விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி*  அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்* 
    தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி*  உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்* 
     
    செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்*  பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் நெடு பொன் மணி மாடம் - அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு அமைக்கப்பட்ட உபரிகை வீடுகளையுடைய;
அயோத்தி - அயோத்யா நகரத்துக்கு;
எய்தி - மீண்டு வந்து;
அரசு எய்தி - அரசாட்சியை அடைந்து;
தான் முன் கொன்றான் தன் - தன்னால் முன்பு கொல்லப்பட்டவனான இராவணனுடைய;

விளக்க உரை

ஆராவமுதமாகவுள்ள எம்பெருமானுடைய ஸேவையின் மிக்க இனிமைக்கும், அங்ஙனமேயுள்ள அப்பிரானுடைய சரித்திரத்தின் மிக்க இனிமைக்கும் தேவாம்ருதத்தின் இனிமை சிறிதும் ஈடாகாதென்னுங் கருத்தால், இன்னமுதமதியோம் என்கிறார். இன்னமுதமதியோ மொன்றே என்றும் பாடமுண்டாம்: அமுதம் - அமுதத்தை, ஒன்று - ஒரு பொருளாக மதியோம் என்றவாறு. குசலவர் இராமாயண ப்ரவசநஞ்செய்து அதனால் உலகத்தை நன்னெறியில் உய்த்தலும், இராமபிரான் காலத்திற்குப்பின் அப்பெருமான் போலவே நீதிமுறை தவறாது உலகத்தை இனிது ஆளுதலும் தோன்ற உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் என்றார்.

English Translation

My, sweet Lord Rama returned to Ayodya, city of tall mansions, and took the throne. Sage Agastya chronicled the whole story of the destruction of Ravana; the Lord heard his own exploits from the coral lips of the twin-children Lava and Kusa that Mithila’s daughter bore for the emancipation of the worlds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்