விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்*  எனைப் பலர் உள்ள இவ் ஊரில்*  உன்தன்
    மார்வு தழுவுதற்கு*  ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு*
    கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக்*  கூசி நடுங்கி யமுனை யாற்றில்* 
    வார் மணற் குன்றிற் புலர நின்றேன்*  வாசுதேவா உன் வரவு பார்த்தே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாசுதேவா - கண்ணபிரானே;
ஏர் மலர் பூ குழல் ஆயர்மாதர் - அழகிய புஷ்பங்களை அணிந்த பரிமளம் மிக்க கூந்தலையுடைய  இடைப் பெண்கள்;
எனை பலர்  உள்ள - எத்தனையோ பேர்களிருக்கப் பெற்ற;
இ ஊரில் - இந்தத் திருவாய்ப்பாடியில்;
உன்தன் மார்வு தழுவுதற்கு - உன்னுடைய மார்வோடு அணைவதற்கு;

விளக்க உரை

உரை:1

கண்ணபிரான் ஒரு பெண் பிள்ளையை நோக்கி ‘நீ யமுனையாற்றின் மணற்குன்றிலே போய் நில்லு, நான் அங்கே வருகிறேன்’ என்று சொல்லி விட, அப்படியே அவள் அங்கே போய் விடியுமளவும் நின்று அவன் வரக்காணாமல் வருத்தத்தொடு மீண்டு வந்து, மற்றொரு நாள் அவனைக் கண்ட போது ப்ரணய ரோஷந் தோற்றச் சொல்லுகிற பாசுரமாயிருக்கிறது இப்பாட்டு. அநியாயமாய் உன் பொய்யைக் கேட்டு மோசம் போனே னென்கிறான் ( வாசு தேவா !) கனவிலும் பொய் சொல்லியறியாத வஸுதேவர் வயிற்றிற் பிறந்த நீயும் தந்தையை ஒத்திருப்பாயென்று நம்பிக் கேட்டேன் காண்! என்ற குறிப்பு - புலர்தல் - பொழுது விடிதல்.

உரை:2

வாசுதேவா மணம் மிகுந்த பூக்களைச் சூடிய இடைப் பெண்கள் பலர் வாழும் இந்த ஊரில், நான் உன் மார்பைத் தழுவ ஆசைப்படவில்லை என்றாலும், நீ பொய்வார்த்தை கூறி என்னை ஏமாற்றுகிறாயே. மழை பெய்தது போலப் பனி கொட்டுகிற காலத்தில் குளிரில் அகப்பட்டு நடுங்கியவாறு மணல் மேடு உள்ள யமுனை ஆற்றங்கரையில் உன் வரவை எதிர் பார்த்துப் பொழுது விடியும் வரை இரவெல்லாம் காத்துக்கொண்டிருந்தேனே என்கிறார்.

English Translation

O Vasudeva! With so many coiffured cowherd-dames living in this town, I knew full well not to nurture de-sires for the embrace of your chest. Still like a fool, I heard your lies and waited for you on the sands of the Yamuna all night, shivering in the frost and pierced by the wind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்