விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி*  கீழை அகத்துத் தயிர் கடையக்
    கண்டு*  ஒல்லை நானும் கடைவன் என்று*  கள்ள-விழியை விழித்துப் புக்கு*
    வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ*  வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப*
    தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்*  தாமோதரா மெய் அறிவன் நானே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தமோதரா - கண்ணபிரானே;
கீழை அகத்து - (என் வீட்டுக்குக்) கீழண்டை வீட்டில்;
கெண்டை ஒண்கண் - கயல் போன்று அழகிய கண்களை யுடையளான;
மடவாள் ஒருத்தி - ஒரு பெண்ணானவள்;
தயிர் கடைய கண்டு - (தனியே) தயிர்கடையா நிற்பதைக் கண்டு;

விளக்க உரை

வேறொரு ஆய்ச்சியின் வார்த்தை இது. என் அகத்திற்குக் கீழண்டை அகத்திலிருப்பாளொரு பெண் பிள்ளையானவள் தனியே யிருந்து தயிர் கடையா நிற்கையில் அது கண்ட நீ அவளருகில் ஓடிச் சென்று புகுந்து ”அம்மா! நீ தனியாகத் தயிர் கடைந்தால் ஒரு காலும் வெண்ணெய் புறப்படமாட்டாது நானும் ஒருதலைப் பற்றிக் கடைந்தால் தான் விரைவில் வெண்ணெய் காணும் ” என்று வாயாற் சொல்லி, உள்ளே வேற்று நினைவு இருக்கும் படி தோன்றத் திருட்டு விழி விழித்து, மயிர் முடி அவிழ்ந்து அலையும் படியாகவும், தாமரையிலே முத்துப் படிந்தாற் போலே ஒளி பொருந்திய முகம் வேர்க்கும் படியாகவும், அதரம் துடிக்கும் படியாகவும் அவளோடே கூடி நீ தயிர்கடைந்த வரலாறு எனக்குத் தெரியுமப்பா! என்கிறாள். ‘இன்னமும் அங்கேயே தயிர் கடையப்போ; இங்கே உனக்கென்ன பணி!’ என்ற ஊடல் உள்ளுறை.

English Translation

In the Eastside house, where a fish-eyed dame sat churning the curds, you entered with a furtive look in your eyes saying, “Here, let me also chum!”. Her coiffured hair unfurled, fell and swayed, her bright face glowed with beads of sweat, and her red lips began to twitch as you churned white curds with her. O Damodara, I know what really happened.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்