விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மொய்த்த வல்வினையுள் நின்று*  மூன்று எழுத்துடைய பேரால்,*
  கத்திர பந்தும் அன்றே*  பராங்கதி கண்டு கொண்டான்,*
  இத்தனை அடியரானார்க்கு*  இரங்கும் நம் அரங்கனாய*
  பித்தனைப் பெற்றும் அந்தோ!*  பிறவியுள் பிணங்கு மாறே!  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மொய்த்த - அடர்ந்து கிடக்கிற;
வல் வினையுள் நின்று - கொடிய பாபராசியினுள்ளே நின்று;
கத்திரபந்தும்  - அன்றே க்ஷத்ர பந்துவமன்றோ;
கண்டு கொண்டான் கண்டு அநுபவிக்கப் பெற்றான்;
இரங்கும் - அருள்புரிகின்ற;
 

விளக்க உரை

இப்பாட்டு முதல், பதினான்காம் பாட்டளவும் பகவத் விஷயத்திலே தம்மைப்போல் ஆழங்காற்படாமல் உடலுக்கே கரைந்து நைந்து திரியும் ஸம்ஸாரிகளின் இழவைக்கண்டு பொறுக்கமாட்டாமல் தளர்ந்து ஒரு பக்கத்தில் ஆச்சர்யப்பட்டும், ஒரு பக்கத்தில் வருத்தப்பட்டும், மற்றொரு பக்கத்தில் வெறுப்புற்றும் இன்னொரு பக்கத்தில் நிந்தித்துக்கொண்டும் பேசுகிறார். பகவதநுபவத்திலே ஊன்றி உகப்பேயாய்ச் செல்லுமிவர் ஸம்ஸாரிப் பாவிகளைப்பற்றிக் கரைந்து வருந்துவானேன்? என்னில்; இப்பாவிகள் அநியாயமாய் வகுத்த விஷயத்தை இழந்து படுகின்றனரே என்னும் துக்கம் பொறுக்கமாட்டாமையாலும், பகவத் விஷயம் பலர்கூடித் திரண்டு அநுபவிக்கவேண்டிய இனிய விஷயமாதலாலும், “ஏக; ஸ்வாது ந புஞ்ஜீத” (இன்கனி தனி யருந்தான்) என்றபடி இனிய விஷயத்தைத் தனியராய் அநுபவித்து ஸாத்மிப்பித்துக்கொள்ள வல்ல தன்மையரல்லராதலாலும் துணை கூட்டிக்கொள்ளத் தேடுகிறாரென்க.

English Translation

Standing in deep sin, singing the three syllabled name ‘Govinda’, the fabled Khattirabandu attained the highest state. Despite the easy reach of a mad Lord called Ranga who melts for his devotees, how people suffer rebirth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்