விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாளால் அறுத்துச் சுடினும்*  மருத்துவன்பால்*
    மாளாத காதல்*  நோயாளன் போல் மாயத்தால்*
    மீளாத் துயர் தரினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ
    ஆளா உனது அருளே*  பார்ப்பன் அடியேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறுத்துவாளால் - (வைத்தியன்) கத்தியைக் கொண்டு அறுத்தலும், (ஊசியைக் காய்ச்சிச்);
சுடினும் - சூடு போடுதலுஞ் செய்தாலும்;
மருத்துவன் பால் மாளாத காதல் - அவ்வைத்தியனிடத்து நீங்காத அன்புடைய;
நோயாளன் போல் - நோயாளியைப் போல;
மாயத்தால் - (உன்) மாயையினால்;

விளக்க உரை

நீயே எனக்கு ஸர்வவிதாக்ஷகன் என்று நான் துணிந்த பின்பு, நீ எனக்கு எவ்வளவு துன்பங்களை இவ்விபூதியிலே தந்தருளினாலும் அவற்றையெல்லாம் நான் நன்மையாகவே கருதி மிக்க நன்றியறிவு பாராட்டி மேன்மேலும் அன்பு செய்து வருவேனேயன்றி உன்னைச் சிறிதும் குறை கூறமாட்டேன் என்பதை உபமாநத்தால் விளக்கினார்.

English Translation

O Lord of Vittuvakkodu, heaping endless misery through your Maya! I still seek the grace of service to your feet alone; just as even if the surgeon cuts and burns the flesh, the patient has nothing but boundless love for him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்