விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி*  வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க* 
    நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ*  சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய்* 
    கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய்*  கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து* 
    தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன்*  தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி - வஞ்சனை பொருந்திய நெஞ்சையுடையளான பூதனையானவள்;
வரண்டு - உடம்பு சோஷித்து;
எழ - (உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும்படியாகவும்;
நார்நரம்பு கரிந்து உக்க - நார்போன்ற நரம்புகள் கருகி உதிரும்படியாகவும (அவளுடைய);
முலை - விஷந்தீற்றிய கள்ள முலையை;

விளக்க உரை

(கடைப்பட்டேன் வெறிதே முலைசுமந்து) முலை நெறித்தபோது பாலுண்பதற்கு உன்னைப் பிள்ளையாகப் பெற்றுவைத்தும் நீ வேறு முலையைத்தேடி ஓடினமையால் என்முலை பயனற்றொழிகையாலே இம்முலை எனக்குப் புரைகுழல் போலே வீணாண சுமையாயிற்றென்கிறாள். (தஞ்சமேல் இத்யாதி) நான் முன்னமே உயிர்துறந்திருக்க வேண்டுமாயினும் எப்போதாயினும் உன்னைக் காணப்பெறவேணுமென்னுமாசையால் பிராணனை வலியப்பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறேனென்று கருத்து. (தக்கதே இத்யாதி) உனக்கு முலைப்பால் வேண்டும்போது என்னையும் விட்டு யசோதையையும் விட்டுப் பூதனையைப் பற்றினாயே! இதுனோ தகுதி? என்றவாறு

English Translation

As you sucked her poisoned breasts, the ogress with deceit in her heart shriveled her veins and bones popped out. O Dark cloud-hued Lord, you grew up counting Kamsa’s days. Alas, carrying these useless breasts, I have become the lowliest, with no hope of redemption; barely surviving. What a good mother you have got!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்