விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு*  இருநிலத்தை வேண்டாதே, விரைந்து*  வென்றி- 
    மைவாய களிறொழிந்து தேரொழிந்து*  மாவொழிந்து வனமே மேவி* 
    நெய்வாய வேல் நெடுங்கண்*  நேரிழையும் இளங்கோவும் பின்பு போக* 
    எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ*  எம்பெருமான் என் செய்கேனே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

 
வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு - கொடிய வாயையுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு;
இரு நிலத்தை வேண்டாதே - பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு;
விரைந்து - சீக்கிரமாக;
வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து - வெற்றியை விளைப்பதன் மைம்மலை போன்ற வடிவத்தையுடைய யானையும் தேரும் குதிரையுமாகிய வாஹநங்களை யொழிய விட்டு;
வனமே மேவி - காட்டையே சேர்ந்து;

விளக்க உரை

என்னுடைய கொடுமையான ஆணையைக் கேட்டு ராச்சியத்தைத் துறந்து, யானை தேர், குதிரைகளையெல்லாம் துறந்து, வேல்போன்ற கண்ணுடைய மனைவியுடனும், தம்பியுடனும் எவ்வாறு நடந்தாயோ இராமனே எம்பெருமானே நான் என்ன செய்துவிட்டேன்! தசரதன் இறந்து போவதன் முன் சாசனமாக இருக்கிறது இந்தப் பாடல்:

English Translation

Heeding the foul words of your foul mother, you instantly set out, without any desire for this land. You sent back the caparisoned elephant and the horse-driven chariot and went into the forest barefooted with the sharp-eyed jeweled Sita and the younger brother Lakshmana following. O My Rama! How did you walk? O My Lord! What can I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்