விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*  குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி* 
    எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*  இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*
    திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*  அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குரை கடலை - கோஷிக்கின்ற கடலை;
அடல் அம்பால் - தீக்ஷ்ணமான அம்பைக் கொண்டு;
மறுக எய்து - கலங்கும்படி எய்யத் தொடங்கி;
குலை கட்டி - (அதில்) அணைகட்டி;
அதனால் - அந்த அணைவழியாக;

விளக்க உரை

கடலை அம்பபெய்திப் பிரித்து மறுகரையை அடைந்து அரக்கர்களையும் இலங்கை வேந்தனையும் கொன்று தம்பிக்கு அரசு கொடுத்து சீதையோடு சிம்மாசனத்தில் அமர்ந்தவன்.

English Translation

My sweet Lord Rama shot an arrow that parted the sea. He built a bridge and made it to the other shore and took the lives of the terrible demons and their king Ravana, then gave the kingdom to his younger brother Vibhishana and reunited with his consort Sita. He resides in Tillainagar Tiruchitrakutam. Other than the sovereign rule of his sacred feet, I do not recognize any kingdom.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்