விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுற்றம் எல்லாம் பின் தொடரத்*  தொல் கானம் அடைந்தவனே* 
    அற்றவர்கட்கு அருமருந்தே*  அயோத்தி நகர்க்கு அதிபதியே* 
    கற்றவர்கள்தாம் வாழும்*  கணபுரத்து என் கருமணியே* 
    சிற்றவைதன் சொற் கொண்ட*  சீராமா தாலேலோ       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுற்றம் எல்லாம் பின் தொடர - எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்துவர;
தொல்கானம் அடைந்தவனே - புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே;
அற்றவர்கட்கு - உனக்கே அற்றுத்தீர்ந்த பரம பக்தர்களுக்கு;
அரு மருந்தே - ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே;
அயோத்தி நகர்க்கு அதிபதியே - அயோத்யா நகரத்திற்கு அரசனே;

விளக்க உரை

இராமன் காட்டுக் கெழுந்தருளுகையில் பிரஜைகள் மாத்திரமே பின் தொடர்ந்ததாக ஸ்ரீராமாயணத்திற் கூறாநிற்க; இங்கு சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல்கான மடைந்தவனே என்றருளிச்செய்தது சேர்வதெங்ஙனே? என்று எம்பெருமானார் திருவோலக்கத்தில் ப்ரஸ்தாவம் நிகழ, அதற்கு எம்பெருமானார் அருளிச் செய்தது - அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று சொன்ன எல்லாவடிமையும் செய்யு மிளையபெருமாள் கூடப்போகையாலே எல்லா பந்துக்களும் கூடப்பேனார்களாய்த்திறே என்றாம். இது ரஸோக்தியாக அருளிச் செய்தபடி.

English Translation

Sleep, O Srirama, Talelo! My dark gem-Lord of Kannapuram, where learned ones live! Obeying your stepmother’s command, you went into the deep forest followed by you kith and kin. O Precious medicine for devotees! You are the Emperor of Ayodya city.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்