- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தளை அவிழும் நறுங் குஞ்சித்* தயரதன்தன் குல மதலாய்*
வளைய ஒரு சிலையதனால்* மதில்-இலங்கை அழித்தவனே*
களை கழுநீர் மருங்கு அலரும்* கணபுரத்து என் கருமணியே*
இளையவர்கட்கு அருள் உடையாய்* இராகவனே தாலேலோ
காணொளி
பதவுரை
தளை அவிழும் நறுகுஞ்சி - கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியையுடையனான;
தயரதன் தன் - தசரத சக்ரவாத்தியினுடைய;
குலம் மதலாய் - சிறந்த திருக்குமாரனே;
ஒரு சிலை வளைய - ஒப்பற்ற வில்லானது வளைய;
அதனால் - அந்த வில்லாலே;
விளக்க உரை
இளையவர்கட்கு அருளுடையாய்! வாலியை வதைத்து இளையவனான ஸுக்ரீவனுக்கு அருள்புரிந்தான்; இராவணனை வளைத்து இளையவனான விபீஷணனுக்கு அருள்புரிந்தான் என்றிறே பெருமாளுக்கு ப்ரஸித்தி துர்ப்பலர்களாய் இளைத்திருப்பவர்கள் திறத்தில் அருள் செய்பவன் என்றுமாம்.
English Translation
Sleep, O Raghava, benevolent to younger brothers, Talelo! My Dark gem-Lord of Kannapuram where red water-lilies grow everywhere in thickets. Your dark fragrant coiffure keeps slipping. You are the emancipator of Dasaratha’s lineage. You destroyed the fortified Lanka city wielding a matchless bow.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்