விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக் கடைக்கணித்து*  ஆங்கே ஒருத்திதன்பால்
    மருவி மனம் வைத்து*  மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து*
    புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப் புணர்தி*  அவளுக்கும் மெய்யன் அல்லை*
    மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே*  வளர்கின்றதால் உன்தன் மாயை தானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒருத்தி தன்னை - ஒரு பெண் பிள்ளையை;
கடைக் கணித்து - கடைக்கண்ணால் பார்த்துவிட்டு;
ஆங்கே - அப்படியிருக்கச் செய்தே;
ஒருத்திதன் பால் மனம் மருவி வைத்து - வேறொரு பெண்பிள்ளை யிடத்தில் மனதைப் பொருந்தச் செய்து, (அவளையும் விட்டு);
மற்று ஒருத்திக்கு - வேறொரு பெண்ணிடத்தில்;

விளக்க உரை

இங்கே “மருதிறுத்தாய்! ” என விளித்ததனால், நீ பருவம் நிரம்புவதற்கு முன்னமே தீண்டினாரைக் கொன்றவனாதலால் உன்னைத் தீண்ட நான் அஞ்சா நின்றேன் காண் என்று குறிப்பிட்டவாறு மென்ப.

English Translation

You gave sidelong glances to a flower-coiffured dame; at the same time, you let your heart wander to another dame; you gave word to yet another and misled an innocent other one, then stood embracing a coiffured maiden elsewhere. O Lord who broke the Arjuna trees! As you grow, your tricks also grow with you, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்