விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொருந்தார் கை வேல்-நுதிபோல் பரல் பாய*  மெல்லடிகள் குருதி சோர* 
    விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப*  வெம் பசிநோய் கூர*  இன்று- 
    பெரும்பாவியேன் மகனே போகின்றாய்*  கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற* 
    அரும்பாவி சொற் கேட்ட*  அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொருந்தார் கை வேல் நுதி போல் - பகைவர்கள் கையிலேந்தும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற;
பரல் - பருக்கைக் கற்கள்;
பாய - (காலில் தைத்து அழுத்தவும்);
மெல் அடிக்கள் குருதி சோர - மென்மையான (உனது) பாதங்களினின்று ரத்தம் பெருகவும்;
வெயில் உறைப்ப - (மேலே) வெயிலுறைக்கவும்;

விளக்க உரை

எப்படிப்பட்ட கல்நெஞ்சினரும் செய்யமாட்டாத ஒருமஹா பாபத்தைச் செய்பவளான ஒரு பாபமூர்த்தியைக் கேகயராஜன் பெண்ணாய்ப் பெற்றான். அவள் வார்த்தையிலே அகப்பட்டுக் கொண்டு நான் பரிஹாரமில்லாததொரு செயலைச் செய்துவிட்டேன். இனி இதற்கு நான் செய்யக்கூடிய பரிஹாரம் ஒன்றுமில்லையே என்று பச்சாத்தாபத்தோடு கூறுகிறபடி. மஹாபாபியான எனக்கு மகனாய் பிறந்தமையாலன்றோ ஸுகுமாரனான நீ இங்ஙனம் மஹா வநத்துக்குச் செல்ல நேர்ந்தது என்பான். பெரும்பாவியேன் மகனே? என்றான். வெம்பசி நோய் கூர = கூர - மிகுதியுணர்த்தும் கூர் என்ற உரிச்சொற் பகுதியினடியாய் பிறந்த செயவெனெச்சம். கேகயர் - கேகய தேசத்திலுள்ளவர்கள்.

English Translation

Son! O the terrible sinner that I am! On hearing the sinful words of King Kekaya’s daughter, you departed, desiring the dreaded forest, walking on sharp splinter-rocks as your tender feet bled, suffering pangs of hunger under the scorching Sun. O Hapless me! Alas, what can I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்