விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தோடு உலா மலர்-மங்கை தோளிணை தோய்ந்ததும்*  சுடர்-வாளியால்* 
    நீடு மா மரம் செற்றதும்*  நிரை மேய்த்ததும் இவையே நினைந்து*
    ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும்*  தொண்டர் அடிப்-பொடி 
    ஆட நாம் பெறில்*  கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை*  என் ஆவதே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தோடு உலாம் மலர் மங்கை - இதழ்கள் மிக்கிருந்துள்ள தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டியினது;
தோள் இணை தோய்ந்ததும் - திருத்தோள்களோடு அணையவ முக்கிக் கட்டிக் கொண்டதும்;
சுடர் வாளியால் - புகரையுடைய அம்பினால்;
நீடு மா மரம் செற்றதும் - நீண்ட ஸப்தஸால வருக்ஷங்களைத் துளை செய்து தள்ளியதும்;
நிரை மேய்த்ததும் - இப்படிப்பட்ட பகவச்சரிதமங்களையே அநுஸந்தி;

விளக்க உரை

பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபூண்டு, உண்டிராக் கிடக்கும்போது முடலுக்கே கரைந்து நைந்து” என்றபடி அல்லும் பகலும் ஸரம்ஸாரிக சிந்தனைகளே நிகழும் லௌகிகர்படி யில்லாமல் எம்பெருமானுடைய திவ்யசரிதங்களையே மாறி மாறி அநுஸந்தித்து, அவ்வநுஸந்தாநத்தாற் பிறந்த உகப்பு உள்ளடங்காமல் பகந்நாமங்களை வாய்விட்டுக் கதறுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்ரீபாததூளிகளில் அவகாஹிக்கப்பெற்றால், பிறகு ‘கங்கையில் நீராடவேணும்’ என்கிற விருப்பமும் வியர்த்தமேயாம் என்கிறார்.

English Translation

The Lord who extends his arms to embrace the lotus-dame-Lakshmi shot a hot arrow through seven trees in a row, and grazed cows. Devotees constantly dwell upon him, sing and dance and call, “O Ranga!” If one could only bathe in the dust of their holy feet, why cherish a desire for holy dip in the Ganga?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்