விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊன் ஏறு செல்வத்து*  உடற்பிறவி யான் வேண்டேன்*
    ஆனேறு ஏழ் வென்றான்*  அடிமைத் திறம் அல்லால்*
    கூன் ஏறு சங்கம் இடத்தான்*  தன் வேங்கடத்துக்*
    கோனேரி வாழும்*  குருகாய்ப் பிறப்பேனே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆன் ஏறு ஏழ் வென்றான் - நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை ஜயித்தவனான எம்பெருமானுக்கு;
அடிமை திறம் அல்லால் - கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுவதல்லாமல்;
ஊன் ஏறு செல் வத்து உடல் பிறவி - நாளுக்கு நாள் மாம்சம் வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தையுடைய இம்மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை;
யான் வேண்டேன் - (விவேகம் பெற்ற) நான் (இனி) விரும்பமாட்டே;

விளக்க உரை

உரை:1

திருவேங்கடமலையில் வாழ்ச்சி கிடைக்கப் பெற்றால், விவேகமற்றதொரு திர்யக் ஜாதியாகப் பிறப்பதும், அடியேனுக்குப் பரமோத்தேச்யமாகும். அத்திருமலை வாழ்ச்சிக்கு விரோதியான இம்மானிட வுடற்பிறவி எனக்கு ஒரு நாளும் வேண்டா, என்கிறார். அடிமைத் திறமாவது - திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப் பல படியாலும் ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்யும் வகை. கோன் ஏரி - ஸ்வாமி புஷ்கரிணி. இப்பெயர் ஸர்வலொக நிர்வாஹகனான எம்பெருமானுக்கு மிகவும் பிரியமான தடாகமெனப் பொருள்படும். அன்றி, எல்லாத் தீர்த்தங்களிலும் தலைமை பெற்ற தீர்த்தமென்றும் பொருளாகலாம். இந்த ஸ்வாமி புஷ்கரிணியின் சிறப்பு. வராஹபுராணம் முதலியவற்றின் பாக்கக் காணத்தக்கது. திருமலையில் ஸந்நிதிக்கு அருகிலுள்ள பிரதானமாக திவ்யதீர்த்தம்.

உரை:2

நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.

English Translation

I do not wish to enjoy the pain -ridden life that follows birth, if I cannot serve the feet of the lord in Venkatam, who stands holding a coiled conch on his left. May I be born as a penitent stork in the Swami Pushkarini tank there!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்