே திருவடிகளளவும் வந்து வெள்ளங் கோத்தபடியைக் கூறுவதாம்.
English Translation
With a mighty bow He parted the ocean. For the world’s relief he killed the Rakshasa chief in battle. He is our Saviour. The fortressed temple of Tiru-Arangam is the place he has chosen to live in. O ill-fortuned birth-ones! You idle your time without chanting his names.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்