விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வான் ஆளும் மா மதி போல்*  வெண் குடைக்கீழ்*  மன்னவர்தம்
    கோன் ஆகி வீற்றிருந்து*  கொண்டாடும் செல்வு அறியேன்*
    தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கட மலைமேல்*
    கானாறாய்ப் பாயும்*  கருத்து உடையேன் ஆவேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வான் ஆளும் மா மதி போல் - ஆகாயத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு விளங்குகின்ற பூரண சந்திரன் போன்ற;
வெள் குடை கீழ் - ஒற்றை வெண்கொற்றக் குடையின் கீழ்;
மன்னவர் தம் சோன் ஆகி வீற்றிருந்து - ராஜாதி ராஜனாய்ப்  பெருமை தோன்ற இருந்து;
கொண்டாடும் - (அனைவராலும்) கொண்டாடப் படுவதற்குக் காரணமான;
செல்வு - செல்வத்தை;

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாட்டில், பொற்குவடாக வேணுமென்று பாரித்தார்; சிறிது யோசித்தவாறே, அதுதன்னிலும் ஓர் அநுபபத்தி தோன்றிற்று: அதாவது - புதிதாகத் தேவாலயங்கள் நாட்டுபவர்கள் சிலாமியமாக மூலவிக்ரகம் ஏறியருளப் பண்ணுவதற்காக மலை முகடுகளினின்று பெரும் பெரும் பாறைகளை உடைத்துக்கொண்டு போகிற வழக்கம் உளதாதலால் அதுவும் ஏற்றதல்லவென்று தோன்றிற்று. தோன்றவே, அங்ஙனமின்றி, ஒருவராலும் பெயர்த்துக்கொண்டு போகக் கூடாததான கானாறாகப் பிறக்க வேணுமென்று அபேஷிக்கிறார் இதில்.

உரை:2

வானத்தில் இருக்கும் விண்மீன்களையெல்லாம் தன் ஒளியால் வென்று வானத்தை ஆளும் முழுமதியைப் போல் வெண்கொற்றக் குடையின் கீழ் அரசாளும் மன்னவர்களை எல்லாம் திறத்தால் வென்று அவர்கள் தலைவனாக வீற்றிருக்கும் பெருமையையும் நான் வேண்டேன். தேன் நிரம்பும் பூக்கள் உடைய சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் ஒரு காட்டாறாய் பாயும் எண்ணத்தைக் கொண்டவன் ஆவேனே.

English Translation

I do not wish to rule over kings as a monarch protected by Moon-like parasols. I only wish to run like a wild stream in Venkatam, amid groves of nectar-dripping flowers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்