விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று*  செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த 
    நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்*  தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத் 
     
    திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் 
    உறைவானை மறவாத உள்ளந்தன்னை*  உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செறி தவம் - மிக்க தபஸ்ஸையுடையனான;
சம்புகன் தன்னை - (சூத்ரசாதியனான) சம்புகனை;
சென்று, கொன்று - (அவனிருக்கு மிடந்தேடிச்) சென்று தலையறுத்து;
செழுமறை யோன் உயிர் மீட்டு - சிறந்த ப்ராஹ்மண குமாரனுடைய உயிரை மீட்டுக் கொடுத்து;
தவத்தோன் ஈந்த - அகஸ்தியமா முனிவன் கொடுத்த;

விளக்க உரை

தன்னை அக்காலத்திற் காணப்பெறாத குறைதீரப் பிற்காலத்தார் காணும்படி தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில் அப்படிப்பட்ட திவ்விய மங்கள விக்ரஹத்தோடு நித்யவாஸம் செய்தருளாநின்ற எம்பெருமானை இறையும்மறவாது எப்பொழுதும் தியானிப்போமாகில் அக்காலத்தில் எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோமே! என்றுவரும் துன்பத்தை அடையமாட்டோம் என்றவாறு.

English Translation

My sweet Lord Rama went and slew Jambuka of terrible penance, gave life to the dead Vedic seer and wore the jeweled garland given by Sag Agastya. He sent his brother Shatrughna to slay the Asura Lavana. By the curse of Durvasa, he parted from his valiant brother Lakshmana. He resides in Tillainagar Tiruchitrakutam. We remember him always in our hearts, are we not saved from all harm?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்