விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொங்கு மலி கருங்குழலாள்*  கௌசலைதன் குல மதலாய்* 
    தங்கு பெரும் புகழ்ச்சனகன்*  திரு மருகா தாசரதீ* 
    கங்கையிலும் தீர்த்த மலி*  கணபுரத்து என் கருமணியே* 
    எங்கள் குலத்து இன்னமுதே*  இராகவனே தாலேலோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொங்குமலி கருகுழலாள் - பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலையுடையளான;
கௌசலை தன் - கௌஸல்யையினுடைய;
குலம் மதலாய் - சிறந்த பிள்ளையானவனே;
தங்கு பெருபுகழ் சனகன் - பொருந்திய மஹாகீர்த்தியையுடைய ஜநக மஹாராஜனுக்கு;
திரு மருகா - மாப்பிள்ளை யானவனே;

விளக்க உரை

எங்கள் குலத்து இன்னமுதே - ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல இக்குல சேகராழ்வாரும் ராஜவம்ஸத்திற் பிறந்தவராதலால் இங்ஙனமருளிச் செய்தாரென்க.

English Translation

Sleep, Sweet nectar, our tutelary deity, Raghava, Talelo, my Dark-gem-Lord of Kannapuram with rivers holier than the Ganga! You are the son of Dasaratha, son-in-law of Janaka -king of lasting fame. You are the emancipator of the lineage of fragrant dark-coiffured Queen Kousalya.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்