விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய*  மண்-உலகில் மனிசர் உய்ய*
    துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர*  அகம் மகிழும் தொண்டர் வாழ *
    அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்*  அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
    இன்ப மிகு பெருங் குழுவு கண்டு*   யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல் - (நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும;
பெரு - பெருமை தங்கியதுமான;
வானகம் - ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள்;
உய்ய - உஜ்ஜீவிக்கவும்;
அமரர் - தேவர்கள்;

விளக்க உரை

தேவர்களும் மநுஷயர்களும் விலக்ஷண ஸ்ரீவைஷ்ணவர்களும் வாழவும் பாவங்கள் நீங்கிப் புண்ணியங்கள் செழிக்கவுமாகக் குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி வடதிசை பின்புகாட்டித் தென்திசை இலங்கை பாகவதர்களையுடைய கோஷ்டியிலே சேர்ந்து அடியேனும் அவர்களைப் போலே திளைத்து வாழ்வது என்றோ! என்கிறார்.

English Translation

The Lord reclines in Arangam with his benign gaze pointed South, providing elevation of spirit to the big sky and all the celestials in it, as well as the Earth and all the earthlings in it, dispersing their pall of grief, increasing their pleasure unmixed with fatigue, giving sustenance to devotees with love in their hearts. Bands of exuberant devotees throng in the courtyard; when will top be one of them?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்