விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேயரே*  எனக்கு யாவரும்*  யானும் ஓர்
    பேயனே*  எவர்க்கும் இது பேசி என்*
    ஆயனே!*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
    பேயனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யாவரும் - இவ்வுலகத்தாரடங்கலும்;
எனக்கு - என் வரைக்கும்;
பேயரே - பைத்தியக்காரர்கள் தான்;
யானும் - (அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும்;
எவர்க்கும் - எவர்களுக்கும்;

விளக்க உரை

(கோமணம் கட்டாத ஊரில் கோமணம் கட்டுவானொருவன் பைத்தியக்காரன் போல் பரிஹஸிக்கத்தக்கவனாவன்) என்ற பழமொழியின்படி-லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே! என்று ஆழ்வாரை நோக்கிச் சிலர் கூற, அவர்களுக்கு விடைகூறுகின்ற பாசுரமிது.

English Translation

To the world I am mad. To me the world is mad. Alas! What use dilating on this? “O Cowherd-Lord!”, I call, mad with love for the Lord of Arangam, My master.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்