விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மற்றுமோர் தெய்வம் உண்டே*  மதியிலா மானி டங்காள்,*
  உற்றபோது அன்றி நீங்கள்*  ஒருவன் என்று உணர மாட்டீர் ,*

  அற்றம்மேல் ஒன்று அறியீர் *  அவனல்லால் தெய்வ  மில்லை,* 
  கற்றினம் மேய்த்த  எந்தை*  கழலிணை பணிமின் நீரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மதி இலா - தத்துவஞானமில்லாத
மானிடங்காள் - மனிதர்களே
மற்றும - (நான் சொல்லுகிறவனைத்) தவிரவும்
அற்றம் - மறைபொருளை (தாத்பரியத்தை)
ஒன்று அறியீர் - சிறிதும் அறியமாட்டீர்கள்;

 

விளக்க உரை

பல தேவரையும் பற்றிக் கூறுகிற வேதத்தின் உட்பொருளை நுட்பமாக ஆராய்ந்து அறியுந் திறமையில்லாமையால் நீங்கள் தேவதாந்தரங்களைப் பற்றுகின்றீர்கள்; ‘ஒரு குறையும் வாராமல் உன்னைப் பாதுகாக்கிறேன்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணி பாணாஸுரனது வாசலிலே பரிவாரத்தோடு பாதுகாவாலாயிருந்த சிவன் அந்த வாணாசுரனை எதிர்த்துவந்த ஸ்ரீ கிருஷ்ணனோடு போர் செய்யமாட்டாமல் தோற்று ஓடினபோது அந்தச் சிவனுடைய வலியின்மையை அந்த வாணன் கண்டறிந்ததுபோல, நீங்களும் ஸரணமாகப் பற்றியிருக்கிற தேவதாந்தரங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால்தான் அத்தெய்வங்களின் பலஹீநத்வத்தைக் கண்டறிவீர்கள்; நீங்கள் இப்படி பரமாத்மாவைத் தவிர்த்து இதர தேவதைகளைப் பற்றுவதற்குக் காரணம் நுமக்குப் பகுத்தறிவு இல்லாமையே. உண்மையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வையே சரணமாகப் பற்றுங்களென்று உபதேசிக்கின்றனரென்க.

English Translation

Can there be another god? O Foolish men on Earth! Unless there is a calamity, you will never realize the truth. Nor do you know the Sastras, other than him, there is no god. Worship the feet of my Lord who walked on earth grazing cows!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்