- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மன்னிய தண் சாரல்* வட வேங்கடத்தான்தன்*
பொன் இயலும் சேவடிகள்* காண்பான் புரிந்து இறைஞ்சிக்*
கொல் நவிலும் கூர்வேற்* குலசேகரன் சொன்ன*
பன்னிய நூற் தமிழ்-வல்லார்* பாங்காய பத்தர்களே (2)
காணொளி
பதவுரை
கொல் நவிலும் - (பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற;
கூர் வேல் - கூர்மையான வேலாயுதத்தையுடைய;
குலசேகரன் - குலசேகராழ்வார்;
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன் - நிலை பெற்ற குளிர்ச்சியுள்ள சாரல்களையுடைய வடவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கிற பெருமானது;
பொன் இயலும் சே அடிகள் - பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை;
விளக்க உரை
என்றென்றும் குளிர்ந்த சாரல் வீசும் வடவேங்கடத்தை உடைய எம்பெருமானின் பொன்னைப் போன்ற செவ்விய திருவடிகளைக் காண்பதற்கு இறைஞ்சி எல்லா எதிரிகளையும் வெல்லும் கூரிய வேலினைக் கைக் கொண்ட குலசேகரன் சொன்ன இந்தத் தமிழ்ப்பாடல்களை சொல்லி மனத்தில் வைத்தவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள் ஆவார்கள்.
English Translation
This decad of pure Tamil songs were sung by sword-as-sharp-as-death Kulasekara, desirous of seeing the Venkatam Lord’s golden feet. Those who master it will be devotees, dear to the Lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்