- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு இருமுலையும் முறைமுறையா யேங்கி யிருந்துணாயே“ (பெரியாழ்வார் திருமொழி என்று யசோதை கண்ணனை வேண்டிக்கொண்டு அவ்வாறே பெற்றனள் என்பதை அறிந்த தேவகி, அப்பாக்கியம் தனக்கு நேராமற் போனது பற்றி வருந்துகின்றாள். நீ என் குடங்கையில் சாய்ந்துகொண்டு ஒருகையாலே (எனது) ஒரு முலைக்காம்பை நெருடிக்கொண்டும் மற்றொரு முலையைத் திருப்பவளத்தில் வைத்துக்கொண்டும் நடுநடுவே என்னை இனிதாக நோக்கும் நோக்கத்தை அநியாயமாய் இழந்தொழிந்தேனே! என்கிறாள். குழகன் - எல்லாரோடும் கலந்து பரிமாறுவதையே இயல்வாக வுடையவன் கோமளம்-ஸுகுமாரம். குடங்கை என்பதற்கு “ உள்ளங்கை” என்று சிலர் பொருள் கூறுவர்; அப்பொருள் உண்டாயினும் இவ்விடத்திற்கு அது பொருளல்ல; பெண் பிள்ளைகள் குழந்தைகட்கு முலை கொடுக்கும்போது தமது முழங்கையிலே குழந்தையை வைத்துக்கொண்டு முலை கொடுப்பது வழக்கமாதலால் இங்குக் குடங்கை என்பதற்கு “ முழங்கை” என்று பொருள் கொள்ளுவதற்கு தகுதி “ எட்டுணைப்போது என் குடங்காலிருக்க கில்லாள்” இத்யாதி இடங்களில் குடங்கால் என்பதற்கு ‘முழங்கால்’ என்று பொருள் கொள்ள வேண்டுமாற்றிக் “குடங்கையில் மண் கொண்டளந்து” இத்யாதி ஸ்தலங்களில் ‘உள்ளங்கை’ என்ற பொருட்குப் பாதகமில்லை யென்க. நெருடா, அருளா - ‘ செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; நெருடி, அருளி என்றபடி.
English Translation
O Govinda, adorable tender child of minel with hands of exceeding beauty and hue, like freshly sporouted tender red leaves, you would have teased the teat of my one breast while sucking on the other, showing me a sweet tender smile in between, seeing my face with your soft beautiful eyes while I held you in my embracel alas, all that is lost forever!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்