விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கன்னி நன் மா மதில் புடைசூழ்*  கணபுரத்து என் காகுத்தன்-
    தன் அடிமேல்*  தாலேலோ என்று உரைத்த*  தமிழ்மாலை* 
    கொல் நவிலும் வேல் வலவன்*  குடைக் குலசேகரன் சொன்ன* 
    பன்னிய நூல் பத்தும் வல்லார்*  பாங்காய பத்தர்களே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் காகுத்தன் தன் அடிமேல் - என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக;
தாலேலோ என்று உரைத்த - (கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு);
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் - கொலைத்தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த வல்லவரும் குடையையுடையவருமான குலசேகராழ்வார்;
கன்னி நல் மா மதிள் புடை சூழ் கணபுரத்து - சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே;
சொன்ன - அருளிச்செய்த;

விளக்க உரை

பாங்காய பக்தர்கள் = கௌஸல்யை திருத்தாயாராயிருந்து அநுபவித்தாற்போலவும், இவ்வாழ்வார் பக்தராயிருந்து அநுபவித்தாற்போலவும் பகவதநுபவத்தைப் பெறுவார்களென்க.

English Translation

This decad of Tamil songs by sharp spear-wielding King Kulasekara in the literary genre of Talattu was sung for the Kakutstha Lord Srirama, resident of high stone-walled Kannapuram. Those who master it will be good devotees of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்