விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேன் நகு மா மலர்க் கூந்தற்*  கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ* 
    கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட*  கொடியவள்தன் சொற்கொண்டு இன்று* 
    கானகமே மிக விரும்பி நீ துறந்த* வளநகரைத் துறந்து*  நானும்- 
    வானகமே மிக விரும்பிப் போகின்றேன்*  மனு-குலத்தார் தங்கள் கோவே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மனுகுலத்தார் தங்கள் கோவே - மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே;
தேன் நகு மா மலர் கூந்தல் - தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய;
கௌசலையும் - கௌஸல்யையும்;
சுமித்திரையும் - ஸுமித்ரையும்;
சிந்தை நோவ - மனம் வருந்த;

விளக்க உரை

உரை:1

மூன்று தாய்மார்களில் இரண்டுபேர் வருந்தவும் ஒருத்தி மகிழவும் நீ அயோத்தியை துறந்து கானகஞ் சென்றாயாதலின், நானும் இவ்வயோத்தியை துறந்து மேலுலகை நோக்கிச் செல்லுகின்றே னென்கிறான். கூனுருவின் = இன் - ஐந்தனுருபு ஒப்புப்பொருள். கொடுமை- தீமையேயன்றி வளைவுமாதலை கொடுங்கோல் கொடுமரம் என்ற இடங்களிலுங் காண்க. தொழுத்தை தொழும்பன என்பதன் பெண்பால். மநு-ஸூர்யனது குமாரன்; வைவஸ்வதமநு.

உரை:2

கௌசலையும் சுமத்திரையும் வருந்த கூனி சொல்லைக் கேட்டு கொடிய கைகேயியின் ஆணையை மேற்கொண்டு காட்டுக்கு விருப்பத்துடன் இந்த நகரத்தைத் துறந்து சென்றாய். இதே நகரத்தைத் துறந்து நானும் சாவை விரும்பிப் போகிறேன்.

English Translation

O King of all mankind! Listening to the words of the cruel Kaikeyi, ill-advised by the notorious hunchback maid, you gladly went into the forest leaving the flower-coiffured Kousalya and Sumitra in grief. Today, I too leave this city you renounced, and gladly enter my abode in heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்