- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மலையதனால் அணை கட்டி* மதில்-இலங்கை அழித்தவனே*
அலை கடலைக் கடைந்து* அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே*
கலை வலவர்தாம் வாழும்* கணபுரத்து என் கருமணியே*
சிலை வலவா சேவகனே* சீராமா தாலேலோ
காணொளி
பதவுரை
மலை அதனால் அணைகட்டி - மலைகளைக் கொண்டு ஸேதுபந்தனம் பண்ணி;
மதிள் இலங்கை அழித்தவனே - அரணையுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே;
அலை கடலை கடைந்து - அலையெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து;
அமரர்க்கு - தேவர்களுக்கு;
அமுது - அம்ருதத்தை;
விளக்க உரை
மலையால் அணை கட்டி இலங்கையை வென்றவனே, கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் அளித்தவனே, பலவேறு கலைகளில் வல்லவர்கள் வாழும் திருக்கண்ணபுரத்துப் பெருமானே, வில் திறமையுள்ளவனே, உலகத்தைக் காப்பவனே, இராமனே, தாலேலோ.
English Translation
Sleep, my brave bow-wielding Srirama, Talelo! O Dark-gem-Lord of Kannapuram, where master craftsmen reside! You made a bridge of rocks across the ocean and destroyed the fortified Lanka. You churned the Milk Ocean and gave ambrosia to the gods!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்