- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
என்றாள் எம் இராமாவோ* உனைப் பயந்த* கைகேசி தன் சொற் கேட்டு*
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்* நன்மகனே உன்னை நானே* (2)
காணொளி
பதவுரை
விளக்க உரை
நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன் என்றது - கல்லைக்கடிக்க நன்றாய் சமைத்தாய் என்பது போன்ற விபரீதலக்ஷணை. இப்படி நான் உன் பக்கல் பெருந்தீங்கு செய்தவிடத்திலும் நீ சிறிதும் குணங்குறைந்தாயில்லை; உன் குணம் மேன்மேல் மிக்கு விளங்கப்பெற்றாய் நானே குணக்கேடுடையனாய் நின்றேன் என்பான் நன்மகனே என்று விளித்தான். புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க. ஈற்றடி இரக்கத்தை நன்கு விளக்கும். போகு - என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது, சிறுபான்மை உயிர்வரக் குற்றியலுகரம் கெடாது பொது விதியால் வகரவுடம்படு மெய் ஏற்று, போகுவென்றாள் என்று நின்றது. இவ்விடத்து இது செய்யுளோசை நோக்கியது. இராமாவோ - ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார். நன்னூலாரும் உன்னை நானிலத்தை ஆள்வித்தேன். இரண்டு செயப்படு பொருள் வந்த வினை என்பர் வடநூலார்.
English Translation
I had thought I would offer worship; seat you on lion throne and crown you king of the city today. Alas your mother Kaikeyi made you roam the forest instead! O My Rama! Assenting to her wishes, well did I bequeath my kingdom to you, my good son!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்