விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்*  முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும்* 
    எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு- நிலையும்*  வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்* 
    அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்*  அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும்* 
    தொழுகையும் இவை கண்ட அசோதை*  தொல்லை-இன்பத்து இறுதி கண்டாளே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெண்ணெய் முழுதும் அளைந்து - வெண்ணெய் குடத்திலுள்ளவளவும கையைவிட்டு (அளைந்து);
தொட்டு உண்ணும் - எடுத்து உண்கிற;
இள முகிழ் தாமரை சிறுகையும் - இளந்தளிரையும் தாமரையையும் போன்ற சிறிய திருக்கைகளும்;
எழில் கொள்தாம்பு கொண்டு அடிப்பதற்கு - அழகிய தாம்பாலெ அடிக்க (அதற்கு);
எள்கு நிலையும் - அஞ்சிநிற்கும் நிலையும்;

விளக்க உரை

“தாரார்தடந்தோள்க ளுள்ளளவுங் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி” திலே புகவிட்டு அளைவனாதலால் “ஆழவமுக்கி முகக்கினு மாழ்கடல்நீர், நாழிமுகவாது நானாழி” என்கிற ஸாமாந்யமான செய்தியையும் அறியாதே அவிவேகந் தோற்றச் செய்த காரியங்களைக் காணப் பெற்றிலேன், என்கிறாள் முதலடியில். “அடிப்பதற்கு” - அடிப்ப, அதற்கு எனப் பிரித்துரைத்தலுமாம்; தொகுத்தல். கண்ணன் தயிரைக் களவாடி உண்ணும்போது யசோதை கண்டு தடியும் தாம்புமெடுத்தவாறே “தாயெடுத்த சிறு கோலுக் குளைந்தோடித், தயிருண்டவாய் துடைத்த மைந்தன்” என்றபடி அந்தத் தயிரை மறைப்பதாகத் துடைத்துக்கொள்ள ஆரம்பித்து வாய்நிறையச் சுற்றிலும் பூசிக்கொள்வன்; பிறகு யசோதையால் அடிபட்டு அழுவன், அஞ்சினாற்போல் நோக்குவன், வாய் துடிக்கும்படி விக்கி விக்கி அழுவன், கடைசியாக அஞ்ஜலி பண்ணுவன்; ஆக இக்கோலங்களையெல்லாம் கண்டு ஆநந்தத்தின் எல்லையிலே நிற்கும்படியான பாக்கியம் சோதைக்குக் கிடைத்ததேயன்றிச் சுமந்துபெற்ற எனக்குக் கிடைக்காமற் போயிற்றே! என்று வருந்துகின்றாள். (தொல்லையின்பத்திறுதி கண்டாளே.) “****” என்ற உபநிஷத்தின்படி - தொல்லையின்பம் என்று எம்பெருமானாகிய கண்ணனையே சொல்லிற்றாய், அபரிச்சிந்நனான அவனை யசோதை பரிச்சிந்நனாக்கி விட்டாள! என்றும் உரைப்பதுமொன்று. அழுகையும் தொழுகையும் பரிச்சிந்நர்களுடைய க்ருத்யமிறே. (பரிச்சிந்நர்- ஓரளவு பட்டவர்.

English Translation

Eating up all the butter with your wee lotus-like tender hands, then seeing the coir rope being shown for beating, you cringed in fear, your red lips and little mouth, - smeared with white curd, twisted. The look of terror in your eyes, your crying face, your pleading hands. -all this the good Yasoda alone sees, to the limit of her limitless joy.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்