விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆலின் இலைப் பாலகனாய்*  அன்று உலகம் உண்டவனே* 
    வாலியைக் கொன்று அரசு*  இளைய வானரத்துக்கு அளித்தவனே* 
    காலின் மணி கரை அலைக்கும்*  கணபுரத்து என் கருமணியே* 
    ஆலி நகர்க்கு அதிபதியே*  அயோத்திமனே தாலேலோ  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முன்பு மஹாப்ரளயம் வந்தபோது;
ஆலின் இலை - ஓர் ஆலந்தளிரிலே;
பாலகன் ஆய் - குழந்தை வடிவாய்க் கொண்டு;
உலகம் உண்டவனே - லோகங்களையெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே;
வாலியை கொன்று - வாலியைக் கொலை செய்து;

விளக்க உரை

காலின்மணி கரையலைக்கும் = உள்ளுக்கிடக்கிற ரத்நங்களைக் காற்றாலே கரையிற்கொழிக்கு மென்னுதல், அன்றி, கால் என்று கால்வாய்களைச் சொல்லிற்றாய், கால்வாய்களிலுள்ள மணிகளைக் கொண்டு வந்து கரையிலே ஏறிடுமென்னுதல், ஆலிநகர்க் கதிபதியே என்றவிடத்தில் ஒரு வாலியைக் கொன்று ஒரு வாலி தன்னைத் துணையாகக் கொள்ளப்பெற்றதே என்று சாடூக்தி அருளிச் செய்வர் பெரியவாச்சான் பிள்ளை.

English Translation

Sleep, O King of Ayodya, Talelo! My dark-gem-Lord of kannapuram by the seashore, where winds cause waves that wash gems! You are the Lord of Tiruvali city, you are the child who swallowed the Universe and slept on a fig leaf. Your killed the monkey-king Vali and gave the kingdom to the younger brother Sugriva!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்