விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மறம்சுவர் மதிளெடுத்து*  மறுமைக்கே வெறுமை பூண்டு,* 
  புறம்சுவர் ஓட்டை மாடம்*  புரளும்போது அறிய மாட்டீர்,*
  அறம் சுவராகி நின்ற*  அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,* 
  புறம்சுவர் கோலம் செய்து*  புள் கவ்வக் கிடக்கின்றீரே!   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மறுமைக்கு  - ஆமுஷ்மிக பலத்திற்கு;
ஓட்டை - அநித்யமான;
மாடம் - சரீரமானது
புரளும்போது - தரையில் விழும் காலத்தை;
அறியமாட்டீர் - அறியமாட்டீர்;
 

விளக்க உரை

விஷயங்கள் அற்பமென்றும் அஸ்திரமென்றும் கீழ்க்கூறிய ஆழ்வாரை நோக்கிச் சிலர் “விஷயங்களுக்கு அல்பாஸ்திரத்வம் முதலிய பலதோஷங்களுள்ளனவாயினும் அவற்றை நாங்கள் விடவேணுமென்ற நியதியில்லை; ஒரு விஷயத்தில் பூர்ணமான அனுபவத்தைப் பெறாதொழிவோமாயினும் விஷயங்கள் பல உளவாகையால் ஒன்றில் இல்லாத நன்மையை வேறொன்றிலே கூட்டிக்கொண்டு அனுபவிக்கிறோம் போம்” என்று சொல்ல, “அப்படியேயானாலும் அந்த விஷயங்களை அநுபவிக்ககக்கூடிய வஸ்து ஸ்திரமாயிருக்கவேணுமே அவ்விஷயங்களைப்போலவே போக்தாவும் அஸ்திரன்கிடீர்” என்கிறார் இப்பாட்டால்.

English Translation

You build a façade of illusion, always worry about the next act, live in a frail shell-like body, and never realize it will give way, Instead of serving the Lord Ranga, the fortress of Dharma, you tend to dress this outer wall, then fall prey to vultures.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்