விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வேத நூல் பிராயம் நூறு*  மனிசர் தாம் புகுவ ரேலும்,*
  பாதியும் உறங்கிப் போகும்*  நின்றதில் பதினையாண்டு,*
  பேதை பாலகனதாகும்*  பிணி பசி மூப்புத் துன்பம், *
  ஆதலால் பிறவி வேண்டேன் *  அரங்கமா நகர் உளானே.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மனிசர் தாம்  - மநுஷ்யர்கள்
பாதியும் - அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும்
நின்ற இப்பதினையாண்டு - மிகுந்த ஐம்பது வருஷம்
பேதை  - சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
பிணி - வியாதிமயமாயும்

விளக்க உரை

உலகத்தில் மானிடப்பிறவி யென்பது ஜந்மாந்தர ஸஹஸ்ரநற்றவங்களாலே பெறக்கூடியது; அதனை வருந்திப்பெற்றாலும், கர்ப்பத்திலேயும், பிறந்தவுடனும் நாலுநாள் கழித்தும் சில மாதங்கள் கழித்தும் சில வருடங்கள் கழித்தும் இறக்கக்கூடியவர்கள் பெரும்பான்மையரேயன்றி, வேதசாஸ்த்ரத்தில் “தாயுர்வை புரு‘” (மனிதன் நூறு பிராயம் வாழ்பவன்) என்று கூறியுள்ளபடி தீர்க்காயுஸ்ஸாக வாழக்கூடியவர் மிகச் சிறுபான்மையரே; விதிவசத்தால் சிலர்நூறு பிராயம் புக்கு வாழப்பெற்றாலும் அவரது வாழ்நாள் கழியும் வகையை ஆராய்ந்தால் ஒரு நொடிப்பொழுதாவது நற்போதாகக் கழிய வழியில்லை. ஸூர்யன் அஸ்தமித்து மீண்டும் உதிக்குமளவும் உறங்குவது ஒரு நியமமாக வந்துவிட்டபடியால் அஹோராத்ரமாகிய ஒரு திநத்துக்கு உள்ள அறுபது நாழிகையில் முப்பது நாழிகை உறக்கத்தில் கழிகிற கணக்கில் பாதி ஆயுஸ்ஸாகிய ஐம்பது வருஷம் உறக்கத்தால் கழிந்ததாகிறது; மற்ற பாதிவாழ்நாளில்-தன்னுடைய ஹிதாஹிதம் தாயின் அதீனமாயிருக்கும் சிசுத்வாவஸ்தையாய்ச் சிலகாலமும், எத்தனை தீம்புகள் செய்தாலும் சீறவொண்ணாதபடி செல்வப்பிள்ளை பருவமாய்ச் சிலகாலமும், பிறகு யௌவநம் வந்து புகுந்து விஷயாந்தரங்களிலே மண்டித்திரியும் பருவமாய்ச் சிலகாலமும், இங்ஙனே இந்திரியச் சிறையிலே அகப்பட்டுத் தடுமாறாநிற்க இடிவிழுந்தாற்போலே வந்து புகுகிற கிழத்தனமாய்ச் சிலகாலமும் “அத்யுத்கடை; புண்யபாபைரிஹைவ பலமச்நுதே” (வரம்புகடந்த புண்யபாபங்களின் பலனை இப்பிறவியிலேயே அநுபவிக்கிறான்)என்றபடி - யௌவநத்திற் செய்த எல்லை கடந்த குறும்புகட்குப் பலனாக எய்தும் பிணிகளால் வருந்துவதாய்ச் சிலகாலமும், பசியினால் ஒன்றும் தோன்றாதபடி இடர்படுவதாய்ச் சிலகாலமும், ஒருபக்கத்தில் பிள்ளை செத்தான் என்று கேட்டு அழுவதும், மற்றொரு பக்கத்தில் மனைவி செத்தாள் என்று கேட்டு அழுவதுமாய் இப்படி ஸம்ஸாரத் துன்பங்களில் ஆழ்ந்து செல்லும் நாளாய்ச் சிலகாலமும் கழிவதால் இத்துன்பங்களை அநுபவிப்பதற்கு இன்னும் சிறிது ஆயுஸ் கடன் வாங்கிக் கொள்ளவேண்டியதாமேயன்றி உள்ள வாழ்நாளில் ஆத்மாவைப்பற்றிச் சிறிதாகிலுஞ்சிந்திக்கப் பொழுது கிடைப்பரிது; ஆதலால் இப்பிறவி எனக்கு வேண்டா என்கிறார்.

English Translation

O lord of Arangama-nagar! Even if one where to attain the lifespan of one hundred years granted by the Vedas, half of that spent in sleeping. The remaining fifty years are frittered away in childhood, disease, hunger and old age, and so I do not desire another birth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்